Posts

Showing posts from March, 2023

People’s power / Call for Siege Protest – Chennai BJP office

Image
Rahul Gandhi showed the photo of Adani and Modi being together and asked Modi what is the relationship between Prime Minister Modi and Adani. The answer to that is the removal of Rahul Gandhi's MP post. Press Release Call for Siege Protest! Chennai – BJP office 30-03-2023, Thursday Rahul Gandhi has been sentenced to two years in jail for opposing Prime Minister Modi’s friend Corporate Con Adani! Within 24 hours, his MP post has been snatched away! After CBI, Enforcement Directorate, Election Commission, NIA, UAPA, Modi government’s another weapon is disqualifying the MPs! Fascism strengthens, No time to wait! Let’s hit it’s root! All the opposition parties including the Congress are fighting inside and outside the Parliament for a parliamentary joint committee enquiry into the Hindenburg report which exposed the frauds of the Adani company. Prime Minister Modi did not respond in parliament to the accusations against his friend Adani, who has been giving full support to Modi’s victo

உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு; பாகம் - 2

Image
தொழிற்சங்க இயக்கத்தின் அதிவேக வளர்ச்சியால் 1850-களில் இக்கோரிக்கை புதிய உத்வேகத்தை அடைந்தது. 1857-ல் ஏற்பட்ட நெருக்கடி இந்த உத்வேகத்திற்கு ஒரு தடையானது. இருந்தபோதிலும் நன்கு வளர்ச்சி பெற்ற தொழிற்சங்கங்கள் அதற்கு முன்பே இக்கோரிக்கையை அடைந்தன. இவ்வாறு குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட எல்லா வளரும் நாடுகளிலும் இப்போராட்டங்கள் நிகழ்ந்தன. உதாரணமாக வெகு தூரத்தில் இருந்த ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் ‘8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு’ என்ற கோரிக்கையை முன் வைத்து 1858-ல் அதை அடைவதில் வெற்றியும் பெற்றனர். எட்டு மணி நேர இயக்கம் அமெரிக்காவில் துவங்கியது. 1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின் போது வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தன. ஆனாலும் இதற்கு ஒரு தலைமுறை முன்பே ‘தேசிய தொழிற்சங்கம்’ குறைந்த வேலை நேரத்துக்கான கோரிக்கையை முன்வைத்து பரந்த இயக்கத்தையே நடத்தியது. ‘தேசிய தொழிற் சங்கம்’ அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க ஸ்தாபனமாக அ

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம்!

Image
கிளாரா ஜெட்கின் (1857-1933) ரஷ்யப் புரட்சியின் தலைவர் லெனின் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ரஷ்யப் புரட்சி அவரது அறைகூவலால் நடக்கவில்லை என்பது பலருக்குத் தெரியாது. அந்த அறைகூவலை விடுத்தவர் தோழர்.கிளாரா ஜெட்கின். ஆனால் அவரும் கூட புரட்சி செய்யக் கோரி அறைகூவல் விடுக்கவில்லை. 1917 மார்ச் 8 ஐ (பழைய காலண்டரின்படி 1917 ஃபிப்ரவரி 26) உழைக்கும் பெண்கள் தினமாக அனுஸ்டிக்கக் கோரிதான் அறைகூவல் விடுத்தார். மக்கள் புரட்சிக்குத் தயாராக இருக்கும் தருணத்தில் சிறுபொறியும் காட்டுத் தீயை உருவாக்கும். எனவே பெண்கள் தினம் கொண்டாடத் திரண்ட உழைக்கும் பெண்கள் 400 ஆண்டுகளாக ரஷ்யப் பெருநிலத்தை ஆண்ட ஜார் பரம்பரை ஆட்சியைத் தூக்கி எறிந்தனர்.  அந்த வகையில் ரசியப் புரட்சியின் பெருவெடிப்பிற்குத் திரியில் தீ வைத்த பெருமை கிளாரா ஜெட்கிணைச் சாரும். ஜெர்மனியின் சாக்ஸ்ஸானி பகுதியில் ஒரு பள்ளி ஆசிரியர் மகளாகப் பிறந்த கிளாரா எய்ஸ்னர் தனது தாயாரிடமிருந்து சிறு வயதிலேயே ஆழமான வாசிக்கும் பழக்கத்தைப் பெற்றார். தந்தை ஜெர்மானியர். தாய் ஒரு ஃபிரெஞ்சுப் பெண்மணி. அவர் பல மொழிகள் அறிந்த இலக்கியம், கலை, அரசியல் புரிதல் உள்ளவர் என்ப

