Posts

Showing posts from February, 2021

இயற்றும்.., ஈட்டும்.., ஆனால் காக்காத அரசு!

Image
100 நாள் வேலை திட்டமென்பது ஒரு ஆண்டில் ஒரு குடும்பத்திற்கு (தனி நபருக்கு அல்ல) 100 நாட்களுக்கு வேலை வழங்குவது. இது அவர்களது வாங்கும் சக்தி விழாமல் காக்க கொண்டு வரபட்டத் திட்டமாகும். கடந்த சில ஆண்டுகளாகவே கிராம புறங்களில் வேலையின்மையும் வறுமையும் அதிகமாகிவருகிறது, அதற்கேற்ப 100 நாள் வேலையை நாடி வரும் மக்களது எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  முக்கியமாக கொரோனா ஊரடங்கு, தொடர்ந்து தொழில் முடக்கம் காரணமாக புலம் பெயர் தொழிலாளர்கள் மாநிலங்களை கடந்து தங்கள் கிராமங்களுக்கு நடந்தே சென்றனர். இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாக 100 நாள் வேலையை நாடும் குடும்பங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்தது. உச்ச பட்சமாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், இராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில். இந்த நிதியாண்டில் மட்டும் 7.17 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தை நாடியுள்ளன. 40 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தங்களுக்கான 100 நாட்கள் முடிந்துவிட்டது. 2006 ஆம் ஆண்டு இத்திட்டம் அறிமுகபடுத்தபட்டதிலிருந்து வரலாறு காணாத அளவிற்கு அதிகம். 100 நாள் வேலைத் திட்டத்தை _நாடிய_குடும்

வரி உயரும்.., விலை உயரும்.., கோல் உயரும்.., குடி உயருமா..?

Image
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் மைய அரசு வரி வசூல் பற்றிய இலக்கை வெளியிடும். இந்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி இந்த விவரங்கள் வெளியடப்பட்டது. கடந்த ஆண்டை விட கார்ப்பரேட் வரி (2.35 லட்சம் கோடி), வருமான வரி (1.79 லட்சம் கோடி), ஜிஎஸ்டி (1.75 லட்சம் கோடி) என எல்லா வரிகளும் குறைவாகவே வசூல் ஆகுமென கணக்கிடபட்டுள்ளது. ஆனால் கலால் வரி மட்டும் 94000 கோடி கூடுதலாக வசூலாகுமென கணக்கிடபட்டுள்ளது. மற்ற வரிகளின் வசூல் குறைகிறது. கலால் வரி வசூல் மட்டும் எப்படி கூடும்?  2020 பிப்ரவரி மாதத்தில் கச்சா எண்ணெய் பீப்பாயின் விலை 53 டாலராக இருந்தது. உலக அளவில் உற்பத்தி குறைந்ததால் ஏப்ரலில் வெறும் 1 டாலருக்கு விழுந்தது. டிசம்பரில் 47 டாலரை எட்டியது.  ஆனால் பெட்ரோல், டீசல் விலையோ இது போல குறையவில்லை, கிட்டதட்ட அதே விலை தான் நீடித்தது. சென்னையில் மார்ச் மாதத்தில் 72 ரூபாய் தொட்டு, பின்னர் தொடர்ந்து உயர்ந்து இப்போது 92 ரூபாய் தொட்டுவிட்டது. சில ஊர்களில் சதம் அடித்துவிட்டது.   இதற்கு காரணம் என்ன? கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கலால் வரி குறைக்கப்படவில்லை. அப்படி நம்மிடம் பிடுங்கித்தான் கலால் வரி 3.61 லட்சம்

