Posts

Showing posts from December, 2023

பரமார்த்த குருவும் சீடர்களும்!

Image
பரமார்த்த குரு பண்டைய ஆடைகளை கலைந்து நவீன பாணியில் டக்கராக ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட் சகிதம்  நிஷ்டையில் அமர்ந்திருந்தார். குருவே இருப்புக்கு ஆபத்து! இருப்பிடத்துக்கும் ஆபத்து! ஆசிரமத்தை தூக்க வந்து கொண்டிருக்கிறது அரசு படை! இதற்குப் பெயர் ஏதோ பாசிசமாம், என்று பகர்ந்தனன் மட்டி.       பாசிசத்தை விரட்ட வழி ஏதும் உண்டா? குருவே பகர்வீர்! பாசிசத்தை பற்றி சரியாக புரிந்து கொள்ளாத இடது, வலது கம்யூனிஸ்டுகளுடன் அணி சேர்ந்து விரட்ட முடியாது! ஏனென்றால் அவர்கள் போலிகள் என்று தாடியை தடவினார் பரமார்த்தார்!             முன்னொரு காலத்தில் கேப்டனுடன் இணைந்து மூன்றாவது அணி அமைத்தனர் அரசியல் கோழைகள் என்றும் எரிச்சல் அடைந்தார் குரு. மண்ணின் மைந்தன் ஆனாலும் பழங்குடியானாலும், கல்லையும், மண்ணையும், கனிம வளங்களையும் சுரண்டி கார்ப்பரேட்டுக்கு கொடுக்கும் கனவான்களை தட்டிக் கேட்பவர்களை கட்டி உரிக்கிறது பாசிசம் என்றனன் மடையன். சமூக நீதி,, மொழி உரிமை இன உரிமை, மாநிலத்தின் தனி உரிமை என்று பேசினாலும் திராவிட மாடல்  பெயரைக் கொண்டு கார்ப்பரேட் சுரண்டலுக்கு துணை நிற்பதால்      திமுக நமக்காகாது என்று கண்ணாடியை சரி செய்து கொண

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-5.

Image
கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிராக குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்குவதையும், பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணி ஒன்றை உருவாக்குவதையும் எமது திட்ட வகைப்பட்ட செயல் தந்திரத்தின் குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம். அரைக் காலனிய, அரை நிலப்பிரபுத்துவ இந்தியாவில்  ஜனநாயக புரட்சி நடைபெறாத சூழலில், புதிய ஜனநாயக புரட்சிக்கு மக்களை அணி திரட்டி போராடிக் கொண்டிருக்கும் போதே பாசிச அபாயம் தோன்றியுள்ள தற்போதைய புதிய நிலைமைக்கு பொருத்தமாக பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி மூலம் மேலிருந்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு செயல் தந்திரத்தை பிரயோகிக்கின்றோம். அதனால்தான் முதலாளித்துவ நாடுகளில் பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு என்று முன்வைப்பதை போல நாங்கள் முன் வைக்காமல், காலனிய அரைக்காலனிய, மறுகாலனிய நாடுகளுக்கு பொருத்தமான ஜனநாயக கூட்டரசு என்பதை மாற்று அரசமைப்பாக முன்வைக்கின்றோம். சீனாவில் கூட்டரசாங்கத்தின் மூலம் தோழர் மாசேதுங் முன் வைத்த வழிமுறையையும், நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் முன்வைத்த கூட்டரசாங்கத்தையும் வழிகாட்டும் முன்னோடியாக கொண்டு செயல

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.

