Posts

Showing posts with the label அரசு

ஆபிரகாம் பண்டிதரும் விபுலானந்தரும் - ஆசிரியர் வீ. அரசு

Image
இலங்கையின் மட்டகளப்பில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக் கழகத்தின் விபுலானந்தர் நுண்கலை ஆய்வு மையத்தில் செப் .2017  ல் ஆசிரியர் ஆற்றிய உரையை நூல் வடிவில் கொண்டு வந்துள்ளனர் .   பல நூற்றாண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்ட தமிழ் இசை மரபின் மகத்துவத்தை மீட்டுருவாக்கம் செய்த இரு பெரும் ஆளுமைகள் குறித்து இச்சிறு நூல் விளக்குகிறது .   ஒடுக்கப்பட்ட சாதி இழிவிலிருந்து மீள கிறித்தவத்தில் சேர்ந்த பெற்றோருக்கு மகனாய் பிறந்த ஆபிரகாம் பண்டிதர் , ஆசிரியப் பணிக்கு திண்டுக்கல் வருகிறார் .   சித்த மருத்துவ பரம்பரை என்பதால் அதில் ஈடுபாடு ஏற்பட்டு மூலிகைகள் தேடி மலைகளில் பயணிக்கையில் , கருணாமிருத ரிஷியை சந்திக்கிறார் . அவரை தனது குருவாக ஏற்கிறார் . பிறகு அங்கிருந்து தஞ்சை பகுதிக்கு குடி பெயர்ந்து , மூலிகைப் பண்ணை ஒன்றை அமைக்கிறார் . புதுப்புது மருந்துகள் தயாரித்து விற்றதில் பெரும் செல்வந்தராகிறார் . இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த பாக்கியம் என்பவரின் வீணை , பியானோ வாசிப்பில் இனம் புரியா ஈர்ப்பு ஏ...

பெட்ரொல், டீசலை ஜி.எஸ்.டியில் சேர்ப்பதில் என்ன பிரச்சனை? யாருக்கு லாபம்? யாருக்கு இழப்பு?

Image
ஒன்றிய அரசு ஜூலை 2017ல் ”ஒரே தேசம்! ஒரே வரி” என பந்தாவாக முழங்கி ஜி.எஸ்.டியை அவசரகதியில் அறிமுகப்படுத்தியது. ஒன்றிய அரசிற்கே ஜி.எஸ்.டியில் தெளிவில்லாத பொழுது, மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டியில் தெளிவில்லை என்பது இயல்பானது. அப்போதே, ஜி.எஸ்.டி வரித் திட்டத்தை அமுல்படுத்தினால், உற்பத்தியில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் வரி இழப்பால் பாதிக்கப்படும் என்றார்கள் வரி ஆலோசகர்கள். அது உண்மையும் கூட! வரி இழப்பு ஒரு பக்கம் என்றாலும், ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி வசூலித்த பணத்தை மாநிலங்களுக்கு உரிய காலத்தில் தருவதில்லை. இழுத்தடிக்கிறார்கள். மாநில அரசுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துத்தான் தங்கள் பங்குகளை பெறுகிறார்கள். அதை வாங்கித்தான் மாநிலத்தில் அவர்களது திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். இதில் ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் பெட்ரோல், டீசல், எரிவாயுவை சேர்ப்பதில் ஒன்றிய அரசு “நாங்க ஒண்ணும் எதிர்க்கலை. மாநிலங்கள் தங்களுக்கு வரி வருவாய் குறையும் என்று தான் எதிர்க்கின்றன” என நல்லபிள்ளை போல பேசுகிறார்கள். ஏனென்றால், ஒன்றிய அரசு பெட்ரொல், டீசல், எரிவாயுவை ஜி.எஸ்.டியில் சேர்த்து, ஒன்றிய அரசிற்க...

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச விலை உயர்வு தான் காரணமா?

Image
பெட்ரொல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் சமீபத்திய சர்வதேச அளவில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு தான் என மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு மந்திரி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். தினத்தந்தியில் இன்று (08/06/2021) செய்தி வந்துள்ளது. வழக்கமாக பிஜேபி மந்திரிகள் நிலைமையை சமாளிக்க வாயில் வந்ததை அடித்துவிடும் பொய்களில் ஒன்றாகத்தான் இருக்கிறது. கச்சா பேரல் விலையும்/ தில்லி விலையில் ஒரு லிட்டர் விலை 2012 ல் $94.05 65.60 2014 ல் $93.17 72.24 2016 ல் $43.29 59.68 2018 ல் $65.23 75.55 2020 ல் $39.68 79.76 2021 ல் $60.68 94.69 2012ல் ஒரு பேரல் விலை $94 டாலர் விற்ற பொழுது, தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 65 சொச்சம் தான். ஆனால், இப்பொழுது கச்சா பேரல் விலை 60 டாலர் தான். ஆனால் விலையோ ரூ. 95ஐ தாண்டிவிட்டது! பிஜேபி ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல், இயற்கை வாயுவில் அடிக்கும் கொள்ளை இருக்கிறதே, மிகப்பெரியது! பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டியில் சேர்க்க நாங்கள் தயார். ஜி.எஸ்.டி கவுன்சில் தான் தயாரில்லை எனவும் மத்திய மந்திரி பேட்டிக்கொடுத்துள்ளார். இதில் உள்ள அரசியல் என்ன என்பதை அடுத...

பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றும் சங்கிகள்!

Image
பத்ம சேஷாத்ரி பால பவன் ( PSBB ). சென்னையில் உள்ள பிரபல பள்ளி . நடுத்தர , உயர் நடுத்தர மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளி . மக்களை பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வாகப் பார்க்கும் பார்ப்பனிய நஞ்சை விதைக்கும் பள்ளி . இப்போது மக்களின் கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கிறது . காரணம் , பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததற்காக அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால் கைது செய்யப்பட்டிருக்கிறார் . ஆன்லைன் வகுப்பில் அரைகுறை ஆடையுடன் இருப்பது . மாணவிகளின் புகைப்படங்களை அனுப்பச் சொல்வது . ஆபாச தளங்களின் லிங்க்குகளை அனுப்புவது . சினிமாவுக்கு போகலாமா என கூப்பிடுவது . மாணவிகளின் உடலமைப்பை கிண்டல் செய்வது . மாணவிகளுக்கு உடலளவிலும் , மனதளவிலும் தொல்லை தருவது என இவர் மீதான புகார்கள் நீள்கின்றன . முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்யப்படுள்ளான் இக்காமுகன் . இதைத் தொடர்ந்து 30- க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவிகள் புகார் அளித்திருந்தனர் . இன்று முன்ன...