Posts

Showing posts from June, 2021

பெட்ரொல், டீசல் விலை உயர்வு : பா.ஜ.க மோடி தேர்தல் வாக்குறுதியாக சொன்னது என்ன? ஏழு ஆண்டுகளில் செய்ததும் என்ன?

Image
  ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க தேர்தல் நேரத்தில் பிரதம வேட்பாளர் மோடி முதல், பா.ஜ.க தொகுதி வேட்பாளர் வரை மக்களின் வாழ்க்கை சுமையை குறைப்போம். குறிப்பாக பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்போம் என வாக்களித்தனர். தேர்தல் நேரத்தில் ”பெட்ரோல் விலை பதறவைக்கிறது. சிலிண்டர் விலை கவலைக்குள்ளாக்குகிறது” என பாஜக பிரமுகர் தமிழிசை ஒரு காணொளியில் பொங்கி பொங்கி பேசியது அனைவருக்கும் நினைவிருக்கும். போன தேர்தலில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கிறேன் என சொன்ன வாக்குறுதியை பிஜேபி நிறைவேற்றவில்லை. ஆகையால், இந்த தேர்தலில் பிஜேபிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யமாட்டேன் என பாபா ராம்தேவ் சொன்னது எல்லாம் நினைவில் வந்து போகிறது. இப்படி வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள், கடந்த ஆறரை ஆண்டுகளில் (டிசம்பர் 2020 வரை) பெட்ரொல், டீசல், இயற்கை எரிவாய் மூலம் மக்களிடம் அடித்த கொள்ளை மட்டும் 19 லட்சம் கோடி. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் வருமானத்தின் அளவு 2014-15ல் 5.4% தான் அதாவது ரூ. 74,158 கோடி. ஆனால், 2020 – 21 ஆண்டில் 12.2% யாக ரூ. 2.95 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. ஜூன் 2014ல் கச்ச

பெட்ரொல், டீசலை ஜி.எஸ்.டியில் சேர்ப்பதில் என்ன பிரச்சனை? யாருக்கு லாபம்? யாருக்கு இழப்பு?

Image
ஒன்றிய அரசு ஜூலை 2017ல் ”ஒரே தேசம்! ஒரே வரி” என பந்தாவாக முழங்கி ஜி.எஸ்.டியை அவசரகதியில் அறிமுகப்படுத்தியது. ஒன்றிய அரசிற்கே ஜி.எஸ்.டியில் தெளிவில்லாத பொழுது, மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டியில் தெளிவில்லை என்பது இயல்பானது. அப்போதே, ஜி.எஸ்.டி வரித் திட்டத்தை அமுல்படுத்தினால், உற்பத்தியில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் வரி இழப்பால் பாதிக்கப்படும் என்றார்கள் வரி ஆலோசகர்கள். அது உண்மையும் கூட! வரி இழப்பு ஒரு பக்கம் என்றாலும், ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி வசூலித்த பணத்தை மாநிலங்களுக்கு உரிய காலத்தில் தருவதில்லை. இழுத்தடிக்கிறார்கள். மாநில அரசுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துத்தான் தங்கள் பங்குகளை பெறுகிறார்கள். அதை வாங்கித்தான் மாநிலத்தில் அவர்களது திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். இதில் ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் பெட்ரோல், டீசல், எரிவாயுவை சேர்ப்பதில் ஒன்றிய அரசு “நாங்க ஒண்ணும் எதிர்க்கலை. மாநிலங்கள் தங்களுக்கு வரி வருவாய் குறையும் என்று தான் எதிர்க்கின்றன” என நல்லபிள்ளை போல பேசுகிறார்கள். ஏனென்றால், ஒன்றிய அரசு பெட்ரொல், டீசல், எரிவாயுவை ஜி.எஸ்.டியில் சேர்த்து, ஒன்றிய அரசிற்க

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச விலை உயர்வு தான் காரணமா?

Image
பெட்ரொல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் சமீபத்திய சர்வதேச அளவில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு தான் என மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு மந்திரி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். தினத்தந்தியில் இன்று (08/06/2021) செய்தி வந்துள்ளது. வழக்கமாக பிஜேபி மந்திரிகள் நிலைமையை சமாளிக்க வாயில் வந்ததை அடித்துவிடும் பொய்களில் ஒன்றாகத்தான் இருக்கிறது. கச்சா பேரல் விலையும்/ தில்லி விலையில் ஒரு லிட்டர் விலை 2012 ல் $94.05 65.60 2014 ல் $93.17 72.24 2016 ல் $43.29 59.68 2018 ல் $65.23 75.55 2020 ல் $39.68 79.76 2021 ல் $60.68 94.69 2012ல் ஒரு பேரல் விலை $94 டாலர் விற்ற பொழுது, தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 65 சொச்சம் தான். ஆனால், இப்பொழுது கச்சா பேரல் விலை 60 டாலர் தான். ஆனால் விலையோ ரூ. 95ஐ தாண்டிவிட்டது! பிஜேபி ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல், இயற்கை வாயுவில் அடிக்கும் கொள்ளை இருக்கிறதே, மிகப்பெரியது! பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டியில் சேர்க்க நாங்கள் தயார். ஜி.எஸ்.டி கவுன்சில் தான் தயாரில்லை எனவும் மத்திய மந்திரி பேட்டிக்கொடுத்துள்ளார். இதில் உள்ள அரசியல் என்ன என்பதை அடுத

பெட்ரோல், டீசல் விலை விலை உயர்வு ஏன்?

Image
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்திக்கொண்டே செல்கிறது. சென்னையில் இன்றைய விலை ஒரு லிட்டர் ரூ. 96.23. ஆந்திராவில் 87.24. போபாலில் 102.89 என மாநிலங்களுக்கு ஒரு விலை விற்கப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா பேரல் விலை என்ன? அதில் மத்திய மாநில அரசுகளின் வரி எவ்வளவு? நேரடி வரி, மறைமுக வரியின் தாக்கம் என்ன? தேசம் முழுவதும் ஒரே வரி ஜிஎஸ்டி என்றவர்கள், பெட்ரோல், டீசலை ஏன் அதிலிருந்து கழட்டிவிட்டார்கள்? நம் நாட்டில் தனிநபருக்கு வரி எவ்வளவு? கார்ப்பரேட்டுகளுக்கு வரி எவ்வளவு? சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை ஏற்ற சொல்வதற்கு காரணம் என்ன? என பல அம்சங்களையும் மொத்தமாக பார்த்தால், கட்டுரை நீண்டு விடும். ஆகையால், ஒவ்வொன்றாக பார்க்கலாம். **** கடந்த ஜூன் 1 ந்தேதி தில்லியில் பெட்ரொல் விலை ரூ. 94.49. இந்த விலை எப்படி விதிக்கப்படுகிறது என்றால்…. கச்சா பேரல் விலை – 5151.00 ஒரு கச்சா பேரல் என்பது 159 லிட்டர். ஆக 1 லிட்டர் ரூ. - 32.39 சுத்தப்படுத்த ரூ.- 3.60 மத்திய அரசு வரி ரூ. 32.90 (சுங்கம் + சாலைவரி) பெட்ரோல் பம்பு ரூ. 3.79 மாநில

சிவசங்கர் பாபா எனும் பொறுக்கி சாமியார்!

Image
நித்யானந்தா , பிரேமானந்தா வரிசையில் இணைந்துள்ளான் சிவசங்கர் பாபா . இந்தப் போலிச் சாமியார்களே பொறுக்கிகள்தான் . அதிலும் இவன் கடைந்தெடுத்தப் பொறுக்கி . உலகத்திலுள்ள எல்லாக் கெட்டவார்த்தைகளுக்கும் பொருத்தமானவன் .   பத்ம சேஷாத்ரி பள்ளியால் ஏற்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள்ளாக , அதைவிட பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது இவனது காமக் களிவெறியாட்டங்கள் . சென்னை ஈசிஆர் கேளம்பாக்கத்தில் உள்ள ” சுஷில்ஹரி இண்டர்நேசனல் ஸ்கூல் ” பள்ளியின் நிறுவனர்தான் இந்த 70 வயது கிழட்டுப் பொறுக்கி .   ” கடவுளுக்காக வந்திருக்கிறேன் . கடவுளாக வந்திருக்கிறேன் ”   என தன்னை விஷ்ணுவின் அவதாரமாகக் கூறிக்கொண்ட போலிச்சாமியார் . பாலியல்வெறிபிடித்த ஜந்து . பிஞ்சுக் குழந்தைகளையும்கூட கடித்துக் குதறும் மோசமான மிருகம் .   மற்ற பள்ளிகளைப்போலவே , இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் மூலம்தான் இப்பிரச்சினை வெளிஉலகத்துக்கு வந்துள்ளது . தற்போதைய மாணவிகளும் புகார் அளித்துள்ளனர் . சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ள அக்குழந்தைகளின் வாக்குமூலங்களை காதுகொடுத்துக் கேட்கமுடியவில்லை . இ

இலட்சத்தீவுகள் : குரங்கு கையில் பூமாலை!

Image
நாற்புறமும் அலைகள் ஆர்ப்பரிக்கும் அழகிய கடல் . வெண்மேகங்கள் மிதக்கும் நீல வானம் . வளைந்து உயர்ந்த தென்னைகள் . காற்றில் வீசும் கடலின் மணம் . இப்படி இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் குட்டிக் குட்டித் தீவுகள் . அதுதான் இலட்சத் தீவு . இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்று .   மக்களின் வாழ்நிலை :   சென்னையின் 10- இல் ஒரு பகுதியைவிடக் குறைவான நிலப்பரப்பு . அதில் 36 தீவுகள் இருந்தாலும் , மக்கள் வசிப்பது 11 தீவுகளில்தான் . இயற்கை வனப்பு மட்டுமல்ல . இங்குள்ள மக்களின் வாழ்வும் எளிமையானது .   மக்கள்தொகை ( 2011 கணக்கெடுப்புப்படி) 64,473 தான் . 96% மக்கள் , இசுலாமியர்கள் . பேசும் மொழி மலையாளம் . இதில் 99.9% பேர் எழுத்தறிவு மிக்கவர்கள் . மிகமுக்கியமாக , மக்கள் வசிக்காத பங்காரம் என்ற ஒரே ஒரு தீவில் மட்டும்தான் சாராயம் இருக்கிறது . வேறெங்கும் இல்லை . அதனால் சீரழிவுகளும் , குற்றங்களின் எண்ணிக்கையும் மிகமிகக் குறைவு .   விவசாயம் கிடையாது . தென்னை மட்டுமே வளரும் . மீன்பிடிப்பதுதான் முக்கிய தொழில் . அதனால் , கடல் உணவுகளும் , ஆட