ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இப்பொழுது ரூ.90 விரைவில் 100 ஐ எட்டிவிடும்!
ஒரு இந்திய குடிமகன் தான் சம்பாதிப்பதில் 30% (பத்து லட்சத்திற்கும் மேலாக) வரி கட்டவேண்டும். ஆனால், இந்த நாட்டில் கார்ப்பரேட்டுகளுக்கு வரி 22% கட்டினால் போதும். காரணம் கார்ப்பரேட்டுகளுக்கு இப்படி வரியை குறைக்காவிட்டால், தங்கள் நிறுவனங்களை எடுத்துக்கொண்டு பக்கத்து நாடுகளுக்கு ஓடிவிடுமாம். இப்படி கார்ப்பரேட்டுக்களுக்கு வரியை குறைப்பதால், நாட்டுக்கு மிகப்பெரிய வரி இழப்பு ஏற்படுகிறது. கொரானா ஊரடங்கு காலத்தில் பெரும்பாலோர் ஊதியம் இழந்து, தொழில் இழந்து வாழ்வா, சாவா என தவித்த பொழுது, 100 கோடீஸ்வரர்களின் சொத்து 15 லட்சம் கோடி சொத்து மதிப்பு கிடு கிடுவென உயர்ந்திருக்கிறது. இப்படி நேரடி வரியை (Direct Tax) குறைத்த மத்திய அரசு தான், பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பெட்ரொல், டீசல் மீதான வரியை (indirect Tax) குறைக்க மறுக்கிறது. கூடுதலாக சாவுங்கடா! என பெட்ரோல் மீது ரூ 2.50யும், டீசல் ரூ.4யும் வேளாண் செஸ் வரியாக வசூலிக்க போகிறேன் என நம்ம நிதி அமைச்சர் நிம்மி இந்த பட்ஜெட்டில் அறிவித்துவிட்டார். வேளாண் செஸ்ஸாக வசூலித்தால் மத்திய அரசே வைத்துக்கொள்ளலாம். மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க தேவையில்லை. ...