Posts

Showing posts with the label பாசிசம்

கை கோர்ப்போம்!

Image
  ஜிக்னேஷ் மேவானி, குஜராத்தின் பாசிச எதிர்ப்புப் போராளி. தேசிய தலித் அதிகார அமைப்பின் தலைவர். சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு பா.ஜ.க-வுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். குஜராத் மாநிலமும் உத்தரப் பிரதேசம் போலத் தான். நோயாளிகளுக்கு சிகிச்சை இல்லை. மருந்து இல்லை. ஆக்சிஜன் இல்லை. கொரோனா மரணங்களுக்கு கணக்கும் இல்லை. மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் தங்களால் இயன்ற அளவு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுறார்கள். அவர்களில் ஜிக்னேஷும் ஒருவர். தற்போது ஒரு மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை நிறுவிட முயன்று வருகிறார் ஜிக்னேஷ். இதற்காக ”மக்களாகிய நாங்கள்” என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து நிதி திரட்டினார். ஐம்பது லட்சம் ரூபாய் திரண்டது. இனி அடுத்து ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை நிறுவிடலாம். இதை தடுக்கும் நடவடிக்கையில் குஜராத் அரசு இறங்கி விட்டது. மக்களுக்கு தானும் செய்ய மாட்டேன், மற்றவர்களையும் செய்ய விட மாட்டேன் என்பது தானே பாசிச குணம். அந்த வகையில் ”மக்களாகிய நாங்கள்” அமைப்பின் வங்கிக் கணக்கை முடக்கி விட்டது. அதாவது ஆக்சிஜன் உற்பத்திக்காக ஜிக்னேஷ் திரட்டிய ஐம்பது லட்சத்தை முடக...

நாதக = பாஜக..

Image
இன்று அரசியல் சூழ்நிலையில் தமிழக இளைஞர்களுக்கு மாற்றாகவும் எழுச்சி நாயகனாகவும் தன்னை காட்டிக்கொள்பவர் அண்ணன் சீமான் அவர்கள். முன்னொரு காலத்தில் எனக்கும். அதனால்தான் அவரை நம்பும் தம்பி, தங்கைகளை நினைத்து மனம் கலங்குகிறது. சீமான்தான் மாற்று, வளர்ச்சிக்கான கீற்று என கருதுகிறோம். அவர் மாற்று அல்ல. மற்றொரு பாஜக. புரியவில்லையா? பாஜக எப்படி ஒரு பாசிச கட்சியோ, அதுபோல் அண்ணன் சீமானும் ஒரு பாசிஸ்ட். நாட்டை சீனா-பாகிஸ்தானிடம் இருந்து காக்க ஒரு தலைவன் (மோடி), அவருக்கான கட்சி (பாஜக). அந்த கட்சிக்காக மக்கள். பாஜக வை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள், ஆண்டி-இந்தியன், சீன கைக்கூலி என்பதெல்லாம் இந்த சர்வாதிகாரத்தின் வெளிப்பாடுதான். இதேதான் சீமானுக்கும் பொருந்தும். தன்னை முன்னிறுத்துவது. தான்தான் தமிழினத்தைக் காக்க வந்தவராக பீலா விடுவது. மோடி தேசிய வெறியைத் தூண்டி விடுவதுபோல தமிழின வெறியை தூண்டிவிடுவது. தமிழ்மானம் காப்பதற்கு சீமான் தேவை. அதற்காக ஒரு கட்சி. அதை ஆதரிப்பதற்காக மக்கள். 56 இஞ்ச் மார்பு என மோடி சீன் போட்டதற்கும், யாரா இருந்தாலும், அடிப்பேன், வெட்டுவேன், நான் அதை செஞ்சிடுவேன், இதை செஞ்சிடுவேன்னு ப...