வானவில் நாவல் – நூல் அறிமுகம்
சிவந்த கண்களோடு உங்களை நான் எச்சரிக்கிறேன், பழைய புத்தககடையில் இப்புத்தகத்தை நீங்கள் பார்க்க நேரிட்டாலோ, தனித்து விடப்பட்டு அனாதையாக அது கிடந்தாலும், உங்களை வெறுக்கும் உங்கள் நண்பர் தவிர்க்க முடியாதபடி இப்புத்தகத்தை உங்களிடம் ஒப்படைத்துவிட்டாலோ, வேறு எவ்வாறு இவ்வுலகில் அப்புத்தகத்தை நீங்கள் கடக்க நேரிட்டாலும் ஒருபோதும் படிக்க துணியாதீர். நான் இப்பொழுது உங்களுக்கு தரும் எச்சரிக்கையை எனக்கு யாரும் தரவில்லை, அதனால் அறியாமையில் அப்புத்தகத்தை திறந்து ஒருபக்கம் படிக்கலாமென வாசிக்கத் தொடங்கினேன். அது ஒரு அகோர போதை, என் ஐந்து நாள் தூக்கத்தை காவுவாங்கி விட்டது, இன்னும் ஒரு பக்கம் படிக்கலாம், இன்னும் ஒன்று, மேலும் சில, மற்ற அத்தியாயங்கள், எது 300 பக்கம்வந்துவிட்டதா, 321 பக்கம் ,புத்தகம் முடிந்துவிட்டதா, இன்னொரு முறை படிக்கலாமே எனதோன்றும் அளவுக்கு அந்த சிறந்த யுத்தகால நூல் என்மீது போர் தொடுத்துவிட்டது. நானும் எவ்வளவோ தப்பிக்க முயன்றேன். ஆனால் அதன் பலத்துக்கு முன்னால் என் பராக்கிரமங்களெல்லாம் நொறுங்கிப்போயின, வேறுவழியின்றி அதனிடம் நான் சரணடைந்தேன். அதன் பின்தான் நான் அறிந்தேன், அது என்மீது தாக்குத...