Image
வினவு தலைமையின் அதிரடி ஆட்டங்களை கடுமையாக விமர்சித்து தனியே புத்தகம் ஒன்றை போட்டுவிட்டு வெளியேறிய செங்கனல் என்ற முகநூல் பக்கத்தை நடத்தி வரும் ஒரு சிறு கும்பல், 2024 தேர்தல் வரை தான் தோழர் ராஜு தலைமையிலான மக்கள் அதிகாரம் இருக்கும் அதன் பிறகு அது காணாமல் போய்விடும் என்று ’அருள்வாக்கு’ ஒன்றை கூறியுள்ளது. இதற்காக முன்னர் ம,க,இ,க, மையக்கலைக்குழுவில் செயல்பட்ட ஒருவர் தலைமையில் சில மாவட்டங்களில் சுற்றி வந்து மருதையனுடன் எமது அமைப்பை இணைத்து அவதூறுகளையும், தனது அரசியல் அரைவேக்காட்டுத்தன முடிவுகளையும் முன்வைத்து திரிந்து கொண்டுள்ளது.  நக்சல்பாரி கட்சியின் அடிப்படை நிலைப்பாடுகளில் இருந்து தாக்குப் பிடிக்க முடியாமல் விலகிப் போன இந்த கும்பல், நீண்டகால மக்கள் யுத்த பாதை என்ற புரட்சிகர பாதையை கைவிட்டு விட்டது மட்டுமின்றி, இந்தியாவில் விவசாய உற்பத்தி முதலாளித்துவமயமாகிவிட்டது என்று ’ஆய்வு செய்து’ கண்டுபிடித்துள்ளது. ”இன்றைய நிலைமையில் அரை நிலப்பிரபுத்துவம் என்ற வரையறை எந்த அளவிற்கு நமது நாட்டு நிலைமைகளுக்கு பொருத்தமாக இருக்கிறது என்பதை ஆராய்வது என்பது புரட்சியின் கட்டத்தை தீர்மானிப்பதற்கு கேந்திரமாகு

பாசிசம் தோன்றுவதற்கான அடித்தளம் எது ?

Image
பாசிசம் குறித்த விளக்க உரைகள் பாகம்_6 பச்சோந்தியைப் போன்று தோற்றமளிக்கக் கூடியது பாசிச தத்துவத்தை விட வேறெதுவும் இருக்க முடியாது ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 6 பாசிச சித்தாந்தம் என்ற மற்றொரு பிரச்சினையை நாம் இப்பொழுது காண்போம். இப்போராட்டத்தில் அது எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது? இந்தச் சித்தாந்தத்தை நாம் ஆய்வு செய்யும்பொழுது நாம் காண்பதென்ன? அனைத்தையும் காண்கிறோம். அது, ஒரு கதம்பக் கூட்டு. ஒரு வெறித்தனமான தேசியவாதத் தத்துவம் என்பது அனைத்து இடங்களிலும் அனைத்துப் பாசிச இயக்கங்களுக்கும் ஒரு பொதுவான அம்சமாகும். இத்தாலியைக் குறித்து மிக அதிகமாகப் பேச வேண்டிய தேவை இல்லை. இந்த அம்சம் ஜெர்மனியில் இதைவிட பலமானது. ஏனென்றால், ஜெர்மனி யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட நாடு. மேலும் அங்கு தேசியவாத அம்சம் மக்களைத் திரட்டுவதற்கு எதையும் செய்யத் தயாராக உள்ளது என்பதாகும். இந்த அம்சம் ஒருபுறமிருக்க, இதர மூலங்களிலிருந்து பெறப்பட்ட ஏராளமான கூறுகளும் உள்ளன. இத்தகைய மூலங்களுக்கு உதாரணமாகச் சொல்வதென்றால் சமூக ஜனநாய

பாசிசம் குறித்த விளக்க உரைகள் பாகம்_5

Image
பாசிச கட்டத்தில் ஜனநாயகத்துக்காக நாம் ஏன் போராட வேண்டும் ? பாசிசம் எதிர்த்தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதை முறியடிக்க நாம் தயாராக வேண்டும்... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 5 ஆகையால், பாசிஸ்டு சர்வாதிகாரமானது பூர்ஷுவா மற்றும் குட்டி பூர்ஷுவாக்களை அணி திரட்டுவதன் மூலம் ஒரு வெகுஜன இயக்கத்தைப் பெற்றிட முயற்சிக்கிறது. இந்த இரு இயக்கங்களையும் இணைப்பது மிகவும் சிரமமானது. ஒன்றிற்கு பாதகம் ஏற்படும் விதத்தில் மற்றொன்றை வலியுறுத்தாமலிருப்பது மிகவும் சிரமமானது. உதாரணத்திற்குச் சொல்வதென்றால் ரோம் படையெடுப்பு நடைபெறுவதற்கு முன்னர் இத்தாலிய பாசிசம் வளர்ந்து வந்தபொழுது, கட்சி இந்த முக்கியமான பிரச்சினையை அலட்சியம் செய்தது. அதாவது அதிருப்தி அடைந்துள்ள குட்டி பூர்ஷுவா பகுதியினரை பெரும் பூர்ஷுவா வர்க்கத்தினர் தம் பக்கம் ஈர்க்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தும் முக்கியமான பிரச்சினையை உதாசீனம் செய்தது. அச்சமயத்தில் இந்தக் குட்டி பூர்ஷுவாப் பகுதியினரில் முன்னாள் இராணுவத்தினர், பணக்காரர்களாக முயற்சித்துக் கொண்டிரு

கசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு! | தோழர் ஸ்டாலின்

Image
யார் யாரெல்லாம் உண்மையில் ஆழமான கட்சி எதிர்ப்பாளர்களோ அத்தகையவர்கள்தான் கட்சி உறுப்பினர்களை சரிவரக் கையாளாமல் எதிர்நிலைக்குத் தள்ளுகிறார்கள். நன்றி: வினவு (இனையதளம்) விவாதங்களுக்கு பதில் உரை. பாகம் – 4 7 இறுதியாக, மேலும் ஒரு பிரச்சினை. கட்சியின் தனிப்பட்ட உறுப்பினர்களின் தவிர்க்க முடியாத நேரும் விதியைப் பற்றியது. கட்சியிலிருந்து உறுப்பினர்களை வெளியேற்றும் பிரச்சினை பற்றிய அல்லது கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட உறுப்பினர்களை மீண்டும் சேர்த்துக்கொள்வது பற்றிய நமது தோழர்கள் சிலரின் வழக்கமான, இதயமற்ற, அதிகார வர்க்க மனப்பான்மை பற்றிய பிரச்சினைகளை நான் மனதில் கொண்டுள்ளேன். இதில் முக்கியமான விசயமே நமது தலைவர்களில் சிலர் மக்கள் தொடர்பாக, கட்சி உறுப்பினர்கள் தொடர்பாக, தொழிலாளர்கள் தொடர்பாக அக்கறையற்று இருக்கிறார்கள் என்பதுதான். இதைவிட அதிகமாக அவர்கள் கட்சி உறுப்பினர்களை ஆய்வு செய்வதில்லை. அவர்கள் எத்தகைய விருப்பங்களைக் கொண்டிருக்கிறார்கள், எவ்வாறு அவர்கள் வளர்ச்சி பெறுகிறார்கள் என்பதை இவர்கள் தெரிந்து கொள்வதில்லை. பொதுவாக இவர்கள் தொழிலாளர்களைப் பற்றி அறிந்துகொள்வதில்லை. அதனால்தான் கட்சி உறுப்பி

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம் 3.

Image
தானே நிறைவேற்றிய ஆவணங்களை தூக்கி எறிந்து விட்டு ‘இடது சந்தர்ப்பவாத’ கண்ணோட்டத்தில் ‘அதிரடி புரட்சிக்கு’ தயாராகியுள்ள வினவு தலைமை. ஆவணங்களை தனது சூடேறிய மண்டையின் மூலமாக திரித்து புரட்டுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் இந்தியாவின் பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய The battle to save India என்ற கட்டுரையை மணிவேல் என்பவர் மொழிபெயர்த்து எழுதியபோது தனது சொந்த சரக்குகளை இணைத்து அருந்ததிராய் கூறியது போல கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார். “இந்த நாட்டை தங்களது அயராத உழைப்பால் உருவாக்கி வளப்படுத்தி பாதுகாத்து வரும் உழைக்கும் மக்களுக்கு, ஒரு கொடூரமான உலகத்தை பரிசளிக்க காத்திருக்கிறது பாசிச பாஜக – ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன மதவெறி கும்பல். அதை எதிர்கொண்டு மக்களை பாதுகாப்பதற்கான தெம்பும் திராணியும் இந்தியாவிலிருக்கும் எந்த ஓட்டு பொறுக்கி அரசியல் கட்சிகளுக்கும் இல்லை! அப்படியென்றால் பாசிச சக்திகளை வேரறுக்க என்னதான் வழி? ஜெர்மனியின் நாஜி படைகள் உலகமெங்கும் வெற்றி வாகைசூடி நாடுகளை அடிமைப்படுத்தி சூறையாடிய வேளையில் ஹிட்லருக்கான முதல் மரண அடி ரஷ்யாவின் சின்னஞ்சிறு கிராமத்தில் தொடங்கியது. அங்கிருந்து பின்வாங

ஓமான் ச‌ர்வாதிகாரி க‌பூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் !