உதிரம் சிந்தி நெருப்பில் நீந்தியமே தின வரலாறு பாகம்-1

Image
குறைந்த வேலை நேரத்துக்காக நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் தொழிற்துறை ஒரு அமைப்பாக வளர்ந்த பொழுது இப்போராட்டம் வெளிப்பட்டது. இந்நாட்டில் (அமெரிக்காவில்) ஆரம்ப நாட்களில் பல வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்தன. ‘அதிக ஊதியம் வேண்டும்’ என்பதுதான் இந்த வேலைநிறுத்தங்களில் முக்கிய கோரிக்கையாக எழுப்பப்பட்டது. இருந்த போதிலும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வகுத்த போதெல்லாம் குறைந்த வேலை நேரம், சங்கம் சேரும் உரிமை போன்ற பிரச்சினைகளை முன்வைத்தனர். தொழிலாளர்கள் வெகுவாக சுரண்டப்பட்ட காலகட்டம் அது. நீண்ட வேலை நேரங்கள் அவர்களை மேலும் துன்பப்படுத்தின. எனவே வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்பது கோரிக்கையாக எழுப்பப்பட்டது. ‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை’ என்பதுதான் அப்போதெல்லாம் வேலைநாள். இதனால் ஏற்பட்ட மனக்குமுறல்களை அமெரிக்கத் தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வெளிக்காட்டினர். பதினாறு, பதினேழு ஏன் பதினெட்டு மணிநேர வேலை என்பதெல்லாம் அப்போது

மே தினத்தை அரசியல் ஆர்ப்பாட்ட போராட்ட தினமாக களமாடுவோம்!

Image
மே தினத்தை அரசியல் ஆர்ப்பாட்ட போராட்ட தினமாக அறிவித்து பாட்டாளி வர்க்கத்தை தனது அரசியல் கோரிக்கைகளுக்காக கிளர்ந்து எழச் செய்யும் வகையில் வழிகாட்டினார் தோழர் லெனின். முதலாவது மே தின போராட்டத்தின் போது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கிளர்ச்சிக்கு உலகம் முழுவதும் திரண்டு கொண்டிருக்கிறார்கள் என்று பெரும் உவகையுடன் எழுதினார் தோழர் ஏங்கெல்ஸ். மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் 1993 முதல் மே தினத்தை "நாடு மறுகாலனியா வதை முறியடிப்போம்!" "பார்ப்பன (இந்து) மத வெறி பாசிசத்தை முறியடிப்போம்!" என்ற தனது அரசியல் செயல் தந்திரத்தை பரந்துபட்ட மக்களிடம் கொண்டு செல்லும் போராட்ட தினமாக அறிவித்து பல்வேறு கிளர்ச்சிகரப் போராட்டங்களை நடத்தியது. வழக்கமாக இடதுசாரி அமைப்புகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கொடியேற்றி மிட்டாய் வழங்கக்கூடிய காலகட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தை தனது அரசியல் பிரச்சாரத்திற்கு மே தினத்தை பயன்படுத்துகின்ற முன்னுதாரணமிக்க செயல்பாட்டை முன்வைத்தது மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள். நாட்டையும் மக்களையும் பாதிக்கின்ற மையமான அரசியல் நிகழ்ச்

ஐக்கிய முன்னணி தந்திரம் நூல் பாகம் - 6

Image
சமூக ஜனநாயகவாதிகள் ஆட்சிப் பொறுப்பில் உள்ள நாடுகளில் ஐக்கிய முன்னணி: அரசு அதிகாரத்தில் உள்ள சமூக ஜனநாயகக் கட்சிகள் அல்லது சோஷலிஸ்டுகளும் உள்ளிட்ட கூட்டரசாங்கம்  உள்ள நாடுகளில், உதாரணமாக டென்மார்க், நார்வே, ஸ்வீடன், செக்கோஸ்லோவியா, பெல்ஜியம் முதலிய நாடுகளில் எவ்வாறு ஐக்கிய முன்னணி கட்டுவது. சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கங்கள் முதலாளித்துவ வர்க்கங்களுடன் சமரசம் செய்து கொண்டிருக்கும்  அரசாங்கள் என்ற முறையில் அவற்றிற்கு முழுமையான எதிர்ப்புக் கொடுக்கும் அணுகுமுறை அனைவரும் அறிந்தவொன்று. ஆனால், அது எப்படி இருந்தாலும் ஒரு சமூக ஜனநாயக அரசாங்கம் அல்லது முதலாளித்துவக் கட்சிகளோடுச் சேர்ந்த கூட்டரசாங்கம் இருப்பது சமூக ஜனநாயகவாதிகளுடன் சில பிரச்சினைகளில் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்குகான கடந்து செல்ல முடியாதத் தடை என்றுக் கருத முடியாது. இத்தகைய இடங்களில்கூட உழைக்கும் மக்களின் நல உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பாசிசத்திற்கு எதிரானப் போராட்டத்தை நடத்துவதற்கு ஐக்கிய முன்னணி சாத்தியமும் அவசியமும் ஆகும் என்று நம்புகிறோம். சமூக ஜனநாயகக் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்தில் பங்கு கொள்ளக் கூடிய நாடுகளில்

