Posts

Showing posts from December, 2022

புதிய வகைப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பாசிசத்தைப் புரிந்து கொள்வோம்! பாகம் - 3

பேராசிரியர் பி ஜே ஜேம்ஸ். பாசிச எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவது பற்றி மேற்கூறிய சுருக்கமான வரையறுப்புக்களின் அடிப்படையில், பாசிச எதிர்ப்பு தாக்குதல் கடந்த கால அனுபவங்களில் இருந்து படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு மட்டுமல்லாமல், 21 - ஆம் நூற்றாண்டின் நிதி மூலதனத்தின் இயக்க விதிகளின் உறுதியான மதிப்பீட்டின் அடிப்படையிலும் ஒரு நாட்டின் குறிப்பானவற்றிலிருந்தும் தொடங்கப்பட வேண்டும். புதிய பாசிசம் என்பது புதிய தாராளவாதத்தின் கீழ் கார்ப்பரேட்-நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான பிரிவுகளின் ஆட்சி என்பது வெளிப்படையாகும். எனவே, ஆளும் வர்க்க/முதலாளித்துவக் கட்சிகள் அடிப்படையில் புதிய தாராளவாத நோக்குநிலை கொண்டவை என்றாலும், அவை அனைத்தும் பாசிச சக்திகள் அல்ல. அதோடு கூட, சட்டத்தின் ஆட்சி, முதலாளித்துவ ஜனநாயக உரிமைகள், கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், சுதந்திரமான - நியாயமான தேர்தலுக்காக நிற்கும் பிரிவுகள் போன்றவைகளும் அவற்றில் உள்ளன. இருப்பினும், புதிய தாராளவாதத்தின் வேர்களுடனும் கார்ப்பரேட் மூலதனத்துடனான தொடர்புகள், தேர்தல் அரசியலுடன் ஈடுபடுவது மட்டுமே செயல்பாட்டின் ஒரே வழிமுறையா

புதிய வகைப்பட்ட ஆர்எஸ்எஸ் பாசிசத்தைப் புரிந்து கொள்வோம்!

Image
புதிய வகைப்பட்ட ஆர்எஸ்எஸ் பாசிசத்தைப் புரிந்து கொள்வோம்!  பாகம் - 2  - பே ராசிரியர் பி ஜே ஜேம்ஸ் நன்றி கீற்று புதிய பாசிசத்தினை எப்படி அணுகுவது   இந்த நெருக்கடியான கட்டத்தில், புதிய பாசிசத்தின் பருண்மையான புரிதல் (அதாவது, பாசிசத்துடன் தொடர்புடைய பழைய விதிமுறைகளும், நடைமுறைகள் பொருத்தமற்றதாகிவிட்ட புதிய தாராளவாதத்தின் கீழ் பாசிசம்) பாசிச எதிர்ப்பு இயக்கத்தை கட்டி அமைப்பதற்கும் பாசிசத்தை தோற்கடிப்பதற்கும் இன்றியமையாதது. சந்தேகத்திற்கு இடமின்றி, மிக மிகப் பிற்போக்குத்தனமான கார்ப்பரேட் பெருநிறுவனங்கள்-நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்துடன் பாசிசத்தின் பிரிக்க முடியாத ஒருங்கிணைப்பு எனபது அதன் உலகளாவிய தன்மையாகும். எவ்வாறாயினும், பாசிசத்தின் தோற்றத்திற்கு அனைத்து சூழ்நிலைகளிலும் ஒரு நிலையான வடிவம் அல்லது வழிமுறை இருப்பதாகக் கருதுவது பிழையானது. மேலும் இது பாசிச எதிர்ப்பு போராட்டங்களை கட்டியெழுப்புவதற்கும் தடையாக இருக்கும். எடுத்துகாட்டாக, நிதி மூலதனத்தில் பாசிசத்தை அதன் உறுதியான அடித்தளங்கள் தொடர்பாக வரையறுத்த 7- ஆவது அகிலத்தின் (Comintern) காங்கிரஸ் (1935), காலனித்துவ, அரை-காலனித்துவ (அரை காலனி

புதிய வகைப்பட்ட ஆர்எஸ்எஸ் பாசிசத்தைப் புரிந்து கொள்வோம்!

