Posts

Showing posts from October, 2021

நேபாளத்தில் ஆட்சி கவிழ்ப்பு

Image
சூழ்ச்சி- சதிகளில் மேலாதிக்கவாதிகள், புரட்சிப் போரில் மாவோயிஸ்டுகள். அண்டை நாடான நேபாளத்தில், கடந்த பிப்ரவரி முதல் நாளன்று, மன்னர் ஞானேந்திரா தனது அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம், பெயரளவுக்கு நீடித்து வந்த நாடாளுமன்ற ஆட்சிமுறையின் தலையைச் சீவி, உயிரைப் பறித்து சவக் குழிக்கு அனுப்பி விட்டார். ஏற்கெனவே, 2001இல் அவசர நிலையை அறிவித்தும் 2002இல் நாடாளுமன்றத்தைக் கலைத்தும் பிரதமர் தியோபா தலைமையிலான தற்காலிக பொறுப்பு அரசு தொடங்கி வைத்த சர்வாதிகார சதிராட்டத்தை இப்போது மன்னர் முழுவீச்சில் முழுமைப்படுத்தியுள்ளார். அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை முடக்கியும், செய்தி ஊடகங்களின் குரல் வளையை நசுக்கியும், மக்களின் அனைத்து அடிப்படை உரிமைகளையும் ரத்து செய்தும், காலவரையின்றி அவசரநிலையை அறிவித்தும் இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் வானளாவிய அதிகாரத்துடன் கொக்கரிக்கிறார். பின்தங்கிய வறுமை நிலையில்உள்ள ஏழை நாடான நேபாளத்தில், மன்னாராட்சிக் கொடுங்கோன்மைக்கு எதிராக 1990இல் நடந்த ஜனநாயகத்துக்கான மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து பெயரளவிலான நாடாளுமன்ற ஆட்சிமுறை புகுத்தப்பட்டது. இருப்பினும் வரம்பற்ற அதிகாரம் மன்ன

நேபாளம்-மாவோயிச புரட்சி வரலாறு!

Image
  அண்டை நாடான நேபாளத்தில், கடந்த பிப்ரவரி முதல் நாளன்று, மன்னர் ஞானேந்திரா தனது அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம், பெயரளவுக்கு நீடித்து வந்த நாடாளுமன்ற ஆட்சிமுறையின் தலையைச் சீவி, உயிரைப் பறித்து சவக் குழிக்கு அனுப்பி விட்டார். ஏற்கெனவே, 2001இல் அவசர நிலையை அறிவித்தும் 2002இல் நாடாளுமன்றத்தைக் கலைத்தும் பிரதமர் தியோபா தலைமையிலான தற்காலிக பொறுப்பு அரசு தொடங்கி வைத்த சர்வாதிகார சதிராட்டத்தை இப்போது மன்னர் முழுவீச்சில் முழுமைப்படுத்தியுள்ளார். அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை முடக்கியும், செய்தி ஊடகங்களின் குரல் வளையை நசுக்கியும், மக்களின் அனைத்து அடிப்படை உரிமைகளையும் ரத்து செய்தும், காலவரையின்றி அவசரநிலையை அறிவித்தும் இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் வானளாவிய அதிகாரத்துடன் கொக்கரிக்கிறார். பின்தங்கிய வறுமை நிலையில்உள்ள ஏழை நாடான நேபாளத்தில், மன்னாராட்சிக் கொடுங்கோன்மைக்கு எதிராக 1990இல் நடந்த ஜனநாயகத்துக்கான மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து பெயரளவிலான நாடாளுமன்ற ஆட்சிமுறை புகுத்தப்பட்டது. இருப்பினும் வரம்பற்ற அதிகாரம் மன்னரிடமே குவிக்கப்பட்டிருந்தது. ஓட்டுக் கட்சிகளின் பதவிச் சண்டை, கட்சித் தாவ

தோழர்களே!

“நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு புதிய ஜனநாயகப் புரட்சியை சாதிப்பது தான் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சியம் என்றாலும், நேபாள மக்கள் ஜனநாயகப் புரட்சி தற்போது ஒரு புதிய இடைக் கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது நேபாளத்தில் மன்னர் ஆட்சியை தூக்கி எறிந்து ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவுவது என்பதை அந்த இடத்தில் உடனடி நோக்கமாகக் கொண்டு போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த செயல் தந்திரத்தை வகுத்து மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது” என்று 2008 -ஆம் ஆண்டு புதிய ஜனநாயகம் இதழில் எழுதி இருந்தோம். குறிப்பிட்ட போர்த்தந்திர காலகட்டத்தில் பல்வேறு இடைக் கட்டங்கள் தோன்றும். அந்த இடைக் கட்டங்களை சரியாக கணித்து அதற்கு பொருத்தமான செயல்தந்திரம் வகுத்து கொள்ள வேண்டும். அதன் ஒளியில் முழக்கங்களை தீர்மானித்து மக்களை அரசியல் படுத்துவதும், மக்களைத் திரட்டுவதும் தான் அந்த இடைக் கட்டத்தை கடந்து செல்வதற்கான சரியான மார்க்சிய - லெனினிய அரசியல் வழியாக இருக்கிறது. குறிப்பிட்ட இடைக்கட்டம் என்பது சில பத்தாண்டுகளுக்கு அப்படியே நீடிக்கும் என்பது அரசியல் தற்குறிகளின் பார்வையாகும். இடைக்கட்டம் என்

இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றும் முனைப்பில் காவி பாசிஸ்டுகள்!

Image
  மூன்று பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, வீடுகளை பொக்லைன் மூலம் இடித்துத் தள்ளி தங்களது 'கடைமையை' நிறைவேற்றியது பிஜேபி அரசு. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான ஒரு காணொளி பலரையும் பதைபதைக்க வைத்தது. போலிசாரின் துப்பாக்கிகள் தொடர்ச்சியாக வெடித்துக் கொண்டிருக்கும் போது, கையில் கம்போடு சிலரை துரத்திக்கொண்டு ஓடிவரும் நபர், குண்டுக்கு பலியாகி வீழ்கிறார். அவரது இறந்த உடலை சூழ்ந்து நின்று சிலர் கட்டைகளால் தாக்குகின்றனர். அவரால் துரத்தப்பட்டவர்களில் ஒருவனான போட்டோகிராபர், அந்நபரின் மார்பின் மீது கொலைவெறியோடு எகிறி, எகிறி மிதிக்கிறான். துப்பாக்கிக் குண்டுக்கு பலியான அந்த நபர் தீவிரவாதியா என்ன? இல்லை. 28 வயதே நிரம்பிய மொய்னுல் ஹக் எனும் பெங்காலி முஸ்லிம் விவசாயிதான் அவர்! நெஞ்சை உலுக்கும் இச்சம்பவம் நடந்தது அஸ்ஸாமின் தரங் மாவட்டத்தில் உள்ள தால்பூர் கிராமத்தில்தான். அப்பகுதியின் நிலங்களை சீர்படுத்தி, சிறிய அளவில் விவசாயம் செய்து அங்கு நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பெங்காலி முஸ்லிம்களை, அங்கிருந்து அப்புறப்படுத்த அரசு பயங்கரவாதிகள் முயன்றபோது நிகழ்ந்த கொடூர சம்பவம்தான் அது. அங்கு வசித்து

வினை செய் வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு.

Image
  அன்பார்ந்த தோழர்களே!  இன்றைய அரசியல் சூழலில் முகநூல் பக்கம் தொடர்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்க வேண்டியுள்ளது என்பதை நாங்கள் உணர்கிறோம்.ஏகாதிபத்திய நிதி மூலதனம் உருவாக்குகின்ற நுகர்வு கலாச்சாரம், பண்பாட்டு ரீதியாக, அரசியல் விழுமியங்கள் அற்ற தக்கை மனிதர்களை உருவாக்குகிறது. அரசியல், சித்தாந்தம், லட்சியம், அர்பணிப்பு, தியாகம் போன்ற சொல்லாடல்களில் பின்னே உள்ள வலிமையான பொருட்களுக்கு உண்மையான மதிப்பு சமூகத்தில் குறைந்து கொண்டே போகிறது. ஏன் என்றால் இந்த சொல்லாடல்களை உபயோகிக்கின்ற மனிதர்கள் திடீரென்று தலைகுப்புற கவிழ்வதும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளாமல் நழுவுவது என்ற காரணங்களினால் சமூகத்தில் காத்திரமான விஷயங்களை விவாதிப்பதும் அதற்கு நேர்மையாக வாழ்நாள் முழுவதும் இருப்பது சாத்தியமற்றது, உடனே சாத்தியம் என்னவோ அதை பற்றி பேசலாம் போன்ற தற்குறித்தனங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்திய அரசியல் சூழலில் பாசிசம், கார்ப்பரேட் காவிப் பாசிசமாக வடிவெடுத்து ஏறித் தாக்கிவரும் இந்த சூழலில் அரசியல் சித்தாந்தம் குறிப்பாக சோசலிசம், கம்யூனிசம் போதிக்கும் மார்க்சிய-லெனினிய சித்தாந

நாடார் வரலாறு கறுப்பா…? காவியா…?

