அதிகாரத்துவத்துக்கு எதிராக போராடுவோம்! பாகம் - 2.

4. கர்வம் தலைக்கேறி தாங்கள் பெரிய கொம்பு, மிக உயர்ந்த பேராற்றல் மிக்கவர் என்று எண்ணிக்கொண்டு செயல்படும் அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் மக்களின் மீது அதிகாரம் செய்துகொண்டு, அதைப் பார்த்து மற்றவர்கள் தம்மிடம் பணிந்து பயபக்தியுடன் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் பொறுக்கமுடியாத திமிர் பிடித்தவர்களாகவும், மற்றவர்களைத் தமக்குச் சமமாக மதிக்காதவர்களாகவும் உள்ளனர். மேலும் அவர்கள் அடிக்கடி மக்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றனர்; அல்லது காட்டுத்தனமாகக் கூச்சலிட்டு மக்களை இழிவுபடுத்துகின்றனர். இவ்வகை அதிகாரிகள் நிலப்பிரபுத்துவ மேலாண்மையாளரைப் போலவே நடந்து கொள்கின்றனர்.

5. அறியாமையும் தகுதியின்மையும் கொண்டவர் களாக இருந்தபோதிலும், சில அதிகாரிகள் தங்களின்கீழ் பணிபுரிபவர்களிடம் அறிவுரையோ, ஆலோசனையோ கேட்பது தங்கள் கௌரவத்துக்கு இழுக்கு என்று எண்ணுகின்றனர். பீற்றிக் கொள்வது, ஊதிப் பெருக்க வைத்துக் காட்டுவது ஆகியவற்றால் பீடிக்கப்பட்ட இவாகள், மத்திய நிர்வாக அமைப்புகளுக்கு தவறான அறிக்கைகளை அடிக்கடி அனுப்புகின்றனர். இவர்கள் தவறான அல்லது திசை திருப்பும் அறிவிப்புகளை-அறிக்கைகளைஉருவாக்குவதோடு தங்கள் தவறுகளைப் பூசி மெழுகுகின்றனர். எல்லா பெருமைகளும் தங்களுக்கே என்று உரிமை பாராட்டும் இவர்கள், எல்லா தவறுகளுக்கும் மற்றவர்கள்மீது பழி போடுகின்றனர். நேர்மையின்மையே இந்தவகை அதிகாரிகளின் அடையாளச் சின்னம்.

6. பொறுப்புகளை ஏற்க அஞ்சி, தமக்கு ஒதுக்கப்படும் எல்லா வேலைகளிலும் பேரம் பேசுவது, எல்லா வகையான சாக்குபோக்குகளையும் சொல்லி வேலைகளைத் தட்டிக் கழிக்கும் அதிகாரிகள் இன்னொரு வகை ஆவர். மன உறுதியின்றியும் காலங்கடத்தி தாமதப்படுத்தும் நோக்குடனும் செயல்படும் இவர்கள், அடிக்கடி பலவேலைகளை முடக்கி வைத்துவிடுகின்றனர். மேலும், இவர்கள் உணர்ச்சியற்று மரத்துப் போனவர்களாகவும் வேலை

11. அடுத்து, நிறுவனமயமாக்கப்பட்ட அதிகாரத்துவம். பல அடுக்குகளாகவும் ஆட்களால் நிரம்பி வழியும் பிரிவுகளும் கொண்ட நிறுவனங்களில் இந்தவகை அதிகாரத்துவம் காணப்படுகிறது. இங்கே ஆட்கள் காரணமின்றியும் குறிக்கோள் இன்றியும் இங்குமங்கும் பரபரப்பாக அலைகிறார்கள். இத்தகைய செயல்பாட்டினால் நிதி விரயமும் பொருள் நட்டமும் ஏற்படுவது மட்டுமின்றி. நிறுவனத்தின் இயல்பான செயல்பாடே தடுக்கப்படுகிறது.

அதிகமான ஆட்கள் நிரம்பி வழிந்து தேவையற்ற பிரிவுகளை உள்ளடக்கி உள்ள ஒரு நிறுவனத்தில் தலைமை தாங்கி வழிநடத்தும் முன்னணியாளர்கள் எவ்வளவுதான் திறமையாகவும் அறிவுக் கூர்மையுடனும் இருந்தபோதிலும், அங்கே அதிகாரத்துவம் பீடிக்கும். காரணம் என்னவெனில், ஒரு நிறுவனம் தேவைக்கதிகமான ஆட்களையும் விரிவான நிர்வாகப் பிரிவுகளையும் கொண்டதாக மாறும்போது. பலர் வெட்டி அரட்டைகளில் பொழுதை வீணடிக்கின்றனர். பல நிர்வாகப் பிரிவு ஊழியர்களைக் கடந்து செல்ல வேண்டியிருப்பதால், வேலைகள் உரிய காலத்தில் நிறைவேறுவதில்லை. இதற்கு மாறாக நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட ஒரு சிறிய அமைப்பில், சுருக்கமான செறிவான பரிசிலனையுடன் செயலுக்கான முடிவை விரைவாக எடுக்க முடியும்.

12. சில அதிகாரிகள் தொடர்ந்து வழிகாட்டுதல்களைக் கோருகின்றனர்; ஆனால் அவற்றைப் படிப்பதே கிடையாது. தமக்குக் கீழுள்ள துறைகளிடம் பல அறிக்கைகளை அனுப்புமாறு அறைகூவிக் கொண்டே இருப்பர்: ஆனால் அவ்வறிக்கைகளின்மீது கருத்துச் சொல்வதே கிடையாது. பல புள்ளியியல் விபரங்களையும் செய்திக் குறிப்புகளையும் கையில் வைத்திருப்பர்; ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதே கிடையாது. அவர்கள் பல கூட்டங்களை நடத்துவார்கள்; ஆனால் கூட்டத்தில் பங்கேற்பவர்களிடம் மேலிடத்தின் வழிகாட்டுதல்கள், உத்தரவுகளைத் தெரிவிப்பது கிடையாது. மக்களுடன் பல வழிகளில் தொடர்புகள் வைத்திருப்பர்; ஆனால் பிரச்சினைகளை அவர்களுடன் பேசி விவாதிப்பது கிடை யாது. இவர்கள் சிவப்பு நாடாத்தனமும் சடங்குத்தன மான விதிமுறைவாதமும் பீடிக்கப்பட்ட அதிகார வகை யினராவர்.

தொடரும்…..

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.