ஈராக்கில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி தியாகிகள் தின நினைவேந்தல் கூட்டம்;

Image
இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை க் கடைபிடிக்கின்ற தாலிபன்கள் ஆட்சி நடக்கின்ற ஆப்கானிஸ்தான் முதல் அமெரிக்க  கைக்கூலிகள் ஆட்சி நடத்தும் ஈரான் வரை அனைத்திலும் பெண்கள் மீது இஸ்லாமிய மத ரீதியிலான வன்முறைகள், ஆணாதிக்க வெறியாட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிரான ப் போராட்டத்தில் ஈடுபடும் பள்ளி மாணவர்கள் மீது கடும் அரசபயங்கரவாத த் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இளம் வயதில் மத அடிப்படைவாதத்திற்கு எதிராக ப் போராடுகின்ற இஸ்லாமிய மாணவிகளுக்கு விஷம் கொடுத்து மெல்ல மெல்ல க் கொல்ல வைப்பது போன்ற கொடூரமான பயங்கரவாத செயல்கள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்தியாவில் மார்க்சிய போர்வையில் உலவுகின்ற பல்வேறு குட்டி முதலாளித்துவ கும்பல் மனதிற்குள் சாதி மற்றும் இனவெறி யு டன் நடந்து கொள்வதும், வெளியில் பகட்டாக க் கம்யூனிசம் சோஷலிசம் எனப் பேசிக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் ஈராக்கில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி தியாகிகள்   நினைவேந்தல் நமக்கு புதிய உத்வேகத்தைத் தருகிறது. இந்து என்ற போர்வையில் பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை நிபந்தனை யி ன்றி ஏற்க வைப்

ஐக்கிய முன்னணி தந்திரம் பாகம்-4

Image
பிரிட்டனில் பாசிசத்திற்கு எதிராக பிரிட்டிஷ் தொழிலாளர்களின் நடவடிக்கையின் பலனாக மோஸ்லியின் பாசிஸ்ட் கட்சி தற்காலிகமாகப் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால், தேசிய அரசாங்கம் தொழிலாளி வர்க்கத்திற்கு விரோதமாகப் பல பிற்போக்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் விளைவாக முதலாளித்துவ வர்க்கம் ஒரு பாசிஸ்ட் ஆட்சிக்கு மாறுவதற்கானச் சூழ்நிலைகள் உண்டாக்கப்படுகின்றன. இன்றையக் கட்டத்தில் பாசிஸ்டு அபாயத்தை எதிர்த்துப் போராடுவதென்பது முதலாவதாக தேசிய அரசாங்கத்தையும் அதன் பிற்போக்கான நடவடிக்கைகளையும் எதிர்த்துப் போராடுவதாகும். வேலையில்லாதோரின் கோரிக்கைகளுக்காக, கூலி வெட்டுகளுக்கு எதிராக மக்களின் வாழ்க்கைத் தரம் கீழிறக்குவதற்கு எதிராக மற்றும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு உதவிகரமாக உள்ள சட்டங்களை மாற்றுவதற்காகப் போராட வேண்டும். தேசிய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு புதிய தொழிலாளர் அரசாங்கம் அமைய வேண்டும் எனும் முழக்கத்தின் கீழ அதிகமான அளவில் உழைக்கும் மக்களின் ஒற்றுமை அதிகரித்து வருகிறது. மக்களிடம் உள்ள இந்த கோரிக்கையை கம்யூனிஸ்டுகள் புறக்கணிக்க முடியுமா? கூடாது தோழர்களே!  அவர்களிடம் நாம் வெளிப்படையாக ஒன்றைக் கூறவேண

