Posts

Showing posts with the label சினிமா

The Court (2014) மராத்தி

Image
தலித்துகளின் வாழ்க்கை மிக மோசமாக இருக்கிறது. இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு பதில் செத்துப் போகலாம் என மனம் கொதித்து பாடல் எழுதி மேடைகளில் பாடுகிறார் ஒரு நாட்டுப்புற பாடகர்.  தலித்துகள் மத்தியில் எழுச்சி வந்துவிடும் என பயந்து, “அவர் பாடியதால் ஒரு சாக்கடை அள்ளும் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார் ” ஆகையால் தற்கொலைக்கு தூண்டியதாக என ஒரு பொய்வழக்கை போட்டு சிறையில் தள்ளுகிறார்கள்.   அந்த வழக்கை கையாளும் அரசு தரப்பு வழக்கறிஞர், பாடகரின் விடுதலைக்காக போராடும் ஒரு வழக்கறிஞர், நீதிபதி, நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை அதன் இயல்புகளோடு காட்டுகிறார்கள்.   பிறகு அவர் விடுதலையானாரா என்பதை முழுப்படமும் விவரிக்கிறது.   அரசு தரப்பு வழக்கறிஞர் ஒவ்வொரு முறை வழக்காடும் பொழுதும், சட்ட நுணுக்கங்களை மேற்கோள் காட்டி பெயில் கிடைக்காமல் செய்கிறார். அவர் தன் வேலையை ஒரு வழக்கமான அலுவல் வேலையாக பார்க்கிறாரே தவிர ஒரு மனிதன் வாழ்க்கை தன் கையில் உள்ளது என்ற பொறுப்புணர்ச்சி அவரிடம் சிறிதும் இல்லை.   பாடகரின் தரப்பு வழக்கறிஞர் பொறுமையாக போராடுகிறார். கோபப்பட்டோ அவசரப்பட்டோ ஒன்றும் ஆகப்போவ...

Joji (2021) மலையாளம்

Image
கதை.  கேரளத்தின் ஒரு வளமான காட்டுப் பகுதியில் தனியாக ஒரு பெரியவீடு.  ஒரு தந்தை தனது மூன்று மகன்களுடன் கூட்டு குடும்பமாய் வாழ்ந்து வருகிறார்.  மூத்த மகனுக்கு திருமணமாகி, விவகாரத்தாகி, உயர்நிலைபள்ளி செல்லும் வயதில் ஒரு பையன் இருக்கிறான். இரண்டாவது மகன் திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்துவருகிறார். மூன்றாவது மகன் திருமணமாகாமல் விடலைத்தனத்துடன் இருக்கிறார்.   வீட்டில் உள்ள அனைத்து அதிகாரங்களையும் தந்தை தன்னிடம் வைத்துக்கொண்டு,   மூன்று பிள்ளைகளையும் தன்னிடம் வேலை செய்கிற ஆட்களாய் நடத்திக்கொண்டு இருக்கிறார்.   ஒவ்வொருவரும் தனித்தனியான கனவுகளுடன், தேவைகளுடன் இருக்கிறார்கள். எல்லாவற்றிக்கும் அப்பா கையை எதிர்ப்பார்த்து இருப்பது அவர்களுக்குள் கசப்பை உருவாக்குகிறது.   இந்த சமயத்தில் தந்தை உடல்நிலை சரியில்லாமல், படுத்தப்படுக்கையாகிறார். புகைச்சலோடு வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களுக்குள் இருக்கிற மன விகாரங்கள் மெல்ல மெல்ல வெளியே வருகிறது. பிறகு என்ன ஆனது என்பதை முக்கால்வாசி படத்தில் விரிவாகவும், உணர்வுபூர்வமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.   **** 17ம் நூற்றாண்டின் சே...

