Posts

Showing posts from June, 2022

சுயவிமர்சனம் - திருத்தப்பட்ட பதிவு!

Image
  அன்பார்ந்த தோழர்களே! வினை செய் வலைப்பக்கம் மற்றும் முகநூல் பக்கத்தில் தோழர் கணேசன் பற்றி இளஞ்செழியன் என்பவர் எழுதியிருந்த இரங்கற்பாவில் அவரது இறுதி காலத்தில் சாதிய கண்ணோட்டத்துடன் செயல்பட்டதாக கருத்தை பதிவு செய்திருந்தார். தோழர் கணேசன் செயல்பட்ட அமைப்பு வாழ்க்கை முறையின் மீது அவதூறு செய்கின்ற வகையில் சாதிய சிந்தனை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது பரிசீலனை இன்றி வெளியிட்டதை தவறு என சுயவிமர்சனமாக உணர்கிறோம். இத்தகைய கண்ணோட்டத்தில் இரங்கற்பா எழுதிய இளஞ்செழியன் என்ற தோழருக்கும் இது பற்றி விமர்சனமாக சுட்டிக் காட்டி உள்ளோம். அவரது தனிப்பட்ட புரிதல்களின் அடிப்படையில் தான் எழுதிய கவிதை வரிகளின் தவறுதலாக உண்மைக்கு மாறான அர்த்தத்தை கொடுக்கும் வகையில் எழுதிய தனது தவறை உணர்ந்து மீண்டும் அவர் எழுதிக் கொடுத்த வரிகளை இங்கே பதிவிடுகிறோம். ஆசிரியர் குழு, வினை செய். தோழனே! கணேசனாய் களமாடிய அன்பழகனே! இப்படி ஒரு இரங்கல் தங்களுக்கு தெரிவிக்கும் அவல நிலை ஏற்படும் என இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை ஒருபோதும் எண்ணியதில்லை. கல்லூரியில் வெளிவந்த நாள் முதல் கரம் பிடித்து எமை அரவணைத்து உலகை புரிந்து கொள்ளும் மார

உளவுத் துறையாலும், உட்கட்சி பூசல்களாலும் சிதைக்கப்படும் கம்யூனிஸ்ட் கட்சி. பாகம் - 2

Image
 காலனிய நாடுகளிலும், முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவம் போன்ற எந்த நாடுகளாக இருந்தாலும் அந்த நாட்டில் ஆட்சி புரிகின்ற அரசு கட்டமைப்பு பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது என பிரச்சாரம் செய்து மக்களை புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குகின்ற செயல்திட்டத்தை முன்வைத்து போராடுவது கம்யூனிச இயக்கங்கள் மட்டுமே. எனவே, கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் அந்த நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசின் கூலிப்படைகளான போலீஸ், உளவுத்துறை மற்றும் இராணுவத்தினரால் எப்போதும் வேட்டையாடப்படுகின்ற கட்சியாகவே உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஐந்தாம் படைகளை உருவாக்கி முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களை ஆள்காட்டி வேலை செய்கின்ற 'திருப்பணிக்கு' பொருத்தமானவர்களை பிடிப்பதற்கு உளவுத்துறை எப்போதும் முன்னுரிமை கொடுக்கிறது. அது சாத்தியம் இல்லாத இடங்களில் தானே நேரடியாக கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களை போல உள்ளே நுழைந்து படிப்படியாக கட்சியின் செயல்திட்டங்களை கண்டுபிடிப்பது மட்டுமின்றி, குறிப்பாக அதை முன்வைக்கின்ற நபர்கள், அவர்களின் பொறுப்புகள், அவர்கள் வாழும் இடங்கள் ஆகியவற்றை உளவறிந்து ரகசிய கொலைக் குழுக்களிடம் ஒப்படைக்கி

உளவுத் துறையாலும், உட்கட்சி பூசலாலும் சிதைக்கப்படும் கம்யூனிஸ்ட் கட்சி!

Image
  “ஒரு மனிதன் கம்யூனிஸ்ட்டாக மாறுவது ஒன்றும் அற்புதம் இல்லை. ஆனால் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்டாக நீடித்து வாழ்வதுதான் அற்புதமான விஷயம்” என்று முன்வைத்தார் தோழர் மாசேதுங். பல்வேறு வர்க்கங்களில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு வரும் ஒவ்வொரு தோழரும் தனது பழைய வர்க்க வாழ்க்கையை மாற்றிக் கொண்டு பாட்டாளி வர்க்கமாக அல்லது அந்த நாட்டின் ஆகக்கேடாக ஒடுக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்நிலைக்கு தன்னை தாழ்த்திக் கொள்வது, வரக்க இறக்கம் செய்து கொள்வது ஆகியவற்றின் மூலம் மட்டுமே சிறந்த கம்யூனிஸ்டாக உருவாக முடியும். அவ்வாறு ஒரு தோழரை உருவாக்குவதில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைவர்களின் தொடர்ச்சியான துரோகத்தினாலும், கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு செயல்படுகின்ற அணிகளின் தியாகத்தினாலும் நிலைத்து நிற்கிறது. ஆனாலும் கூட அவ்வப்போது பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை தன்னை ஒரு மத பீடமாக கருதிக்கொண்டு ஜனநாயக மத்தியத்துவத்திற்கு கட்டுப்படாமல் தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளை முன்னிறுத்தி, நாயக பிம்பங்களை உருவா