ஐக்கிய முன்னணி தந்திரம் பாகம்-3

Image
பாசிஸ்ட் எதிர்ப்பு மக்கள் முன்னணி; பாட்டாளி வர்க்கத்தின் போராட்டம் முழுவதினுடைய வெற்றியானது ஒருபக்கம் பாட்டாளி வர்க்கம் மறுபக்கம் உழைக்கும் விவசாயிகள், நகர்ப்புறக் குட்டி முதலாளித்துவ வர்க்கமாகவுள்ள அடிப்படை மக்கள்பகுதி அதாவது தொழில்துறையில் மிக வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளில் கூட மக்கள்தொகையில் மிகப் பெரும்பான்மையினராக உள்ள இந்த மக்கள்பகுதிக்கு இடையில் ஒரு போராட்டக் கூட்டை உருவாக்குவதுடன் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டதாகும். பாசிசம் தனது கிளர்ச்சி பிரச்சாரத்தில் இந்த மக்கள் பகுதிகளையெல்லாம் தனது பக்கத்தில் வெல்வதற்கான விருப்பத்தில், நகரங்களிலும், கிராமப் பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களைப் புரட்சிகரமானப் பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக நிறுத்துவதற்கு முயற்சிக்கிறது. சிவப்பு அபாயம் என்று பூச்சாண்டிக் காட்டி குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை அச்சுறுத்தித் தன்பக்கம் கொண்டுவர முயற்சிக்கிறது. உழைக்கும் விவசாயிகளுக்கும், கைத்தொழிலாளர்களுக்கும், உழைக்கும் படிப்பாளி வர்க்கத்திற்கும், உண்மையான ஆபத்து எங்கிருந்து தோன்றி வருகிறது என்பதை நாம் ஈட்டி முனையை எதிர்திசையில் திருப்பிக் காட்ட வேண்டும். வரிப் ப

அன்பார்ந்த வாசகத் தோழர்களே!

Image
வினை செய் முகநூல் பக்கம் மற்றும் வலைப்பக்கம் ஆகியவற்றில் மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் அவ்வப்போது கட்டுரைகளை எழுதி வருகிறோம். சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தை கிளர்ந்தெழச்செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்கு இருக்கிறது என்பதை நாங்கள் உணர்கிறோம். தமிழகத்தை பொறுத்தவரை சமூக வலைதளங்களில் தீராத குழுச் சண்டைகள், தனிநபர் தாக்குதல்கள், வசவுகள், துதி பாடல்கள் போன்றவையே கோலோச்சுகின்றன. தவிர்க்க முடியாமல் சில சமயங்களில் நாங்களும் அத்தகைய சண்டைகளில் இறங்க வேண்டியுள்ளது. சாக்கடையை சுத்தம் செய்ய மூக்கை பிடித்துக் கொண்டு சாக்கடைக்குள் இறங்குவதைப் போல சில சமயம் தவிர்க்க இயலாமல் செய்ய வேண்டியுள்ளது. பொதுவாக பழங்காலத்தில் ஊர் செய்திகளை அறிந்து கொள்வதற்கு தெரு முக்கூட்டில் அல்லது ஆலமரத்தடியில் அமர்ந்து கொண்டு திண்ணை வேதாந்தம் பேசுவதன் மூலம் ஒருவரை ஒருவர் சொரிந்து கொண்டும், புகழ்ந்து கொண்டும், உழைப்பில் ஈடுபடாமல் வம்பு பேசி திரியும் சிலர் பேசி, பேசி நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொருவரும் கையில் ஒரு செய்தியை கொண்டு வந்து பேசி ஊர் பிரச்சனைகள் அனைத்தையும் ஒரு பி

ஐக்கிய முன்னணி தந்திரம், பாகம் - 2.