Fortress of War (2010)

Image
கதை. 1941. இரண்டாம் உலகப்போர் காலக்கட்டம். ரசியாவின் மேற்குப்பகுதியின் பெலாரஸ் பகுதி. போர்ட்ரெஸ் என்ற கோட்டைக்குள் 8000 செம்படை வீரர்களும் அவர்களுடைய குடும்பங்களும் வசிக்கிறார்கள். ஜூன் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை. அங்கு வாழ்பவர்கள் வார இறுதி நாள் என்பதால், ஜாலியாக நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போர் கட்டம் என்பதால், இட்லரின் நாஜிப்படைகள் எப்பொழுது வேண்டுமென்றாலும், தாக்குவார்கள் என ஒரு படைத்தளபதி கணிக்கிறார். ஒருவித பதட்டமாகவும், இறுக்கத்துடன் இருக்கிறார். அவர் கணித்ததை போலவே அடுத்தநாள் இட்லரின் நாஜிப்படைகளில் ஒரு குழு ரசிய வீரர்களின் இராணுவ உடையணிந்து, ரயிலிருந்து இறங்குகிறார்கள். எல்லோரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் விடிகாலை 4மணி அளவில் இட்லரின் வான்படை கொத்து கொத்தாக குண்டுகளை வீசுகிறார்கள். கோட்டைகள் தூள் தூளாகின்றன. வீரர்கள், மக்கள் என பலர் இறக்கிறார்கள். திடீர் தாக்குதலால் கொஞ்சம் நிலைக்குலைந்து போன செம்படையை, தளபதிகள் சுதாரித்து தாக்குதலை எதிர்கொள்ள தயார்படுத்துகிறார்கள். நாஜி படைகள் எந்தவித போர் ஒழுங்கையும் கடைப்பிடிப்பதில்லை. மக்கள் பலரையும் சுட்டுத் தள்ள...

12 Angry Men - 1957

Image
  "நீதி புலன்களால் அறியமுடியாத பொருளாகும். அதனை உணர மட்டுமே இயலும்." "மனிதனை மனிதன் சுரண்டாத சமுதாயத்தில், ஒரு சிலருடைய நன்மைகளுக்காக பலர் துன்பங்கள் அனுபவிக்க வேண்டியதாக இருக்காத சமுதாயத்தில் மட்டுமே சமுதாய நீதியை நிலை நாட்ட இயலும்" - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம் தொகுப்பிலிருந்து... **** கதை. 18 வயது பையன் தன் தந்தையை கொன்றுவிட்டான் என்பது வழக்கு. சந்தர்ப்பங்களும், சாட்சிகளும் அவன் குற்றவாளி என்கிறார்கள். நீதிபதி சமூகத்தில் வெவ்வேறு தகுதிகளில் இருக்க கூடிய 12 பேரை ஜுரிகளாக நியமித்து, அந்த பையன் குற்றவாளியா இல்லையா என்பதை விவாதித்து முடிவைச் சொல்ல சொல்கிறார். அதன்படி தான் தீர்ப்பு என்கிறார். விவாதம் தொடங்கும் முன்பே, எத்தனை பேர் குற்றவாளி என வாக்கெடுப்பு நடத்தும் பொழுது, 11 பேர் "குற்றவாளி" என்கிறார்கள். ஒருவர் மட்டும் "குற்றவாளி இல்லை" என சொல்லவில்லை. நாம் விவாதிப்போம் என்கிறார். விவாதம் மெல்ல துவங்கி, வழக்கின் முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படுகிறது. இறுதியில் என்ன முடிவெடுத்தார்கள் என்பது முழுநீளக்கதை! ***** சமூகத்தில் பல்வேறு ந...

