Posts

Showing posts from January, 2023

மாமேதை லெனின் நினைவுதினம் (21 ஜனவரி1924)

Image
லெனினியம் கற்போம்; லெனினிடம் கற்போம் ------------------------------------------------------------------ பூர்ஷ்வா ஜனநாயகம் உள்ள நாட்டில் உட்கட்சி ஜனநாயகம் எப்படி இருக்க வேண்டும் என லெனின் விளக்குகின்றார்... “ஜனநாயகத்தின் இரண்டாவது பண்புக் கூறான தேர்தல் எனும் கோட்பாட்டு விஷயத்திலும் இதே நிலைமைதான். அரசியல் சுதந்திரம் உள்ளநாடுகளில் இந்நிலைமை நடப்புண்மையாக எடுத்துக் கொள்ளப் படுகின்றது. "கட்சியின் வேலைத்திட்டத்தின் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு கட்சிக்கு சாத்தியமான ஆதரவனைத்தும் கொடுப்பவர்களே கட்சியின் உறுப்பினர்கள் ஆவர்" என்கிறது ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி விதிகளின் முதல் பிரிவுக்கூறு. பார்வையாளர்களின் எதிரே தெரிகிற நாடகமேடை போல் அரசியல் அரங்கம் முழுவதும்மக்கள் முன்னே பகிரங்கமாக இருப்பதால், இப்படி ஏற்றுக் கொள்வதையோ ஏற்றுக் கொள்ளாததையோ, ஆதரவளிப்பதையயோ, எதிர்ப்பதையோ பத்திரிகைகள், பொதுக் கூட்டங்கள் வாயிலாக எல்லோரும் அறிவார்கள். அந்தந்தக் குறிப்பிட்ட  அரசியல் பிரமுகர் இந்தந்த வழியிலே துவங்கி, இத்தகைய பரிணாம வளர்ச்சியைக் கடந்து, நெருக்கடியான தருணத்தில் இத்தகைய முறையிலேநடந்து கொண்டார்; அவ

கம்யூனிசத்தின் கோட்பாடுகள்

Image
  மாற்றுத் திட்டம் ஒன்றே காலத்தின் கட்டாயம்! ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை முற்றாக வீழ்த்துகின்ற அரசியல், பொருளாதாரக் கொள்கை கம்யூனிஸ்டுகளிடம் மட்டுமே உள்ளது. கம்யூனிஸ்டுகள் முன்வைக்கின்ற சோசலிசப் பொருளாதாரக் கொள்கைக்கும், ஏகாதிபத்திய முதலாளித்துவம் முன்வைக்கின்ற பொருளாதாரக் கொள்கைகளுக்கும் இடையில் ஏதோ ஒன்று இருப்பதைப் போல பம்மாத்து காட்டுகின்ற பல்வேறு அரசியல், பொருளாதார பித்தலாட்டப் பேர்வழிகளுக்கு பதில் அளிக்கின்ற வகையில் தோழர் ஏங்கல்ஸ் எழுதியுள்ள கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்ற நூலில் இருந்து இப்பகுதியை வெளியிடுகிறோம். உலகம் முழுவதும் கம்யூனிசக் கொள்கையை ஏற்றுக்கொண்டு செயல்படும் கம்யூனிஸ்டுகள் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளானாலும் சரி, முதலாளித்துவ நாடுகளானாலும் சரி, காலனிய, அரைக் காலனிய மறுகாலனிய நாடுகளாக இருந்தாலும் சரி தங்களின் அரசியல், பொருளாதார மாற்றுத் திட்டம் ஒன்று சோசலிசத்தை நோக்கி ஒருபடியேனும் முன்னேறுகின்ற வகையில் அமைத்துக்கொள்ள வேண்டும். அதிலும் பாசிச ஆட்சி, நேரடியான காலனி ஆக்கிரமிப்புப் போர் காலகட்டங்கள் ஆகியவற்றினால் பாதிக்கப்படுகின்ற நாடுகளில் இத்தகைய மாற்றுத் திட்டம் க

புனையப்படும் பொய் ‘வரலாறு’! பாகம் - 3

 பேரா. ஆதித்ய முகர்ஜி நன்றி - மார்க்சிஸ்ட் ரீடர் கல்விப் புலத்தில் வகுப்புவாத சக்திகள் மாணவர்களுக்குப் புதிதாகப் புகுத்தப்பட்டுள்ள வரலாற்றுப் பாடத் திட்டம், தேசத்தந்தை மகாத்மா காந்தி ஒரு இந்து தீவிரவாதியால் படுகொலை செய்யப்பட்ட உண்மை நிகழ்வை உரைக்க மறுக்கிறது.  இந்திய தேசிய இயக்கத்தில் முன்னணிப் பங்கு வகித்த மாபெரும் தலைவர்கள் பற்றிய பாடத்தில், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பிரிட்டிஷாருடன் 30 வருடங்களுக்கு மேலாக வீரச் சமர் புரிந்து, அதில் முழுவதுமாக 9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, அரும் பாடுபட்ட மகத்தான தலைவர் ஜவஹர்லால் நேரு பற்றிய சிறு குறிப்பு கூட  இடம் பெறவில்லை. ஆனால் நேருவைப் பற்றிய எதிர்மறையான குறிப்பு மட்டும் பாடத் திட்டம் முழுவதும் பரவிக் கிடக்கிறது.  இந்திய தேசம் சந்தித்த அத்தனை பிரச்னைகளுக்கும் முழுமுதற் காரணம் நேருவும், அவர் பின்பற்றிய கொள்கைகளும்தான் என்று வன்மையாகச் சாடும் இந்த வரலாற்றுப் பாடத் திட்டம், போகிற போக்கில், முழுவதும் கற்பனையான கற்பிதமாகக் கூறப்படுகிற, நேருவின் மூதாதையர்களின் முஸ்லிம் (!) மதச் சார்பு பற்றியும் பேசுகிறது.  (பிஜேபி-யின் தலைவர் ஒருவர், ஆர்எஸ்எஸ

புனையப்படும் பொய் ‘வரலாறு’! பாகம் - 2

பேரா. ஆதித்ய முகர்ஜி நன்றி மார்க்சிஸ்ட் ரீடர் காலனிய ஆய்வாளர்களின் தவறான கூற்று இந்திய வரலாறு குறித்த காலனிய / வகுப்புவாத விளக்கவுரை, இந்து-முஸ்லிம் மோதல் காரணமாக நேரிட்ட ‘மனவேதனைகள்‘ குறித்து மீண்டும் மீண்டும் உரையாடலை மேற்கொள்கிறது. பிரபல இந்து கருத்தியலாளரான கே.எம். முன்ஷி, 1951இல் சமர்ப்பித்த ஆய்வறிக்கையொன்றில், தற்போது ஆஃப்கானிஸ்தானத்தில் உள்ள கஜினி பகுதியின் சுல்தானாக விளங்கிய மன்னன் முகம்மது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1026இல் நடத்திய படையெடுப்பில் சோமநாதர் ஆலயம் தாக்குதலுக்குள்ளானது குறித்த தனது தரவுகளை வெளியிட்டுள்ளார். இந்தப் படையெடுப்பின்போது, சோமநாதர் கோயில் தாக்கப்பட்டது, “ஒரு தேசியப் பேரழிவாக, மறக்கவியலாத மாறாத வடுவாக, இந்துக்களின் மனதில் பதிந்துவிட்டது” என்று முன்ஷி குறிப்பிடுகிறார். இதன் மூலம் 19ஆம் நூற்றாண்டில் காலனியாட்சி உருவாக்கிய கருத்தாக்கத்தையே முன்ஷியும் எதிரொலிக்கிறார். ஆனால், 1026இல் இந்துக்களின் மனதிற்கு ஏற்பட்டுவிட்ட ‘காயங்களுக்குப்‘ பழி தீர்த்திடும் வகையில் எதிர்வினை ஆற்றிட வேண்டும் என்கிற பேச்சும் வாதமும், 800 வருடங்கள் கடந்து, 1843இல் தான் எழுப்ப
Image
புனையப்படும் பொய் ‘வரலாறு’!  பாகம் -1 பேரா. ஆதித்ய முகர்ஜி நன்றி: மார்க்சிஸ்ட் ரீடர் பாசிச தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய அரசியலுக்கு வசதியாக இந்திய வரலாற்றை சிதைத்து பொய்களை வரலாறாக புனையும் முயற்சியினை அம்பலப்படுத்தும் கட்டுரை) ‘வரலாறு‘ என்பதையே முழுவதுமாகத் திரித்து, அதை மக்களிடையே ‘வெறுப்பு மனப்பான்மை‘யை வளர்த்தெடுக்கும் ஒரு கருவியாகச் சிலர் பயன்படுத்தி வருவதை, இந்தியா, பதைபதைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.  நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த விடுதலை இயக்கம் இந்திய தேசம் குறித்து கொண்டிருந்த ஒளிமிகுந்த கனவுகளைச் சிதைத்துச் சீரழிப்பதற்கும், 1947இல் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, நம் நாடு ஒரு ‘ஜனநாயகக் குடியரசாக‘ மலர்ந்ததன் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்வதற்கும், மிகவும் இழிவான முறையில் ‘வரலாறு‘ பயன்படுத்தப்படுகிறது.  இத்தகைய போக்குகளின் காரணமாக, இந்திய நாட்டின் பெருமைக்குரிய பண்புநலன்களும், இந்தியாவின் எதிர்காலமுமே கேள்விக்குறியாய் மாறி நிற்கிறது. காலனி ஆதிக்க கண்ணோட்டம் காலனியாட்சி முடிவுக்கு வந்த 20ஆம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை, வரலாற்றியல் கல்வியில் அ