Image
  இன்று வ‌ரை ஓமானில் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் த‌டைசெய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. அங்கு ஊட‌க‌ சுத‌ந்திர‌ம் கிடையாது. சுல்தானை எதிர்ப்ப‌வ‌ர்க‌ள் சிறையில் அடைக்க‌ப் ப‌டுகின்ற‌ன‌ர். - கலையரசன் ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளில் 50 வ‌ருட‌ங்க‌ள் ச‌ர்வாதிகார‌ ஆட்சி ந‌ட‌த்திய‌ க‌பூஸ் (Qaboos) ம‌றைவு குறித்து ஊட‌க‌ங்க‌ள் இர‌ங்க‌ல்பா பாடி ஓய்ந்து விட்ட‌ன‌. அநேக‌மாக‌ எல்லா ஊட‌க‌ங்க‌ளும் அவ‌ரைப் ப‌ற்றி ந‌ல்ல‌தாக‌வே சொல்லி புக‌ழார‌ம் சூட்டின‌. சமூக வலைத்தளங்களில் கூட எதிர்மறையான விமர்சனத்தைக் காணவில்லை. யாரும் ச‌ர்வாதிகாரி என்ற‌ சொல்லை பாவிக்க‌வில்லை. ஏனென்றால் க‌பூஸ் மேற்க‌த்திய‌ நாடுகளுக்கு விசுவாச‌மான‌ அரசிய‌ல் த‌லைவ‌ர். அதனால் அவர் இறந்த பின்னரும் போற்றப் பட்டார். ஈராக்கை 24 வ‌ருட‌ங்க‌ள் ஆண்ட‌ ச‌தாம் ஹுசைன் தூக்கிலிட‌ப் ப‌ட்ட‌ நேர‌த்திலும், லிபியாவை 42 வ‌ருட‌ங்க‌ள் ஆண்ட க‌டாபி கொல்ல‌ப் ப‌ட்ட‌ நேர‌த்திலும், இதே ஊட‌க‌ங்க‌ள் மூச்சுக்கு முன்னூறு த‌டவை ச‌ர்வாதிகாரி என்று கூறின‌. அவர்கள் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது, இறந்த பின்னரும் இரக்கமில்லாது தூற்றப் பட்டனர். ஆனால் ஓமானில் 50 வ‌ருட‌ங்க‌ள் கொடுங்கோல் ஆட்சி நடத்தி

பல்கேரியா : ஓர் அறிமுகம் ! | கலையரசன்

Image
உலகின் பல பகுதிகளில் இனப்பிரச்சினை உள்ளது. இடம், மொழி, இனங்கள் வேறு வேறாக இருந்தாலும் அவற்றில் அடிநாதம் ஒன்றுதான் என்பதை விளக்குகிறார் கட்டுரை ஆசிரியர். “உல‌கில் த‌மிழ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே இனப் பிர‌ச்சினை இருப்ப‌தாக‌” நினைத்துக் கொண்டிருக்கும் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளை ப‌ல்கேரியாவுக்கு கூட்டிச் சென்று காட்ட‌ வேண்டும். இங்கும் அதே இன‌ப்பிர‌ச்சினை. மொழி ம‌ட்டும்தான் வேறு. ம‌ற்ற ப‌டி அர‌சியல் ஒன்று தான். அர‌சிய‌ல்வாதிக‌ளின் பேச்சுக‌ளும் கேட்டால் ஒரே மாதிரித் தான் இருக்கும். இல‌ங்கையில் உள்ள‌ சிங்க‌ள‌வ‌ர் – த‌மிழர் பிர‌ச்சினையை விட‌ ப‌ல்கேரிய‌ இன‌ப் பிர‌ச்சினை இன்னும் மோச‌மான‌து என‌லாம். அய‌ல் நாடுக‌ளும் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்டிருப்ப‌தால் சிக்க‌லான‌து. சுருங்க‌க் கூறின் : பெரும்பான்மை ப‌ல்கேரிய‌ர்க‌ளுக்கும், சிறுபான்மை துருக்கிய‌ருக்கும் இடையிலான பிர‌ச்சினை. இல‌ங்கையில் சிங்க‌ள‌வர் போன்று ப‌ல்கேரிய‌ர்க‌ளும் த‌மிழ‌ர் போன்று துருக்கிய‌ரும் ஒரே மாதிரியான‌ அர‌சிய‌ல் க‌தையாட‌ல்க‌ளை கொண்டுள்ள‌ன‌ர். துருக்கிய‌ர்க‌ள், ப‌ல்கேரிய‌ பேரின‌வாத‌ ஒடுக்குமுறை ப‌ற்றி பேசுவார்க‌ள். அதே நேர‌ம், ப‌ல்கேரிய‌ர்க‌ள் துரு