Image
 நூலின் உள்ளடக்கத்தை புரிந்து கொள்ளாமல் மேலெழுந்தவாரியாக சில அம்சங்களை படித்துவிட்டு அதிமேதாவிகள் போல காட்டிக் கொள்ளும் நுனிப்புல் மேயும், அரைவேக்காடுகள் தமிழகத்தில் அதிகரித்து விட்டனர். நூல் அறிமுகம்: நாடார் வரலாறு கறுப்பா…? காவியா…? என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த நூல் தமிழகத்தின் முற்போக்கு வழக்கறிஞர்களில் ஒருவரான, மூத்த வழக்கறிஞர் திரு.தி.லஜபதிராய் எழுதி 2019 ஆம் ஆண்டு வெளியானது. “கடந்த 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த சமூக போராட்டங்களில் பின் விளைவு தான் நாடார்களை சமூகத்தின் விளிம்பு நிலையில் இருந்து மையம் நோக்கி சிறிதளவு நகர்த்தி உள்ளது. ஈயேன இரத்தல் இழிந்தன்று என்பதை தவிர உழைத்து வாழும் எந்த தொழிலும் உயர்வானதே என்ற நிலையில் நாடார்கள் தங்கள் பனையேறும் சகோதரர்களின் அடையாளங்களையும் தீண்டத்தகாத சாதியாகக் கருதப்பட்ட அடையாளங்களையும் மறைத்துவிட அல்லது மறந்துவிட நினைப்பது ஒருவகை பண்ணை அடிமைத்தன (feudal) எண்ணவோட்டமே! இன்று உயர்வாகவும் அல்லது தாழ்வாகவும் கருதப்படும் எல்லா சாதியினரும் சில ஆயிரம் வருடங்களுக்கு முன் வேட்டையாடி உணவு சேகரிக்கும் மிக மிக சிறிய வேறுபாடுகளை கொண்ட கிட்ட

மக்கள் நல அரசு(Welfare State) : தோற்றமும் மறைவும் வரலாற்றுப் பின்புலம்.

Image
கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு அவை அனைத்தையும் தனியார் கொள்ளைக்குத் திறந்துவிடுகிறது அரசு. இந்தியாவில் மட்டுமின்றி, மேற்கத்திய நாடுகளிலும்கூட இதுதான் நடக்கிறது. ஏற்கெனவே பெற்றிருந்த சலுகைகளை இழந்து, வாழ்க்கைத் தரத்தில் மென்மேலும் கீழே தள்ளப்படும் மக்கள் இந்நாடுகளிலெல்லாம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று மக்கள் நலத்திட்டங்களை மறுக்கின்ற அமெரிக்க ஐரோப்பிய அரசுகள், அன்று சோசலிச நாடுகளில் அமல்படுத்தப்பட்ட மக்கள்நலத் திட்டங்களால் அச்சுறுத்தப்பட்ட காரணத்தினால்தான், தமது நாடுகளில் மக்கள்நலத் திட்டங்களை அமல்படுத்தினர் என்பதை விளக்குகிறார் அமெரிக்க இடது சாரி சிந்தனையாளரான ஜேம்ஸ் பெட்ராஸ். ‘ஸ்டாலினிய எதிர்ப்பு’ பேசிய மேற்குலக அறிவுத்துறையினர் முதலாளித்துவத்தின் கைக்கருவிகளாகச் செயல்பட்டு, தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கும், முதலாளித்துவத்தின் கொடூர ஆட்சி அரங்கேறுவதற்குமே துணை நின்றிருக்கின்றனர் என்று சாடுகிறார். அவரது கட்டுரையின் சாரத்தை மட்டும் இங்கே தொகுத்து தருகிறோம். முழு கட்டுரையின் ஆங்கில வடிவம்