கனஷத்ரு (மக்கள் விரோதி) - சத்யஜித்ரே

Image
மேற்கு வங்கத்தில் இருக்கும் சாந்திபூரில் 26 ஆண்டுகளாக மருத்துவராகப் பணியாற்றி நற்பெயர் எடுத்த அசோக் குப்தா தன்னிடம் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை கவனித்து அதன் காரணத்தைக் கண்டுபிடிக்க முற்படுகிறார். அவர்களுள் பெரும்பாலோர் நகரத்தின் மக்கள் தொகை நெருக்கம் அதிகமான பகுதியிலிருந்து வருவதால் அந்தப் பகுதியில் இருக்கும் திரிபுரேஷ்வர் கோவிலில் புனித தீர்த்தமாகத் தரப் படும் நீரை அறிவியல் பரிசோதனைக்கு அனுப்புகிறார். தண்ணீர் கொண்டுவரும் நிலத்தடிக் குழாய் உடைந்திருப்பதால் அந்த நீர் மாசு பட்டிருப்பதை ஆய்வு உறுதி செய்கிறது. அந்தக் குழாயை சரி செய்யும் வரை கோவிலை மூட வேண்டும் என்று ஒரு பத்திரிக்கைக்கு கட்டுரை எழுதுகிறார். அவருடைய கோரிக்கைக்கு முதல் எதிர்ப்பு அவருடைய சகோதரரும், நகரசபைத் தலைவருமான நிசித்திடமிருந்து வருகிறது. நிசித் அந்தக் கோவிலின் உரிமையாளர் நடத்தும் பார்கவா டிரஸ்டின் முக்கிய உறுப்பினரும் ஆவார். கோவில் உரிமையாளர் அசோக் குப்தாவின் வீட்டிற்கு ஒரு புட்டியில் புனித தீர்த்தத்தைக் கொண்டு வருகிறார். அதில் துளசி போன்ற மூலிகைகள் இருப்பதால் அது மாசுபடவ...

The Post (2017) - பத்திரிக்கை சுதந்திரம்

Image
1960-களில் அமெரிக்கா வியட்நாம் மீது ஆக்கிரமிப்பு போர் செய்து கொண்டிருந்தது. வியட்நாமிய போராளிகள் கொரில்லா போர் செய்து அமெரிக்க ராணுவத்தினரை சிதறடித்துக் கொண்டிருந்தார்கள். உச்சக்கட்ட போர் சமயத்தில் 60 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இறந்தும் காணாமலும் போயினர். அமெரிக்க அரசோ கெத்தாக போரில் முன்னேறி கொண்டிருப்பதாக கதை விட்டுக் கொண்டிருந்தது. இராணுவ ஆய்வாளர் ஒருவர் உலகுக்கு உண்மையை சொல்ல நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஆதாரம் அளிக்கிறார். இதழில் வெளியானதும் நாடே கொந்தளிக்கிறது. அமெரிக்க அரசு ஆடிப்போய்விடுகிறது! 'நியூயார்க் டைம்ஸ்'க்கு போட்டி பத்திரிக்கையான 'வாஷிங்டன் போஸ்ட்' மேலும் வியட்நாமிய போர் தொடர்பான செய்திகளை தேடுகிறது. கண்டுபிடித்தும் விடுகிறது. இதற்கிடையில் வாஷிங்டன் போஸ்ட் பொருளாதாரத்தில் தள்ளாடுகிறது. பொதுமக்களிடம் பங்குகளை வெளியிட்டு, தன்னைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்கிறது. இதே சமயத்தில் நியூயார்க் டைம்ஸில் ஆதாரம் வெளியானதை ஒட்டி, அமெரிக்க அரசு சுதாரித்து மேற்கொண்டு ஆதாரங்களை வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி விடுகிறது. கிடைத்த ஆதாரங்களை...

