Posts

Showing posts from May, 2022

புதிய ஜனநாயகம். (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) வெளிவந்துவிட்டது.

Image
அன்பார்ந்த வாசகர்களே புரட்சிகர, ஜனநாயக சக்திகளே! பிப்ரவரி 2020 உடன் நின்றுபோன எமது புதிய ஜனநாயகம் இதழ் மே மாதம் 2022 முதல் முறையாக வெளிவருகிறது என்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதன்படி தற்போது அச்சு இதழாக புதிய ஜனநாயகம் மே மாத இதழ் வெளிவந்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் மார்க்சிய-லெனினிய அரசியலை கொண்டு சென்று தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கி செயல்பட்ட எமது அரசியல் வெகுசன பத்திரிக்கை, அதல் அரசியல் தலைமை குழுவின் தவறுகளினால் தடைபட்டு நின்று இருந்தது. தற்போதைய அரசியல் சூழலில் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர அரசியலை கொண்டு செல்வதற்கும் அதன் அடிப்படையில் பரந்துபட்ட மக்களை புரட்சிகர அமைப்பின் கீழ் அணி திரட்டுவதற்கும் புதிய ஜனநாயகம் இதழ் தொடர்ந்து பணியாற்றும் என்பதை உறுதி அளிக்கிறோம். கார்ப்பரேட்-காவி பாசிசம் ஏறித் தாக்கி வரும் இன்றைய சூழலில் ஒட்டு மொத்தமாக நாட்டின் பிரதான எதிரியாக ஆர் எஸ் எஸ்-பாஜக செயல்படுகிறது என்பதை முன் வைக்கிறோம். 90-களில் நமது நாட்டின் மீது திணிக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி நாட்டை மறுக

மே 25 நக்சல்பரி இயக்கத்தின் எழுச்சி நாள்.

Image
நக்சல்பாரி இயக்கத்தின் முழுமையான வரலாற்றை இந்த சிறு வெளியீடு தெளிவாக முன்வைக்கிறது.  எழுபதுகளில் நக்சல்பரி இயக்கம்  முன்வைத்த போது நிலவிய சமூக பொருளாதார நிலைமைகளுக்கும், 60 ஆண்டுகளுக்குப் பின்பு இந்திய சமூக கட்டமைப்பில் நிலவுகின்ற அரசியல், பொருளாதார நிலைமைகளுக்கும் பாரிய வேறுபாடு உள்ளது. எனினும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் பாதைக்கு வெளியில் மக்களை புரட்சிக்கு அணி திரட்டும் மகத்தான இயக்கம் நக்சல்பரி மட்டுமே. 2008 ஏகாதிபத்திய முதலாளித்துவ கட்டமைப்பு மீள முடியாத நெருக்கடியில் விழுந்த பிறகு காலனி, அரைக்காலனி, நவீன காலனி மற்றும் மறுகாலனிய நாடுகளில் அரசியல், பொருளாதார, இராணுவ மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக வழிமுறைகள் சாத்தியமில்லை என்பதால் பாசிச ஒடுக்கு முறையை தீர்வாக முன்வைக்கிறது ஏகாதிபத்திய முதலாளித்துவம். இந்தியாவில் 2014 இல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கார்ப்பரேட்டுகளுக்கு மூர்க்கமாக சேவை செய்வதும், தனது சொந்த சித்தாந்தமான பாசிச பார்ப்பன பாசிசத்தை ஒன்று கலந்து கார்ப்பரேட் - காவிப் பாசிசம் மூலம் மக்களை அடக்கி ஒடுக்குகிறது. இத்தகைய குறிப்பான சூழலில் தேர்தல் அரசியலி

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் கொலைகார நிறுவனம் மீண்டும் செயல்பட துடிப்பது ஏன்?

Image
தூத்துக்குடியில் 15 உயிர்களை கொன்று குவித்த ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்படப் போவதாக அதன் அதிபர் அனில் அகர்வால் மீண்டும், மீண்டும் கார்ப்பரேட்டுகளுக்கு உரிய திமிர் தெனாவெட்டுடன் அறிவிக்கிறார். தூத்துக்குடி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள 30 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை ஒழிக்கும் கொடூரனாகவும், ஒட்டுமொத்த இந்திய நாட்டின் எதிரியாகவும் உள்ள அனில் அகர்வால் எப்படி துணிச்சலுடன் இவ்வாறு அறிவிக்க முடிகிறது என்று பார்த்தால் வலுவாக கட்டப்பட்டுள்ள அதன் பின்னனியை புரிந்து கொண்டால் மட்டுமே இந்த திமிரான அறிவிப்புகளை எதிர்த்து முறியடிக்க முடியும். பார்ப்பன (இந்து) மதத்தின் முக்கிய சித்தாந்தங்களில் ஒன்றான வேதத்தின் அந்தத்தை விளக்குகின்ற வகையில் வேதாந்தா என்ற பெயருடன் களம் இறங்கியுள்ள ஸ்டெர்லைட் நிறுவனம் இந்தியாவிலுள்ள தேசங்கடந்த தரகுமுதலாளிகளில் முன்நிலையிலுள்ள கொடூரமான கொலைகார கார்ப்பரேட் நிறுவனமாகும். வேதத்தின் ‘அந்தமும்’, நிதிமூலதனத்தின் ‘காந்தமும்’ இணைந்த வேதாந்தா! இந்தியாவில் இயங்கும் வேதாந்தா குழுவின் அதிபரான அனில் அகர்வால் 1972 இந்த நிறுவனத்தை நிறுவினார். 40 ஆண்டுகளுக்கு முன்பு

பேரறிவாளன் விடுதலை:நிலை நாட்டப்பட்ட நீதியும் மறைக்கப்பட்ட உண்மைகளும்!

Image
மு ன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி      கொலையை ஒரு துன்பியல் சம்பவம் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு இடையில் தெரிவித்தார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் . ஆனால் அந்தக் கூற்று மிகைப்படுத்தப்பட்ட தன்னிலை விளக்கமாகும் . இலங்கையின் மீது இந்திய ஆளும் வர்க்கங்களின் அணுகுமுறை , குறிப்பாக இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியாகவே கருதுகின்ற அ கண்ட பாரத கண்ணோட்டம் நேருவின் காலத்தில் இருந்தே துவங்கிவிட்டது . அதுவும் 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் வாங்கியதாக கூறிக்கொள்ளும் முன்னரே அந்த ஆக்கிரமிப்பு நோக்கம் வெளிப்பட்டு விட்டது. அது தனியே விவாதிக்கப்பட வேண்டிய விவகாரமாகும்.      "அடையாளம் தெரியாத அளவிற்கு துண்டுதுண்டாக பி ய் த் தெ றிய ப் பட்டு ராஜீவ் காந்தி அழித்தொழிக்கப்பட்டு விட்டார் . அவரது எலும்புகளையும் சதைகளையும் மூவர்ணக் கொடியில் மூட்டை கட்டி அள்ளிப் போட்டுத்தான் சடலம் எடுத்துச் செல்லப்பட்டது . நாட்டையே சூறையாடிய ஒரு ஊதாரி யும் , பீரங்கி திருடனும் , ஏகாதிபத்திய அடிவருடி ம், கொலைகார பாசிஸ் டு மான ஒரு நபர் இப்படி சாகடிக்கபடுவது பொருத்தமானதுதான் . அதை க் கண்டிப் தோ,