பாஸிஸ்ட் எதிர்ப்பு இயக்கத்தின் ஒவ்வொரு தனித்தனியான பிரிவிலும் கம்யூனிஸ்டுகளுடைய கடமைப்பாடுகள்

Image
1. பாஸிஸத்தை எதிர்த்து ஒரு முறையான சித்தாந்தப் போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியத்தைப் பற்றி காங்கிரஸ் குறிப்பான கவனத்தைப் பாஸிஸ்டு சித்தாந்தத்தில் பிரதானமானது. மிகவும் ஆபத்து மிக்கது இனமொழி, தேசிய வெறியின் வடிவமாகும். மக்களுக்கு இதைத் தெளிவுபடுத்த வேண்டும். பாஸிஸ்டு பூர்ஷுவா வர்க்கம் தங்கள் நாட்டு மக்களை ஓடுக்கவும் கரண்டவும். இதர நாட்டு மக்களைக் கொள்ளையடிக்கவும் அடிமைப்படுத்தவுமான அதனுடைய கீழ்த்தரமான வர்க்கக் கொள்கையை நிறைவேற்றுவதற்காகத் தேசிய நலன்களைப் பாதுகாப்பதாகச் சொல்லி அந்தப் போர்வையைப் பயன்படுத்துகிறது. எல்லா வகையான அடிமைத்தனத்தையும், தேசிய ஒடுக்கு முறையையும் எதிர்த்துப் போராடும் தொழிலாளி வர்க்கம்தான் தேசிய விடுதலைக்கும் மக்களுடைய சுதந்திரத்திற்கும் உண்மையான கதாநாயகன் என்பது மக்களுக்கு எடுத்துக் காட்டப்பட வேண்டும். மக்களுடைய வரலாற்றைப் பாஸிஸ்டுகள் தவறாகத் திருத்திக் கூறுவதை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் எல்லா வழிகளிலும் நின்று போராட வேண்டும். சொந்த மக்கள் தங்களின் கடந்த காலத்தை வரலாற்றுப் பூர்வமாகச் சரியான வகையில் உழைக்கும் மக்களுக்குத் தெளிவு ஏற்பட அனைத்தும் செய்ய வேண்டும். லெனின், ஸ

சாவர்க்கரை காப்பாற்ற இந்திய கோயபல்ஸ்கள் அண்டப்புளுகு!

Image
 காந்தி இந்தியாவிற்கு வந்த பிறகு, காந்தியின் காலைப் பிடித்து விடுதலை ஆகிவிடலாம் என்று கனவு கான்கிறார் சாவர்க்கார். “காந்தி தன்னை கொல்ல; சாவர்க்காரிடம் சதித் திட்டம் தீட்டிக் கொடுத்தார்” சாவர்க்கர் பற்றி புதிய கதை ஒன்றை அவிழ்த்து விட்டிருக்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங். அவர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட போது பிரிட்டிஷ் ஆட்சியிடம் மன்னிப்புக் கடிதங்களை எழுதிக் கொண்டே இருந்தார். 9 ஆண்டுகள் சிறை வாழ்க்கையில் 5 மன்னிப்புக் கடிதங்களை எழுதிவிட்டார். அவர் அப்படி மன்னிப்புக் கடிதங்கள் எழுதியது காந்தியார் சொன்ன ஆலோசனைப்படிதான் என்று ராஜ்நாத் இப்போது பேசியிருக்கிறார். காந்தி மன்னிப்பு கேட்க சொல்லாமலிருந்தால் சாவர்க்கார் வீரத்தோடு சிறைச்சாலை கொடுமைகளை சந்தித்திருப்பார் காந்தி தான் மன்னிப்பு கேட்கச் சொன்னார் என்பது போல சொல்லுகிறாரா ? அல்லது காந்தியின் பேச்சுக்கு மரியாதை தந்து சாவர்க்கார் மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்று சொல்ல வருகிறாரா ? ஆனால் எல்லாமே உண்மைக்கு மாறானது. சாவார்க்கார் மன்னிப்புக் கடிதம் எழுதும் படலம் 1913 ஆம் ஆண்டே துவங்கிவிடுகிறது. காந்தி 1915 ஆம் ஆண்டு தான் தெ

இராவண லீலாக்கள் பரவட்டும்! இராமராஜ்ஜிய கனவு தகரட்டும்!