Image
பாசிசம் குறித்த வரையறையில் பேராசிரியர் பிஜே ஜேம்ஸ் முன்வைக்கின்ற சில அம்சங்களில் நாங்கள் வேறுபடுகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை நாட்டை மறு காலனி ஆக்குவதற்கு ஏகாதிபத்திய நிதி மூலதனம் தீவிரமாக முயற்சித்து வருகிறது.  இந்த மறு காலனியாக்கத்தின் தீவிர தன்மையே கார்ப்பரேட்-காவி பாசிசமாக வெளிப்படுகிறது என்று நாங்கள் கருதுகிறோம். அதே சமயத்தில் கார்ப்பரேட் பாசிசமும், காவி பாசிசமும் ஒன்றிணைந்த வீரிய ஒட்டு ரக பாசிசமாக வெளிப்படுகிறது என்பதே எமது நிலைப்பாடாகும். கார்ப்பரேட்-காவி பாசிசம் பற்றி விளக்கமாக பல்வேறு ஆவணங்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளோம். எனினும் பேராசிரியர் பிஜே ஜேம்ஸ் பாசிசம் பற்றி ஆற்றியுள்ள உரை பாசிசத்தை பற்றி புரிதலை மேம்படுத்திக் கொள்வதற்கும் அதை எதிர்த்து போராடுவதற்கான பரந்துபட்ட ஐக்கிய முன்னணி ஒன்றை கட்டுவதற்கு தேவையான சித்தாந்த பலத்தை பெறுவதற்கும் உதவும் என்ற நோக்கத்துடன் இந்த கட்டுரையை வெளியிடுகிறோம். புதிய வகைப்பட்ட ஆர்எஸ்எஸ் பாசிசத்தைப் புரிந்து கொள்வோம்! -பேராசிரியர் பி ஜே ஜேம்ஸ் நன்றி - கீற்று பின்னணி இந்தியாவில் அரச அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பிஜேபி, உலகின் மிக நீ

பாசிசமும், நவீன பாசிசமும்!

Image
2008 ஆண்டு முதல் மீள முடியாத நெருக்கடியில் சிக்கிய ஏகாதிபத்திய முதலாளித்துவம் மற்றும் நிதி ஆதிக்க கும்பல்கள் உலகம் முழுவதும் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக அரசு கட்டமைப்பைக் கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோரிக்கைகளின் அடிப்படையில் தோன்றிய முதலாளித்துவம்  பாசிசமாக வடிவெடுத்து உள்ளது. பாசிசம் என்பதே முதலாளித்துவத்தின் தோல்வியிலிருந்து, ஆள தகுதியற்ற நிலைமைகளிலிருந்து பிறக்கிறது. சுதந்திரப் போட்டியை முன்வைத்து நிலப்பிரபுத்துவ உற்பத்திக் கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கிய முதலாளித்துவம், ஏகபோக உற்பத்தியின் மூலம் ஒரு சில நிதி ஆதிக்க கும்பல்களின் ஆதிக்கத்தின் கீழ் சிக்கித் தவித்து வருகிறது. திணறி வருகிறது. தற்போதையச் சூழலில் நிதி மூலதனத்தின் ஆகக் கேடான இழிந்த வடிவமாக உருவெடுத்துள்ள பாசிசம், 1930 களில் ஜெர்மனியில் ஹிட்லர், இத்தாலியில் முசோலினி போன்றவர்கள் முன்வைத்தப் பாசிசம் மற்றும் நாசிசம் என்பதைப் போல அவ்வளவு இளமையானவர்கள் அல்ல. பாசிசத்தை வீழ்த்துவதற்கு ஐக்கிய முன்னணி தந்திரம் என்றக் கோட்பாட்டை முன்வைத்த ஜார்ஜ் டிமிட்ரோவ் தனது உரையில் பாசிசத்தின் தோற்றத்த

தோழர் ஸ்டாலின் நினைவு தினத்தில் உறுதி ஏற்போம்!

Image
  நன்றி : சர்வதேசியவாதிகள்   தோழர் ஸ்டாலின். ஏகாதிபத்திய உலகம் அஞ்சி நடுங்குகின்ற பெயர். கட்சிக்குள் வலது, இடது சந்தர்ப்பவாதப் போக்குகளை எதிர்த்து முறியடித்து போல்ஸ்விக்மயமான, உறுதியானப் பாட்டாளி வர்க்கக் கட்சியமைப்பைக் கட்டி அமைத்தவர் என்பதால் திருத்தல்வாத, நவீன திருத்தல்வாத, அதிநவீன திருத்தல்வாத, சந்தர்ப்பவாதச் சிந்தனையுடையவர்கள் அஞ்சி நடுங்கும் பெயர். தோழர் ஸ்டாலின் நினைவு தினத்தில் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் உறுதியானக் கட்சி அமைப்பைக் கட்டுவதற்கு உறுதி ஏற்போம். இந்தியாவில் செயல்படும் இடதுசாரி அமைப்புகளில் இன்றைய தருணத்திற்குத் தேவையான கார்ப்பரேட்-காவி பாசிச அரசியலை முறியடிப்பதற்கு பொருத்தமான அரசியலை முன்வைப்பதில் பல்வேறு குழப்பங்களும் திருத்தல்வாத போக்குகளும் தலை விரித்தாடுகின்றன. தோழர்.ஸ்டாலின் முன்வைத்த உறுதியான பாட்டாளி வர்க்கக் கட்சியைக் கட்டுவதற்குப் பதிலாக தொள தொளப்பான அமைப்பாக மாற்ற முயற்சிக்கும் குட்டி முதலாளித்துவ தாராளவாதிகள், ஆளும் வர்க்கத்துடன் நேரடியாகவோ, ரகசியமாகவோ கைகுலுக்கிக் கொள்ளும் பிழைப்புவாதிகள், செங்கொடியை வைத்துக்கொண்டு செங்கொடிக்கு எதிராக சதிராடுகின்ற

அறிவாளிகளின் அந்தரங்கம் – லெனின். பாகம் 2

Image
  அறிவாளிகளின் விஷயமோ முற்றிலும் வேறானது. தனது சக்தியை வைத்துப் போரிடாமல் வாதங்களை வைத்துப் போரிடுகிறார். அவரது ஆயுதங்களோ அவரது சொந்த அறிவு, சொந்ததிறமை, சொந்த நம்பிக்கைகள் மட்டுமே; எந்த ஒரு பதவியையும் கூட அவர் தனது சொந்தப் பண்புகளால் மட்டுமே அடையமுடியும். எந்த ஒரு வெற்றிகரமான நடவடிக்கைக்கும் தனது தனித்துவத்தைக் கட்டவிழ்த்து விடுவதே அவருக்கு முக்கிய நிபந்தனையாகப்படுகிறது. முழுமைக்குத் தம்மைக் கீழ்ப்படுத்தி ஒரு பகுதியாக விளங்குவதற்கு அவர் மிகுந்த சிரமத்தின் பேரில்தான் ஒப்புக் கொள்கிறார். அதுவும் கூட அவசியத்தினால் ஏற்றுக் கொள்கிறாரே தவிர, ஆர்வத்தினால் அல்ல. ஒழுங்கு கட்டுப்பாடு மக்கள் திரளுக்கு மட்டுமே அவசியம் என்று அவர் அங்கீகரிக்கிறார்; ஆனால் தேர்ந்த உள்ளங்களுக்கல்ல. தம்மை பின்னதாகச் சொல்லப்பட்டவர்களோடு சேர்த்துக் கொள்கிறார். ”நீட்சேயின் தத்துவமே அறிவாளியின் உண்மைத் தத்துவமாகும். அதி மனிதன் கோட்பாட்டையும் சேர்த்து அத்தத்துவத்தில் தனிமனித ஆளுமையை நிறைவு செய்வதே எல்லாம்; இப்படிப்பட்ட தனித்துவத்தை பெரியதொரு சமூக நோக்கத்திற்குக் கீழ்ப்படுத்துவது இழிவானது, கேவலமானது. இத்தத்துவமே அறிவாளியை பாட

மார்க்சியத்தை ஏற்கிறேன்; ஆனால் கட்சியில் இருக்க மாட்டேன்! அறிவாளிகளின் அந்தரங்கம் – லெனின் பாகம் - 1

Image
மார்க்சியத்தை ஏற்கிறேன்; ஆனால் கட்சியில் இருக்க மாட்டேன் என்று ஒருவர் கூறினால் அவர் வேறு எதுவாகவோ இருக்க முடியுமே தவிர கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் உயிரே கட்சி அமைப்புதான் என்றார் லெனின். பல்வேறு போக்குகள் கொண்ட குழுக்களாக இருந்த ரசிய சமூக ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது மாநாடு 1903-இல் நடந்தது. அதில் கட்சி கட்டுவது குறித்த பாட்டாளிகளின் கண்ணோட்டம், செயல்முறை, அமைப்புமுறை பற்றி உறுதியுடன் வழக்காடிய லெனின் அதையெல்லாம் தொகுத்தளித்த நூல்தான் ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அறிவாளிகள் வழியா? பாட்டாளிகள் வழியா? எது சரி என்பதை சுவைபட விவரிக்கிறது இந்நூல். மாநாட்டில் லெனினின் வழியை ஏற்ற பெரும்பான்மையினர் போல்ஷ்விக்குகள் என்று பிரிந்தது அப்போதுதான். அன்று மட்டுமல்ல, இன்றும் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகளும், அறிவாளி வர்க்கமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கிறது, இனியும் அப்படித்தான். ஏன்? அறிவாளிகளின் சமூக, உளவியல் பின்னணியை ‘காவுட்ஸ்கி’யின் கட்டுரையின் மூலம் விளக்கி பதில் தருகிறார் லெனின். அறிவாளிகளின் பண்புகள் ‘மண்ணுக்கேற்றபடியெல்லாம் மாறுவதில்லை’,

சாவர்க்கர்: முகத்திரைக்குபின்னால் ! பாகம் -2

Image
மகாராஷ்ட்ராவில், முதலமைச்சர் சுசில் குமார் ஷிண்டே,  சாவர்க்கர் குறித்த ஐயரின் விமர்சனங்களுக்கு எதிராகக் கோபத்துடன் எதிர்வினையாற்றியது மட்டுமல்ல, மற்றொரு  காங்கிரஸ் தலைவரான ஆர்.அதிக், சாவர்க்கரைப் புகழ்ந்து,  கையெழுத்துடன்கூடிய முகப்புக் கட்டுரை ஒன்றையே சிவ சேனா  இதழான சாம்னா (Saamna)வில் எழுதினார். சாவர்க்கர்வாதிகள் கூட்டத்துடன் இவ்வாறு காங்கிரசும்  இணைந்து கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமாகும். வீர் சங்வியின்  கூற்றுப்படி, “காங்கிரசின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டிருக்கும்  எவருக்கும், ஏன், அடிப்படை மதச்சார்பின்மைக் கொள்கையை  ஏற்றுக்கொண்டிருப்பவர்களுக்கும், வீர் சாவர்க்கரை வணங்குவது  கடினம். காங்கிரசார் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சிவ சேனை ஆகியவற்றின் சித்தாந்தங்களோடு ஒத்துப்போகவில்லை எனினும்,  திடீரென்று சாவர்க்கரை துதிபாடத் தொடங்கியிருக்கிறார்கள்.”  விடுதலைப் போராட்டத்திற்குத் துரோகம் இழைத்த ஒரு நபர்  மட்டுமல்ல; காந்தியைக் கொல்வதற்குக் கருவியாகவும் இருந்த ஒரு நபருக்கு ஆதரவாக காங்கிரசார் குரல் கொடுப்பது மிகவும்  கொடுமையாகும்.  இன்றையதினம் உள்ள காங்கிரஸ் தலைமை, காந்தி, நேரு,  வல்லபாய் பட்டேல் ஆகிய

தனிச்சொத்துடைமை எனும் வைரஸ்!

Image
இன்றைக்கு ஏறக்குறைய பனிரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பனியுகம் நிலவியது என அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  6,50,000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அந்தப் பனியுகக் காலத்தில் பூமிக்கு அடியில் புதைந்து போன வைரஸ்களைப் பற்றி பிரான்ஸ் - ஜெர்மன் - ரஷ்ய ஆய்வாளர்கள் குழு ஒன்று தொடர்ந்து ஆய்வு செய்து ரஷ்யாவில் உள்ள சைபீரிய நிரந்தரப் பனிப்பகுதியின் அடியில் நாம் இதுவரை கண்டிராத 13 வைரஸ் கிருமிகளை அந்தக் குழு இனம் கண்டது. அந்தக் கிருமிகளை ஆய்வகத்தில் வைத்து தொடர்ந்து ஆய்வு செய்ததன் விளைவாக அது குறிப்பிட்ட சூழலில் மீண்டும் உயிர் பெற்று எழுவதாக நவம்பர், 2022 ஆம் ஆண்டு அந்த ஆய்வுக்குழு அறிவித்தது. மனித இனம் இதுவரைக் கண்டிராத புதுப்புது வகையான நோய்களுக்கும் இத்தகைய உறைப் பனி அடியில் புதைந்துக் கிடக்கும் கிருமிகளுக்கும் தொடர்பு உள்ளது என்பதே அறிவியல் உண்மை.  பல்லாயிரம் ஆண்டுகளாக உறைந்துக் கிடக்கும் அத்தகையக் கிருமிகளை, தனது இலாபவெறி கொண்ட உற்பத்தி முறைகளுக்காக புவியை வெப்பமாக்கி, பூமிப்பந்தைப் பாதுகாத்து வரும் பனிப்பாறைகளை உருகச் செய்வதன் மூலம் வெளிக்கொண்டு வருகிறது ஏகாதிபத்திய முதலாளி

சாவர்க்கர்: முகத்திரைக்குபின்னால் !

Image
நன்றி மார்க்சிஸ்ட் ரீடர் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள, முகத்திரை விலக்கப்பட்ட சாவர்க்கர் என்ற நூலின் அறிமுக உரை இங்கே தரப்படுகிறது ) “வீர் (வீரம்) சாவர்க்கர்” என்னும் விநாயக் தாமோதர் சாவர்க்கர், தற்போது தேசத் தந்தை, மோகன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு இணையாகத் தூக்கி நிறுத்தப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் அவருடைய படத்திற்கு எதிரே வைக்கப்பட்டிருக்கிறார். காந்தியைக் கொலை செய்ததில் சாவர்க்கருக்கு இருந்த பங்கு குறித்து, அன்றைய தினம் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் கூறியவற்றை அறிந்துகொள்வது இப்போது பொருத்தமாக இருக்கும். அவர், 1948 பிப்ரவரி 27 அன்று நேருவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “இந்து மகா சபாவின்; சாவர்க்கரின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிய வெறித்தனமான பிரிவு, சதித்திட்டம் தீட்டி, இக்கொடுஞ்செயல் நடைபெறுவதைப் பார்த்தது.” சாவர்க்கரின் உருவப்படம் காந்தியின் படத்திற்கு அருகே வைக்கப்பட்டிருப்பது இந்துத்துவாவை இன்றையதினம் பின்பற்றுவோரால் சாவர்க்கரைத் துதிபாடும் வெறித்தனமான கூட்டத்தாரின் பிரச்சாரத்தின் விளைவேயாகும். சாவர்க்கரைப் போற்றிப் புகழ்தல்