Image
ஐக்கிய முன்னணியின் உள்ளடக்கமும் உருவங்களும்; 1. தொழிலாளி வர்க்கத்தின் உடனடியானப் பொருளாதார அரசியல் நலஉரிமைகளை பாதுகாப்பது, பாசிசத்திற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கத்தைப் பாதுகாப்பது ஆகியவைதான். எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் ஐக்கிய முன்னணியில் தொடக்கப் புள்ளியாகவும் பிரதான உள்ளடக்கமாகவும் அமைய வேண்டும். 2. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்திற்குகானப் போராட்டத்திற்கு வெறும் வேண்டுகோள் அறிக்கைகளுடன் மட்டும் நாம் நின்று விடக் கூடாது. மக்களுடைய அதி முக்கியமான தேவைகளிலிருந்து எழக்கூடிய முழக்கங்களையும் போராட்ட வடிவங்களையும் கண்டு, அவற்றை முன்னுக்கு எடுத்துச் செல்லவும், அவற்றைக் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில்  மக்களுடையப் போராட்ட வலுவையும் ஒரே அளவாக இணைத்து செல்லவும் வேண்டும். 3. முதலாளித்துவ கொள்கைக்கும், பாசிஸ்ட் காட்டுமிராண்டித் தனத்திற்கும் எதிராக மக்கள் இன்று தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு நாம்  சுட்டிக் காட்ட வேண்டும். 4. உழைக்கும் மக்களுடைய மிகமுக்கியமான நலஉரிமைகளை பாதுகாப்பதற்காக, பல்வேறு கருத்துப் போக்குகளையும் கொண்டுள்ள தொழிலாளர் அமைப்புகளின் கூட்டுச் செயலின் உ

ஐக்கிய முன்னணி தந்திரம் பாகம் -1

Image
தலைப்பு_2 , பாசிசத்திற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கத்தின்                  ஐக்கிய முன்னணி;    முதலாளித்துவ நாடுகளில் பாசிசத்தை அதிகாரத்திற்கு வர விடாமல் தடுப்பது எப்படி? பாசிசம் வெற்றிப் பெற்று விட்டால் அதைத் தூக்கி எறிவது எப்படி? முதலாவதாகக் கட்டாயம் செய்ய வேண்டியது ஓர் ஐக்கிய முன்னணியை அமைக்க வேண்டும்.  ஒவ்வொரு தொழிற்சாலையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பிரதேசத்திலும், ஒவ்வொரு நாட்டிலும், உலகம் முழுவதிலும் தொழிலாளர்களின் செயல் ஒற்றுமையை உருவாக்குவதாகும். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பாட்டாளி வர்க்கத்தின் செயல் ஒற்றுமையானது அவர்கள் கையில் உள்ள ஒரு வலுமிக்கப் பேராயுதம் ஆகும். இப்பேராயுதம், பாசிசத்திற்கு எதிராகவும், வர்க்க விரோதிகளுக்கு எதிராகவும் வெற்றிகரமாகத் தற்காத்துக் கொள்வதற்காக மட்டுமல்ல, வெற்றிகரமான எதிர்த் தாக்குதலுக்கும், தொழிலாளி வர்க்கத்திற்கும் சக்தியை அளிக்கிறது. I)ஐக்கியமுன்னணியின் முக்கியத்துவம் * பாட்டாளி வர்க்கத்தின் ஒரு வலுவான ஐக்கிய முன்னணி, உழைக்கும் மக்களின் இதரப் பகுதிகளிலும், விவசாயிகள், நகர்ப்புறக் குட்டி முதலாளித்துவ வர்க்கம், படிப்பாளிகள் முதலிய பகு

ஐக்கிய முன்னணி, மக்கள் முன்னணி தடுமாறும் கம்யூனிஸ்டுகள்!

Image
முதலாளித்துவ நாடுகள் ஆனாலும் சரி!, காலனி, அரைக்காலனி நாடுகள் ஆனாலும் சரி! பாசிசம் என்பது கொடூரமான ஆட்சி வடிவமாக, மக்களுக்கு எதிரான அடக்குமுறை கொண்டதாக நிலவுகிறது. இந்தியா போன்ற மறுகாலனிய நாடுகளில் ஏறித் தாக்கி வரும் கார்ப்பரேட்-காவி பாசிசத்தை முறியடிப்பதற்கு மேலிருந்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியும், கீழிருந்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியும் ஒரே சமயத்தில் கட்டப்பட வேண்டும். இத்தகைய நடைமுறை திட்டம் ஏதும் இல்லாமல் பாசிச சூழலில் கூட, தோழர் லெனின் முன்வைத்த மாறுகின்ற இடைநிலை வடிவங்களை கையாள்வதற்கு திராணியற்ற கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மை மக்களுக்கு தீங்கிழைக்கிறது என்பது மட்டுமின்றி ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்கிறது என்பதுதான் சர்வதேச ரீதியில் உள்ள அனுபவமாகும். கார்ப்பரேட்-காவி பாசிசத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினருடன், அதாவது பாசிசத்தை எதிர்த்துப் போராட முன் வருகின்ற ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினருடன் இணைந்து அமைக்கப்படும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி ஒரு ஜனநாயகக் கூட்டரசு அமைப்பதை நோக்கி மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரச்