Posts

Showing posts from May, 2021

பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதிபடுத்த, ஆசிரியர்களின் நடத்தைகள் சோதிக்கப்பட வேண்டும்.

Image
ஆன்லைன் கல்வியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாட்ஸப் மூலம் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் அனுப்புவது, பொருத்தமற்ற முறையில் ஆடைகள் அணிந்து வகுப்பில் கலந்து கொள்வது, மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு தனிப்பட்ட முறையில் சாட்டிங் செய்வது (அரட்டை அடிப்பது), அதில் மோசமான நகைச்சுவைகளை அனுப்புவது போன்ற ஆன்லைன் குற்றங்கள் பெருகி வருகின்றன. கே.கே.நகர் பி.எஸ்.பி.பி பள்ளி முன்னாள் மாணவர்களும், இந்நாள் மாணவர்களும் ராஜகோபாலன் என்ற ஆசிரியரால் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக புகாரளித்து இவ்விசயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். இது போல், பல மாணவர்கள் புதிய புகார்களை வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளனர். ராஜகோபாலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு பக்கம், தமிழக அரசு, கமிட்டி அமைத்து இது போன்ற பாலியல்ரீதியான வன்முறைகள் குறித்த புகார்களை விசாரித்தாலும், மறுபக்கம் பள்ளிகள் ஆன்லைன் கல்வி மூலம் எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரக்‌ஷித் தாண்டன் என்ற இணைய பாதுகாப்பு நிபுணர் கூறுகையில்,  “கடந்த ஆண்டு கோரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில்

பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றும் சங்கிகள்!

Image
பத்ம சேஷாத்ரி பால பவன் ( PSBB ). சென்னையில் உள்ள பிரபல பள்ளி . நடுத்தர , உயர் நடுத்தர மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளி . மக்களை பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வாகப் பார்க்கும் பார்ப்பனிய நஞ்சை விதைக்கும் பள்ளி . இப்போது மக்களின் கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கிறது . காரணம் , பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததற்காக அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால் கைது செய்யப்பட்டிருக்கிறார் . ஆன்லைன் வகுப்பில் அரைகுறை ஆடையுடன் இருப்பது . மாணவிகளின் புகைப்படங்களை அனுப்பச் சொல்வது . ஆபாச தளங்களின் லிங்க்குகளை அனுப்புவது . சினிமாவுக்கு போகலாமா என கூப்பிடுவது . மாணவிகளின் உடலமைப்பை கிண்டல் செய்வது . மாணவிகளுக்கு உடலளவிலும் , மனதளவிலும் தொல்லை தருவது என இவர் மீதான புகார்கள் நீள்கின்றன . முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்யப்படுள்ளான் இக்காமுகன் . இதைத் தொடர்ந்து 30- க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவிகள் புகார் அளித்திருந்தனர் . இன்று முன்ன