Image
 மூவாயிரம் ஆண்டுகளாக சாதியம் தலைவிரித்தாடும் அடங்காப்பிடாரியாக, அரசியலையும் கூட இன்று வரை தன் கையில் அடக்கி வைத்திருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில், வட இந்தியாவில் தசரா பண்டிகையும், தென்னிந்தியாவில் நவராத்திரி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாள் கொண்டாட்டத்திற்கு பிறகு இராவணனை ஒரு அரக்கனாக சித்தரித்து அவன் மீது அம்பு எய்தி அவனை அழிப்பதன் மூலம் நல்ல எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கை இந்து மதத்தை கடைபிடிக்கக் கூடிய மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் பக்தியில் மிகச்சிறந்தவனும், ஆதி சிவன் வழிபாட்டில் நம்பிக்கை உடையவருமான இராவணன் ஒரு கொடிய அரக்கன் என்பதே மிகப் பெரிய புராண புரட்டு ஆகும்.. நவராத்திரி என்பது இராமாயணத்தின் கொள்கைகளை தூக்கி நிறுத்தவே நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. அதாவது தீய சக்தியான இராவணன், இராமனால் அழிக்கப்பட்டதாக கூறப்படும் கோட்பாட்டின் அடிப்படையில்தான் இந்த நவராத்திரி எனப்படும் விஜயதசமி கொண்டாடப்படுகிறது என்கிறார்கள் இந்து மத வெறியர்கள். வட இந்தியர்கள் இதனை தசரா என்று கூறுகிறார்கள் ’தசரா’ என்பது தசா+ஹாரா என்பதிலிருந

இந்திய வரலாறும், வரலாற்று பொருள்முதல்வாதமும்

Image
               பேராசிரியர்.கருணாநந்தன் இந்தியாவின் வரலாற்றை வரலாற்றுப் பொருள் முதல்வாத பார்வையில் புரிந்து கொள்வது மிகவும் அவசியமானது. வரலாற்றுப் பொருள்முதல்வாத பார்வையின்றி தான் ஏற்றுக்கொண்ட தமிழ் இனவாதம், இந்திய தேசியம் போன்ற கண்ணோட்டத்திலிருந்து வரலாற்றை பரிசீலிப்பது தவறான போக்காகும். ஆனால் பேராசிரியர் கருணானந்தம் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் திராவிடர்களின் தொன்மை குறித்து விளக்குகிறார். தொடர்ந்து கேளுங்கள், பகிருங்கள்!

தோழர்களே,

இந்தியாவில் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரான கார்ப்பரேட் காவி பாசிச அடக்குமுறைகளும், அதன் அரசியல், பொருளாதார, பண்பாட்டு செயல்பாடுகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த பாசிச மயமாக்கும் சூழலில் அதை எதிர்த்துப் போராடுகின்ற சித்தாந்தமானது உலக அளவிலும், இந்திய அளவிலும் வெல்லற்கரிய கம்யூனிச சித்தாந்தம் மட்டுமே ஆகும்.  1930- களில் இத்தாலியின் முசோலினியும், ஜெர்மனியின் ஹிட்லரும் கொண்டு வந்த பாசிசத்திற்கு எதிராக ஐக்கிய முன்னணி அமைத்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை டிமிட்ரோவ் முன் வைத்தது உலக அளவில் கம்யூனிஸ்டுகள் தங்களின் வழிகாட்டும் கோட்பாடாக செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் அது முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாளி வர்க்கத்திற்கும், சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கும் கொடுத்த வழிகாட்டுதல் ஆகும். அதை அப்படியே பெயர்த்து நமது நாட்டிற்கு பொருத்துவது அறிவியல் ஆய்வுமுறை ஆகாது. பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் போது இந்தியாவை ஒன்றுபடுத்தி ஆள்வதற்கு பொருத்தமான ஆட்சி வடிவமாக பாராளுமன்ற ஜனநாயக முறை உருவாக்கப்பட்டது. கீழிருந்து மக்களின் எழுச்சியின் மூலம் காலனி ஆதிக்கத்தை தூக்கி எறிந்து உருவாக்கப

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,

நடைமுறை சிக்கல்களின் காரணமாக எமது (வினைசெய்) ஊடகம் சுமார் ஒரு மாத காலமாக இயங்காமல் இருந்து. இனி வரும் காலங்களில் எந்த வகையான பிரச்சினையும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவண் வினைசெய் ஊடகக்குழு, தமிழ்நாடு.