Posts

Showing posts with the label அரச

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இப்பொழுது ரூ.90 விரைவில் 100 ஐ எட்டிவிடும்!

Image
ஒரு இந்திய குடிமகன் தான் சம்பாதிப்பதில் 30% (பத்து லட்சத்திற்கும் மேலாக) வரி கட்டவேண்டும். ஆனால், இந்த நாட்டில் கார்ப்பரேட்டுகளுக்கு வரி 22% கட்டினால் போதும். காரணம் கார்ப்பரேட்டுகளுக்கு இப்படி வரியை குறைக்காவிட்டால், தங்கள் நிறுவனங்களை எடுத்துக்கொண்டு பக்கத்து நாடுகளுக்கு ஓடிவிடுமாம். இப்படி கார்ப்பரேட்டுக்களுக்கு வரியை குறைப்பதால், நாட்டுக்கு மிகப்பெரிய வரி இழப்பு ஏற்படுகிறது. கொரானா ஊரடங்கு காலத்தில் பெரும்பாலோர் ஊதியம் இழந்து, தொழில் இழந்து வாழ்வா, சாவா என தவித்த பொழுது, 100 கோடீஸ்வரர்களின் சொத்து 15 லட்சம் கோடி சொத்து மதிப்பு கிடு கிடுவென உயர்ந்திருக்கிறது. இப்படி நேரடி வரியை (Direct Tax) குறைத்த மத்திய அரசு தான், பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பெட்ரொல், டீசல் மீதான வரியை (indirect Tax) குறைக்க மறுக்கிறது. கூடுதலாக சாவுங்கடா! என பெட்ரோல் மீது ரூ 2.50யும், டீசல் ரூ.4யும் வேளாண் செஸ் வரியாக வசூலிக்க போகிறேன் என நம்ம நிதி அமைச்சர் நிம்மி இந்த பட்ஜெட்டில் அறிவித்துவிட்டார். வேளாண் செஸ்ஸாக வசூலித்தால் மத்திய அரசே வைத்துக்கொள்ளலாம். மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க தேவையில்லை. ...

இருவர் செத்த பிறகு கால்வாயை மூடும் பணி!

Image
மதுரவாயில் பகுதியை ஒட்டி புறவழிச் சாலை (Bypass Road) கடந்து செல்லும். அந்த பாலத்திற்கு கீழே உள்ள சாலையை நொளம்பூர், முகப்பேர், அயனம்பாக்கம், அம்பத்தூர், ஆவடி என பல பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் அந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த கூவம் கரையோரம் தான் எம்.ஜி.ஆர் பல்கலை கழகத்தில் படிக்கும் மாணவர்களின் ஹாஸ்டல்களும் இருக்கின்றன. அந்த மாணவர்களும் அந்த பாலத்தின் வழியே தான் தினம் போய்வருகிறார்கள். அந்த பாலத்திற்கு அடியே கூவம் ஓடுகிறது. அந்த கூவத்திற்கு மேலே உள்ள பாலம் தாழ்வானது. அந்த பாலத்திற்கு எந்த தடுப்பும் கிடையாது. அந்த பகுதியில் வெளிச்சமும் கிடையாது. அங்கு கடந்து செல்பவர்கள் கொஞ்சம் பிசகினாலும் கூவத்தில் கவிழ்ந்துவிட கூடும். புறவழிச் சாலையில் பெய்கின்ற மழையும், அந்த பகுதியில் பெய்கின்ற மழையும் நொளம்பூர் பகுதியிலிருந்து வரும் திறந்த வழி கால்வாய் வழியே தான் கூவத்திற்கு வந்து சேரும். அவ்வப்பொழுது எங்கிருந்தோ கழிவுநீரை எடுத்து வரும் லாரிகள் அந்த கால்வாயில் கலந்துவிடும் காட்சியையும் அவ்வபொழுது பார்க்கமுடியும். பலமுறை மக்கள் புகாரளித்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. கடந...

கேஸ் மானியம் : கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி போனது!

Image
மானியத்தை அவரவர் வங்கி கணக்கில் போடுவதாக பிரதமர் சொன்னார். 2018ல் ஜூனில் ரூ. 230.66 மானியம் 2021ல் ஜனவரியில் ரூ. 24.95 மானியம். அதையும் வங்கியில் வரவு வைக்கிறார்களா நம்மில் யாரும் சரிபார்ப்பதில்லை! மானியத்தை சொல்லி, சொல்லி ஆதாரை குறுக்கு வழியில் மக்கள் தலையில் கட்டினார்கள். எதிர்காலத்தில் மானியம் இருக்காது! ஆதாரை வைத்து நம்மை எல்லாம் நசுக்கப் போகிறார்கள் என்றோம். இதோ கேஸ் மானியத்தை இன்னும் சில மாதங்களில் அநேகமாக இல்லாமல் செய்துவிடுவார்கள்!