The Pursuit of Happyness (2006)

Image
கதை. 1981ல் நிகழ்கிறது. நாயகன் மருத்துவமனைகளில் அலைந்து திரிந்து ஸ்கேனர் விற்று பிழைக்கிறான். மனைவியும் வேலைக்கு செல்கிறார். ஐந்து வயது பையனுடன், வீட்டு வாடகை கூட கொடுக்கமுடியாமல் தடுமாறுகிறார்கள். நன்றாக வாழ்வோம் என்ற நம்பிக்கை இல்லாமல் போக மனைவி பிரிகிறார். தொழிலை மாற்றலாம் என்றால்.. ஆறு மாதம் பயிற்சி. சம்பளம் இல்லை. 20 பேர் கொண்ட குழுவில், முதலிடத்தில் வந்தால்... நிரந்தர வேலை என்கிறார்கள். வீடு இல்லை. வருமானம் இல்லை. ஐந்து வயது மகனுடன் பல்வேறு சோதனைகளை எதிர்கொள்கிறான். எல்லாவற்றையும் மீறி ஜெயித்தானா என்பது முழு நீளக்கதை! **** “அமெரிக்கன் பியூட்டி” என படம். அமெரிக்க குடும்பங்களின் அகம் எப்படி சிக்கலாக இருக்கிறது என அருமையாக பேசிய படம். உண்மை சம்பவங்களின் அடிப்படையான இந்த படமும் முக்கியமான படம் தான். உலக நாடுகள் முழுக்க தலையிட்டு ரவுடித்தனம் செய்து கொண்டிருக்கும் அமெரிக்கா, அங்கு ஒரு சராசரி மனிதனின் வாழ்வு எத்தகைய அழுத்தங்களுடனும், பதட்டங்களுடனும் நகர்கிறது என சொல்கிறது படம். அடிதடி நாயகனான ஸ்மித்தும், அவருடைய பையனும் பாத்திரங்களில் அத்தனை இயல்பாக நம்மை கொள்ளை கொள்கிறார்கள். எத்தனை து...

The Boy in the Striped Pajamas (2008) அகதியென்றால் அவமானம் தாங்கி பழகவேண்டும்!

Image
  life is beautiful, Schindler's List , The Pianist - நாஜிக்களின் வதை முகாம் பற்றிய படங்களில் இதுவும் முக்கிய படம் தான் ஜெர்மனி. இரண்டாம் உலகப்போர் காலகட்டம். 9 வயது புரூனோ பள்ளி விட்டு சந்தோசமாய் நண்பர்களுடன் வீட்டை நோக்கி ஓடிவருகிறான். அப்பா இட்லரின் நாஜிப்படையில் ஒரு முக்கிய அதிகாரி. பதவி உயர்வு கொடுத்து, வேறு ஊருக்கு மாற்றல் செய்யப்படுகிறார். பள்ளியை, நண்பர்களை விட்டு வர புரூனோவுக்கு மனம் வரவில்லை. அப்பா ஆறுதல் சொல்லி அழைத்துப்போகிறார். போனால், அது ஊருக்கு ஒதுக்குப்புறமான தனியான பங்களா. சுற்றிலும் வீடுகள் இல்லை. பள்ளி இல்லை. புரூனோவின் அப்பா, புரூனோவிற்கும், அவனின் அக்காவிற்கும் வீட்டில் வந்து சொல்லித்தரும் ஒரு ஆசிரியரை ஏற்பாடு செய்கிறார். பள்ளி இல்லாமல், நண்பர்கள் இல்லாமல் அவனுக்கு எதுவும் பிடிக்கவேயில்லை. தனிமையில் வாடுகிறான். வீட்டை விட்டு கொஞ்சம் தள்ளி வேலியிடப்பட்ட நாஜிக்களின் வதைமுகாம் ஒன்று இருக்கிறது. அங்கு சிறைப்பட்டிருக்கும் யூத மக்களுடன் ஒரு யூத சிறுவனும் வேலை செய்கிறான். அவனக்கும் புரூனோவின் வயது தான். வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் பின்பக்கமாக ஜன்னலேறி கு...

Bad Genius (2017) தாய்லாந்து நுழைவு தேர்வுகளில் நடக்கும் ஊழல்கள்!

