Posts

Showing posts from March, 2024

பார்ப்பன பயங்கரவாதி அத்வானிக்கு பாரத ரத்னா விருது! வெட்கக்கேடு!

பாபர் மசூதி இடிப்பை முன் நின்று நடத்திய ஆர்எஸ்எஸ் பாஜக குண்டர் படையின் தலைவரான லால் கிருஷ்ண அத்வானி என்ற எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்பாகவே ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற அரசியலை முன்வைத்து இந்தியா முழுவதும் ரத யாத்திரை நடத்தியது ஆர்எஸ்எஸ். அதில் முன்னிலை வகித்த நபர்தான் இந்த அத்வானி. இந்த ரத யாத்திரை இஸ்லாமியர்களுக்கும், மத சிறுபான்மையினருக்கும் எதிரான கலவரங்களை  தூண்டியது. இந்த ரத யாத்திரை ரத்த யாத்திரையாக மாறியது. படுகொலை செய்யப்பட்ட இஸ்லாமியர்களின் ரத்தத்தினாலும், அவர்களை கொன்று புதைத்து அதன் மீது ஏறி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற முழங்கிய பாசிச குண்டர் படை தலைவனான அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது மிகவும் ‘பொருத்தமானதுதான்.’ ஏனென்றால் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் குடியிருக்க வீடின்றி தவித்துக் கொண்டிருக்கும் போது ராமனுக்கு கோவில் என்ற பெயரில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வாரி இறைத்து உள்ளனர். 90களில் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் இந்தியாவின் மீது திணித்த தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற

மோடி ஆட்சி: நிழல் தரா வாய்ப் பந்தல்.

 நன்றி, மார்க்சிஸ்ட் ரீடர் தாமஸ் ஐசக் தமிழில்: க.சுவாமிநாதன் மோடி ஆட்சியின் 10 ஆண்டுகள் பற்றி பா.ஜ.க செய்யும் பிரச்சாரமும், நமது பதில்களும் இங்கு தரப்பட்டுள்ளது . பிரச்சாரம் – 1 2029இல் இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக வளர உள்ளது. இதோ “மொத்த உள்நாட்டு உற்பத்தி” (GDP – Gross Domestic Product) வளர்ச்சியில் இந்தியாவின் ரேங்க் 2014 – 10 2015 – 7 2019 – 6 2022 – 5 (பிரிட்டனை முந்தி) 2027 – 4 (ஜெர்மனியை விஞ்சும்) 2029 – 3 (ஜப்பானை விஞ்சும்) பதில் 1) ஜி.டி.பி. என்ற அளவுகோல் மட்டும் உண்மை நிலையை பிரதிபலிப்பது அல்ல. அதை மட்டும் முன்னிறுத்தி வளர்ச்சி பற்றி பேசுவது பொய்ச் சித்திரம் ஆகும். வாதத்திற்காக ஜி.டி.பி யை அளவுகோலை எடுத்துக் கொண்டால்கூட உலகின் 3வது பொருளாதாரம் என்ற ரேங்க்கை எட்டும்போதும் இந்தியா ஒரு குறை வளர்ச்சி கொண்ட நடுத்தர வருமான நாடாகவே இருக்கும். காரணம், * உலக ஜி.டி.பி யில் இந்தியாவின் பங்கு 5 சதவீதம் மட்டுமே. 2027இல் இந்தியாவின் ஜி.டி.பி. அமெரிக்க ஜி.டி.பியில் ⅙ பங்குதான் இருக்கும். சீனாவின் ஜி.டி.பியில் ⅕ பங்குதான் இருக்கும். 2) மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது சரியான அளவுகோல்

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்_11.

இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தப் போராடிவரும் கம்யூனிச புரட்சியாளர்கள் இரண்டு வழிமுறைகளை முன் வைத்துப் போராடுவதாக நாங்கள் வரையறுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  முதலாவதாக மாவோயிஸ்டுகள் முன்வைக்கின்ற ஆயுதப் போராட்டப் பாதை. அரசியல் போராட்டத்திற்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் இடையில் உள்ள உறவை புறக்கணித்துவிட்டு ஆயுதங்களை முன்னிறுத்தி புரட்சியை நடத்தி முடித்து விட முடியும் என்ற அகநிலைவாதக் கண்ணோட்டத்தில் செயல்படுகின்ற வழிமுறை. புதிய ஜனநாயகப் புரட்சி ஒன்றே நாட்டு மக்களுக்கு விடிவை தரும் என்பதில் இவர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்ற போதிலும், அவர்களின் நடைமுறை அதனை நோக்கி முன்னேறுவதற்கான கூறுகளைக் கொண்டதாக இல்லை என்பதை அவர்களது அரசியல் மற்றும் இராணுவ பாதை தெளிவாக முன்வைக்கின்றது. இரண்டாவதாக எமது அமைப்பு முன் வைக்கின்ற போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரம் ஆகிய இரண்டுக்கும் உள்ள உறவை அறிவியல் பூர்வமாக இணைத்து, மக்கள் திரள்வழியுடன் கொண்டு செல்கின்ற புரட்சிப் பாதை. அரசியல் போராட்டத்தின் நீட்சியாக ஆயுதப் போராட்டம் என்பதை முன்வைக்கின்ற அரசியல் மற்றும் இராணுவ பாதையை உள்ளடக்கிய பு

எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!

Image
 கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்தும் போராட்டம் புதிய ஜனநாயக புரட்சிக்கு முன் நிபந்தனையாக மாறி உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட பயண அனுபவத்திலிருந்து நாமும் கற்றுக் கொள்வோம். #எனது_நீண்ட_பயணம் (#My_Long_March ) #சீனத்திரைப்படம்: #அறிமுகம்! #வீடியோ!! #அறிமுகம் சீன தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் செம்படை, நீண்ட பயணத்தை வெற்றிகரமாக முடித்ததன் 70வது ஆண்டு நினைவாக மை லாங் மார்ச் என்ற திரைப்படம் சீனாவைச் சேர்ந்த ஆகஸ்ட் பர்ஸ்ட் பிலிம் ஸ்டுடியோவினால் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் Axis of War (The First of August, My Long March, Night Raid) என்ற சீனப் புரட்சி தொடர்பான 3 திரைப்படங்களில் இரண்டாவதாக வெளிவந்த ஒன்று. ஒன்றரை மணி நேரம் ஓடும் இந்தத் திரைப்படத்தில் குண்டு வீச்சுகளும், போராட்டங்களும், மனித முயற்சிகளும், வலிநிறைந்த அனுபவங்களாக, போராட்டத் துடிப்பின் எத்தனமாக அழுக்கும், ரத்தமும், தூசியுமாக படமாக்கப்பட்டுள்ளன.  சீன வரலாற்றைக் கற்றுக் கொள்ள விரும்பும் எவரும் பார்க்க வேண்டிய படம். இதன் டிரைலர் யூடியூபில் சேர்க்கப்பட்டுள்ளது திரைப்படத்தின் டிவிடியை இணைய வழியாக வாங்கிக் கொள்ளலாம்.இத்

சந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் !

Image
 புரட்சிகர அமைப்புகளை உள்ளிருந்தே கெடுக்கின்ற நோய் சந்தர்ப்பவாதமா கும். 45 ஆண்டுகளுக்கும் மேலாக புரட்சிகர பாரம்பரியத்தை கொண்ட எமது அமைப்பிற்கு மார்ச் 8 ஒரு திருப்புமுனை நாளாகும். 2020 மார்ச் 8 எமது அமைப்பிலிருந்த ஓடுகாலிகளையும், சந்தர்ப்பவாதிகளையும், பிழைப்புவாதிகளையும் எமக்கு அடையாளம் காட்டியது. மார்க்சிய லெனினிய அமைப்புகளில் இல்லாத கேடுகெட்ட குள்ளநரிக் கூட்டம் கும்பல் யார்,யார் என்பதையும், அரசியல், சித்தாந்தமற்ற லும்பன்களையும், மனதிற்குள் இந்தியாவின் கேடுகெட்ட சாதிய சிந்தனையை தமக்குள் வைத்துக் கொண்டு ஏமாற்றி திரிந்த எத்தர்களையும் எமக்கு அடையாளம் காட்டியது. மார்க்சிய லெனினியத்தை வெறும் மந்திர உச்சாடனங்களை போல மேற்கோள்களை எடுத்துக் கூறி சொற்சிலம்பமாடுகின்ற குட்டி முதலாளித்துவ அற்பவாதிகளையும் எமக்கு அடையாளம் காட்டியது. அணிகளின் விமர்சனங்களை துச்சமாக மதிக்கின்ற, அதிகாரத்துவ வெறிபிடித்தவர்களையும், தலைமையை கைப்பற்றுவதற்கு எந்த தகுதியும் இல்லாத போதும் சூழ்ச்சி செய்த கெடுமதியாளர்களையும் எமக்கு அடையாளம் காட்டியது. இறுதியில் இப்படிப்பட்டவர்கள் எமது செயல் தந்திர அரசியல் வழியை நிராகரித்தவர்களாகவ

‘குடி பொறுக்கிகளும்?’, மேட்டுக்குடி பொறுக்கிகளும்!

Image
மலையாளத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமான மஞ்சுமோல் பாய்ஸ் என்ற திரைப்படம் கேரளா தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் வேறு சில மாநிலங்களிலும் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலையும் ஈட்டி வருகிறது. உடனே பொறுக்க மாட்டாத பார்ப்பனக் கும்பலும் பார்ப்பன அடி வருடிக் கும்பலும் இணைந்து கொண்டு படத்தை பற்றி எதிர்மறையான கருத்துக்களை பரப்பத் துவங்கினர். அதில் முக்கியமானது தமிழ் திரையுலகில் வசனம் எழுதிப் பிழைக்கும் கருப்பு பார்ப்பனர்களில் ஒருவரான ஜெயமோகன்  அந்த திரைப்படத்தில் குணா குகை மற்றும் கொடைக்கானலுக்கு செல்கின்ற இளைஞர்கள் குடிப்பதை பற்றி குறிப்பிட்டு குடி பொறுக்கிகள் என்று விமர்சித்துள்ளார். இந்த விமர்சனத்தை தமிழ் எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் பலரும் கண்டித்துள்ளனர். குடிபொறுக்கிகளை விமர்சிப்பது இருக்கட்டும். ஜெயமோகன் வகையறாக்களின் புரலவர்கள் ஆன மேட்டுக்குடி பொறுக்கிகள் கடந்த ஒரு வாரத்தில் செய்த அட்டூழியங்கள் என்ன தெரியுமா! முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இவர் ராதிகா மெர்சண்ட் என்பவரை திருமணம் செய்யப்போகிறார். இந்த திருமணத்திற்கு முன்

குடிப்பொறுக்கிகள் - ஒரு விளக்கம்.(ஜெயமோகனின் மேதாவித் தனத்திற்கு செருப்படி)

Image
மஞ்சும்மல் பாய்ஸ் குறித்து ஜெ.மோ எழுதியதியிருப்பதை  நிறைய பேர் பகிர்கிறார்கள். பெரும்பாலானோர் எதிர்மறையாகவே எழுதுகின்றனர். இப்படம் குறித்து எழுதும்போது ஜெ.மோ,  குடிப்பொறுக்கிகள் என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறார்.  எழுத்தாளர்கள் மனிதர்கள் மீது வாஞ்சையுடையவர்களாக இருக்க வேண்டும். இவ்வளவு கடுமையான சொற்பதம் தேவையில்லை.  குறிப்பாக மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை முன்வைத்து 'குடிப்பொறுக்கிகள்' என்கிற பதத்தை ஜெ.மோ ஏன் பயன்படுத்துகிறார்?  மஞ்சும்மெல்  எர்ணாகுளத்துக்கு அருகில் உள்ள பகுதி. அங்கமாலி டைரிஸ் படத்தை சினிமா ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அங்கமாலியும் எர்ணாகுளம் அருகில் உள்ள பகுதிதான். இப்பகுதிகள் நமது வட சென்னையை ஒத்தவை.  இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை மக்கள். ஒவ்வொரு நிலத்தில் வாழ்பர்களுக்கும் ஒவ்வொரு இயல்புகள். இதைப் பேசுவதுதான் நம் திணைக் கோட்பாடு. அந்த திணைக்கோட்பாடு இன்று உலகளாவிய கலை இலக்கியக் கோட்பாட்டுகளுடன் இணைத்துப் பார்க்கப்படுகிறது.  மனிதப் பண்பாடு என்பது இடம், காலம், சூழல் என்னும் பௌதீக அடிப்படையில் ஒன்றிணைந்து செயலாற்றுவது. ஒரு பனுவலில் முதல்பொருள், உ

மார்ச் 8 - உலக மகளிர் தினம்: நமது கடமை என்ன?

Image
இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. மார்ச் 8 மகளிர் தினத்தின் போது பெண்களின் உரிமைகளைப் பற்றி வாய் கிழிய பேசுவதும், அன்றைய தினத்தின் போது பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை போல நாடகமாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது இந்திய சமூக அமைப்பு. சென்ற நூற்றாண்டின் இறுதியில் பெண்களின் நிலை என்ன? நாட்டின் பெரும்பான்மை மதம் என்று அறிவித்துக் கொள்ளும் பார்ப்பன (இந்து) மதத்தில், பார்ப்பனக் குடும்பங்களில் பிறந்த பெண்கள் துவங்கி உழைக்கும் பெண்கள் வரை கல்வியறிவு மறுக்கப்பட்டவர்களாகவும், வீட்டிற்குள் ஆண்களுக்கு சம்பளம் இல்லாத பணியாளாகவும் அடக்கி ஒடுக்கப்பட்டனர். இதையே பெண்கள் தாயாக, தாதியாக, தாசியாக இருப்பதே பெருமை என்று போதிக்கப்பட்டது. ஆரம்பக் கல்வியிலேயே அப்பா பேப்பர் படிக்கிறார், அம்மா வீட்டு வேலைகளை செய்கிறாள், அண்ணன் விளையாடுகிறான், அக்கா துணி துவைக்கின்றாள் என்று பாடத்திட்டமாக போதிக்கப்படுகிறது. ஆண்-பெண் சமத்துவம், பெண்களுக்கு அனைத்திலும் முன்னுரிமை, சம வேலைக்கு சம ஊதியம், பாலின பாகுபாடு கூடாது போன்ற முழக்கங்கள் தொடர்ந்து எழுப்பப

எங்கே பயணிக்கிறோம் கல்விப் பாதையில்....

Image
இதோ இந்த முகநூல் பதிவை போட்டதற்காக கல்வி செயல்பாட்டாளரான  தோழர் உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாசிச பாஜக கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகம் சுயேச்சையான கல்வித் திட்டத்தை உருவாக்கும் என்று திமுக அரசு கடந்த சில வருடங்களாக கூறி வருகிறது. அப்படிப்பட்ட கல்வித் திட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் குரல் எழுப்பினால் அவர்களின் மீது ஒடுக்குமுறை பாய்கிறது. ஜனநாயக விரோத இத்தகைய நடவடிக்கைகள் கடுமையாக கண்டிக்கத்தக்கது. எங்கே பயணிக்கிறோம் கல்விப் பாதையில்.... எனது மகன் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று வருகிறார் (M.Sc Geology). சென்னைப் பல்கலைக் கழக வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது குறித்தும் பேராசிரியர்கள் போராட்டம் குறித்தும் நேற்று முன்தினம் என்னிடம் மிக வருந்தி பேசியதுடன், அம்மா, ,(GL)ஒப்பந்தப் பேராசிரியர்கள் தான் பெரும்பாலும் இருக்கின்றனர்  என்றும் இந்தச் சூழலில் இவர்களுக்கு சம்பளமே இல்லை என்றால் எப்படி பணியில் நீடிப்பார்கள் என்றும் நீண்ட நேரம் பேசியதுடன் பல்கலைக் கழகத்தில் வகுப்புகள் பாடம் நடத்துவது பற்றி என விரிவாகப் பேசி மிகவும் வருந்தினார்.

கார்ப்பரேட்டுகளின் பிடியில் ஜனநாயகம்!

Image
பாசிச பாஜக அரசு  கொண்டு வந்த தேர்தல் நிதி பத்திரங்கள் எனும் பெயரில் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குபவர் பெயர் குறிப்பிடாமல் நிதி வழங்கும் திட்டம் என்பது மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதுடன் நாட்டில் கறுப்பு பண பரிவர்தனையை பாதுகாக்கும் எனவும்,தேர்தல் பத்திரம் என்பதே அரசியல் சாசனத்துக்கு எதிரானது இதற்காக தேர்தல் பத்திரங்களுக்காக நிறுவன சட்டங்களில் ( Company act) திருத்தம் கொண்டு வந்தது சட்டவிரோதமானது எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி  தீர்ப்பு வழங்கியது. தேர்தல் நிதி பத்திரங்கள் என்பது சட்டபூர்வ கொள்ளை என்பதால், உச்சநீதிமன்றம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை மார்ச் -06க்குள் தெரிவிக்க வேண்டும் என தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால் 02 நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில்  தேர்தல் ஆணையத்திற்கு தகவல்களை அளிக்க ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் அளிக்குமாறு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா  கேட்டுக் கொண்டுள்ளது.இது எதிர்பார்த்த ஒன்றுதான்.த