”வசந்தத்தின் இடிமுழக்கம்” நூல் வெளியீடு

Image
ரசிய சோசலிசப் புரட்சியின் 103ம் ஆண்டு சென்னை விழாவின் பொழுது வெளியிடப்பட்டது.   நூலை வெளியிட்டு பேராசிரியர் வீ. அரசு நிகழ்த்திய உரையிலிருந்து….   சுமந்தா என தோழர்களால் அன்போடு, தோழமையோடு அழைக்கப்படும் தோழர் சுமந்தா பானர்ஜி அவர்களால், “நக்சல்பாரி கவிதைகள்” என ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்ட புரட்சிக் கவிதைகளை தோழர் வீராச்சாமி ‘வசந்தத்தின் இடிமுழக்கம்’ என்று தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.   மொழியாக்கம் போல் இல்லாமல் மூல மொழியில் உள்ளதைப் போல் கவிதைகளும், பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன   (இவை இசைக்கோர்வை இல்லாமல் இலக்கியப் பெயர்ப்பாக மட்டும் கொடுக்கப்பட்டுள்ளா.   இவற்றை இசையமைத்து பாடமுடியும்.) இந்த தொகுப்பைப் பற்றி சில குறிப்புகளை இங்கு தருகிறேன்   இந்நூல் கவிதைகள் மட்டுமல்ல, இந்திய வரலாற்றை பேசும் நூல்.   “எனக்கு நிச்சயமாகத் தெரியும் நான்கு எழுத்து கொண்ட எளிய அப்பெயர் ஒரு கிராமத்தின் பெயர் மட்டுமல்ல மொத்த நாட்டின் பெயரே அது தான் நக்-சல்-பா-ரி!”   (பக். 69)     என்ற குமார் விகாலின் கவிதை வரிகள் இந்த நாட்டில் உருவான புதிய வரலாற்றைச் செய்த காலங்களைப் பதிவு செய்கிறது

Bad Genius (2017) தாய்லாந்து நுழைவு தேர்வுகளில் நடக்கும் ஊழல்கள்!

Image
கதை. தன் மகளை அழைத்துக்கொண்டு அந்த புதிய பள்ளியில் மேல்நிலை வகுப்பில் சேர்க்க அழைத்துவருகிறார். தன் மகள் கணக்கிலும், படிப்பிலும் கெட்டிக்காரி. இவ்வளவு பரிசுகள் வென்றிருக்கிறாள் என பரிசு கோப்பைகளையும் காண்பிக்கிறார். மகளுக்கோ அது காசு பிடுங்கும் பெரிய பள்ளி. அப்பாவை சிரமப்படுத்தவேண்டாம். பழைய பள்ளியிலேயே படிக்கிறேன் என்கிறாள். புதிய தலைமை ஆசிரியரோ ”இந்த பள்ளியிலேயே படி. ஸ்காலர்ஷிப் தருகிறேன். மேற்படிப்புக்கும் ஸ்காலர்ஷிப் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்”என்கிறார். அந்த பள்ளியில் சேர்கிறாள். நாயகியின் வகுப்புத் தோழி கணக்கில் கொஞ்சம் டல்லான மாணவி. நாயகியோடு நெருக்கம் ஆகிறாள். தான் நிறைய மார்க் வாங்கினால், பள்ளி சில சலுகைகளை தரும். ”உதவி செய்” என கெஞ்சுகிறாள். பியானோவில் விரலில் வாசிப்பார்கள் அல்லவா! விரல்களை ஒரு லயத்தில் வாசிப்பது போல, பிட் அடிக்க புதுவித உத்தியை கண்டுபிடித்து சொல்லித்தருகிறாள். தோழி கூடுதல் மார்க்கும் வாங்குகிறாள். அந்த தோழி பள்ளியில் படிக்கும் தன் நண்பனுக்கும் அந்த உத்தியை சொல்கிறாள். அவன் தனக்கும், தன் நண்பர்களுக்கும் சொல்லித்தந்தால், தலைக்கு இவ்வளவு தருகிறேன் என பேரம் பேசு

நெருப்பை வணங்குபவர்கள்

Image
கோபம் வேண்டாம், பதட்டம் வேண்டாம் தயாராகுங்கள், அது போதும் இதுவே தருணம் – கண் காதுகளைத் திறந்து வைக்க, ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்க. இம்மாதிரி நேரத்தில் பரவசமடைவது நெருப்பில் குதிப்பதற்குச் சமம் உங்கள் கடமை வெறியுடன் நெருப்பைக் காதலிப்பதல்ல நெருப்பைப் பொறுப்போடு பயன்படுத்தக் கற்பது. கோபம் வேண்டாம், பதற்றம் வேண்டாம் இது தருணம், தயாராகுங்கள், அது போதும். - வீரேந்திர சட்டோபாத்தியாயா, வங்காளம் (தோழர் சுமந்தாவின் ‘நக்சல்பாரி கவிதைகள்’ என ஆங்கிலத்தில் 1987ல் தொகுத்தார். அதிலிருந்து 52 கவிதைகளை தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் “வசந்தத்தின் இடிமுழக்கம்”. அந்த தொகுப்பிலிருந்து ஒரு கவிதை) விலை ரூ. 100 பக்கங்கள் : 120 #நூல் _கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம், 16, அருமலைச் சாவடி, கண்டோண்மென்ட் பல்லாவரம், சென்னை – 600043 தொலைபேசி : 9444881066 சென்னையில் நடைபெற இருக்கிற புத்தக கண்காட்சியில் கீழைக்காற்று கடையில் புத்தகம் கிடைக்கும்.