Image
கதை. தன் மகளை அழைத்துக்கொண்டு அந்த புதிய பள்ளியில் மேல்நிலை வகுப்பில் சேர்க்க அழைத்துவருகிறார். தன் மகள் கணக்கிலும், படிப்பிலும் கெட்டிக்காரி. இவ்வளவு பரிசுகள் வென்றிருக்கிறாள் என பரிசு கோப்பைகளையும் காண்பிக்கிறார். மகளுக்கோ அது காசு பிடுங்கும் பெரிய பள்ளி. அப்பாவை சிரமப்படுத்தவேண்டாம். பழைய பள்ளியிலேயே படிக்கிறேன் என்கிறாள். புதிய தலைமை ஆசிரியரோ ”இந்த பள்ளியிலேயே படி. ஸ்காலர்ஷிப் தருகிறேன். மேற்படிப்புக்கும் ஸ்காலர்ஷிப் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்”என்கிறார். அந்த பள்ளியில் சேர்கிறாள். நாயகியின் வகுப்புத் தோழி கணக்கில் கொஞ்சம் டல்லான மாணவி. நாயகியோடு நெருக்கம் ஆகிறாள். தான் நிறைய மார்க் வாங்கினால், பள்ளி சில சலுகைகளை தரும். ”உதவி செய்” என கெஞ்சுகிறாள். பியானோவில் விரலில் வாசிப்பார்கள் அல்லவா! விரல்களை ஒரு லயத்தில் வாசிப்பது போல, பிட் அடிக்க புதுவித உத்தியை கண்டுபிடித்து சொல்லித்தருகிறாள். தோழி கூடுதல் மார்க்கும் வாங்குகிறாள். அந்த தோழி பள்ளியில் படிக்கும் தன் நண்பனுக்கும் அந்த உத்தியை சொல்கிறாள். அவன் தனக்கும், தன் நண்பர்களுக்கும் சொல்லித்தந்தால், தலைக்கு இவ்வளவு தருகிறேன் என பேரம் பேசு...

Green Book (2018)

Image
சிறந்த படம் உள்ளிட்ட மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்ற படம். கதை. 1962ல் நடைபெறும் உண்மைக்கதை. ஒரு கறுப்பின அமெரிக்கர் ஒரு சிறந்த பியானோ கலைஞர். நியூயார்க்கில் வாழ்கிறார். அவர் எட்டு வாரங்கள் ஐக்கிய அமெரிக்காவின் தென் பகுதிகளின் உட்பகுதிகளில் பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுகிறார். (கிட்டத்தட்ட சென்னை துவங்கி, கன்னியாகுமரி வரைக்குமான தூரம்) அவர் திட்டமிட்ட பகுதிகள் கருப்பின மக்கள் மீது ஏகப்பட்ட ஒடுக்குமுறை உள்ள பகுதிகள். ஆகையால், தனக்கு பாதுகாப்புக்கு ஓட்டுநர் + பாதுகாவலர் வேலைக்கு ஆள் தேடுகிறார். ஒரு இத்தாலிய அமெரிக்கன். நடுத்தர வயது. திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். பெருந்தீனிக்காரர். ஒரு இரவு கிளப்பில் பவுன்சராக வேலை செய்கிறார். முன்னாள் இராணுவ வீரராகவும் பணியாற்றியவர். கருப்பின வெறுப்பு உள்ள ஆள். புதுப்பிப்பதற்காக கிளப் தற்காலிகமாக மூடப்படுகிறது. கோரோனா ஊரடங்கு காலத்தில் நாம் அடைந்த பொருளாதார நெருக்கடி போல சிரமப்படுகிறார். கையில் உள்ள வாட்ச்சை அடகு வைக்கிறார். இடைக்காலத்தில் ஏதாவது வேலை செய்தே ஆகவேண்டிய கட்டாயம். கருப்பின பியானோ கலைஞருக்கு கிடைத்த டாக்டர...