மோடி - யோகி குறித்து கருத்து தெரிவித்தவர்கள் மீது இதுவரை 293 தேசத்துரோக வழக்குகள்.

Image
கடந்த 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட மொத்த தேசத்துரோக வழக்குகளில் அரசியல்வாதிகள் மற்றும் அரசுக்கு எதிராக பேசியதற்காக 405 இந்தியர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டுள்ளன. இவற்றில் 96% வழக்குகள் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரே போடப்பட்டுள்ளன. 01.01 2010 முதல் 31.12.2020 வரை பதிவு செய்யப்பட்ட அனைத்து தேசத்துரோக வழக்குகளை கண்காணித்து இச்செய்தியை வெளியிட்டுள்ளது சட்ட செய்திகள் தொடர்பான ஒரு வலைத்தளம் (article14). ஒருபுறம் உச்சநீதிமன்றம் விமர்சனங்களை தேசத்துரோகமாக கருத முடியாது என்று கூறுகிறது. மறுபுறம் தேசத்துரோக வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து உள்ளன. Article 14 என்ற வலைத்தளத்தில் சுவரொட்டிகளை வைத்திருத்தல், அல்லது ஒட்டுதல், முழக்கங்களை எழுப்புதல், சமூக ஊடகங்களில் பதிவுகள் எழுதுதல் மற்றும் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட உரையாடல்கள் கொண்டிருப்பது ஆகியவை "தேசத்துரோக" நடவடிக்கையாக கருதப்படலாம் என்று கூறுகிறது. முந்தைய UPA ஆட்சியை விட, NDA ஆட்சியில் தேசத்துரோக வழக்குகள் 28% அதிகரித்துள்ளது. CAA - NRC போராட்டங்களின் போதும், ஹத்ராஸ் கற்பழிப்புக்கு பின்னர்

கடும் குளிரில் இளம் தளிர்கள்: விவசாயிகள் போராட்டத்தில் பள்ளி சிறுவர்கள்

Image
பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள மங்காட் கிராமத்தில் வசிக்கும் பதினொரு வயது குர்சிம்ரத் கவுர், 6 ஆம் வகுப்பு மாணவி, இந்த மாத இறுதியில் தனது தேர்வுகளை எழுத வேண்டும். எனவே, டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு செல்ல தேவையான பொருட்களை தயார் செய்யும் போது, தனது அனைத்து புத்தகங்களையும் எடுத்துக் கொண்டார். ”எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் படிக்கிறேன்” என்கிறார். இப்போது சிங்கு பார்டரில் தனது பெற்றோருடன் முகாமிட்டு ஒரு பேருந்தில் வசித்து வருகிறார். "நாங்கள் பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுகிறோம். ஆனால் இதன் பொருள் நாங்கள் எங்கள் படிப்பை இழக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. எப்போதும் போலவே, நான் இந்த முறையும் A+ மதிப்பெண் பெறுவேன். ” உற்சாகமாக கூறுகிறார். தனது தாய் சுக்பீருடன் வயல்களில் வேலை செய்யும் கவுர், தன்னை ஒரு விவசாயி என்று சந்தோசமாக அறிமுகப்படுத்திக்கொள்கிறார். போராட்டத்திற்கு வருவதற்கு முன்பு பஞ்சாபியில் உள்ள மூன்று வேளாண் சட்டங்கள் குறித்த மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பைப் படித்து பாதிப்பை உணர்ந்துள்ளார், "நாங்கள் அனைவரும் விவசாயிகள், எங்கள் வ

Green Book (2018)

Image
சிறந்த படம் உள்ளிட்ட மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்ற படம். கதை. 1962ல் நடைபெறும் உண்மைக்கதை. ஒரு கறுப்பின அமெரிக்கர் ஒரு சிறந்த பியானோ கலைஞர். நியூயார்க்கில் வாழ்கிறார். அவர் எட்டு வாரங்கள் ஐக்கிய அமெரிக்காவின் தென் பகுதிகளின் உட்பகுதிகளில் பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுகிறார். (கிட்டத்தட்ட சென்னை துவங்கி, கன்னியாகுமரி வரைக்குமான தூரம்) அவர் திட்டமிட்ட பகுதிகள் கருப்பின மக்கள் மீது ஏகப்பட்ட ஒடுக்குமுறை உள்ள பகுதிகள். ஆகையால், தனக்கு பாதுகாப்புக்கு ஓட்டுநர் + பாதுகாவலர் வேலைக்கு ஆள் தேடுகிறார். ஒரு இத்தாலிய அமெரிக்கன். நடுத்தர வயது. திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். பெருந்தீனிக்காரர். ஒரு இரவு கிளப்பில் பவுன்சராக வேலை செய்கிறார். முன்னாள் இராணுவ வீரராகவும் பணியாற்றியவர். கருப்பின வெறுப்பு உள்ள ஆள். புதுப்பிப்பதற்காக கிளப் தற்காலிகமாக மூடப்படுகிறது. கோரோனா ஊரடங்கு காலத்தில் நாம் அடைந்த பொருளாதார நெருக்கடி போல சிரமப்படுகிறார். கையில் உள்ள வாட்ச்சை அடகு வைக்கிறார். இடைக்காலத்தில் ஏதாவது வேலை செய்தே ஆகவேண்டிய கட்டாயம். கருப்பின பியானோ கலைஞருக்கு கிடைத்த டாக்டர

உழைக்கும்_மக்களின்_விடுதலைக்காக_வினையாற்றுவோம்!

Image
சமூக வலைதள நண்பர்கள், வாசகர்கள், அனைவருக்கும் வணக்கம். உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் கோடிக்கணக்கான சமூக வலைத்தள கணக்குகளில் மேலும் ஒன்றை நாங்கள் துவங்கியுள்ளோம். இந்திய உழைக்கும் மக்களின் கழுத்தை இறுக்கி, அவர்களை வாழ விடாமல் திணற வைத்துக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் சுரண்டல் ஒருபுறம், அந்த கொடூரச் சுரண்டலுக்கு துணையாக, சாதி-மத வெறியை தூண்டி மக்களை அடக்கி ஒடுக்கும் காவி பயங்கரவாதம் மறுபுறம் என இரட்டை நுகத்தடியின் கீழ் அல்லல்படும் மக்களை அதிலிருந்து மீட்க வேண்டிய கடமை இச்சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டு. அவ்வாறு சமூகத்தை நேசிக்கும் இளைஞர்கள் சிலர் இணைந்து மக்கள் சந்திக்கும் சமூகப் பிரச்சனைகளுக்கு எதிராக வினையாற்றும் வகையில் #வினை_செய் என்னும் இப்புதிய சமூக ஊடகத்தை துவங்கியுள்ளோம். பெரும்பாலான‌ பத்திரிக்கை - தொலைக்காட்சி ஊடகங்கள் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யும் கார்ப்பரேட் ஊடகங்களாகவே மாறிப்போய்விட்டன. சமூக வலைதளங்களும் ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காக உருவாக்கப்பட்டது என்றாலும், தற்போது நாட்டின் முக்கியப் பிரச்சனைகளை எல்லாம் கடைகோடி மனிதனுக்கும் கொண்டு சேர்ப்பது சமூக

மருத்துவ கல்லூரி மாணவர்களின் தொடரும் எஃகுறுதிமிக்க போராட்டம்!

Image
50 நாட்களையும் கடந்திருக்கிறது ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தொடர் போராட்டம். இந்த போராட்டம் பலரின் கவனத்துக்கு வரவில்லை. ஆனால், பல சிக்கல்களுக்கு மத்தியிலும் இரவும், பகலும் உறுதியுடன் போராடுகிறார்கள் வருங்கால மருத்துவர்கள். எதற்காக இந்தப் போராட்டம்?? இந்தக் கல்லூரி அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டுவிட்டது. ஆனாலும் தனியார் நிறுவனமாக இருக்கும்போது வசூலித்த அதிக கட்டணத்தையே தற்போதும் கட்டச் சொல்கிறது நிர்வாகம். இதை எதிர்த்து மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் இல்லை. அதனால்தான் மாணவர்கள் கல்லூரிக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் கல்லூரி நிர்வாகம், மின்சாரம், குடிநீர்போன்ற அடிப்படை வசதிகளை நிறுத்தி வைத்து வக்கிரமாக நடந்து கொண்டது. மேலும், மாணவர்கள் விடுதியையும் இழுத்து மூடிவிட்டது. அதுமட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் பசியில் மயங்கி விழுந்த பதற்றமான சூழ்நிலை. அப்போதுகூட, வெளியில் இருந்து உணவு டெலிவரி செய்ய வந்தவரை உள்ளேவிடாமல் அட்டூழியம் செய்தது நிர்வாகம். ஆனால், அரசுக் கல்லூரியாக மாற்றிய தமிழக அரசோ, இப்போராட்டத்தை ஏற்படுத்தும் பார்க்