Posts

Showing posts from February, 2023

புரட்சிக்கு ஒரு நாள் முன்பாக லெனின் எழுதிய கடிதம்!

Image
வி.இ.லெனின் தமிழில்: அபிநவ் சூர்யா [ரஷ்யாவில் நடைபெற்ற பிப்ரவரி புரட்சிக்குப் பின் எட்டு மாதங்களில் லெனினின் எழுத்துகள் அனைத்துமே புரட்சியின் பாதையில் போல்ஷ்விக் புரட்சியாளர்களிடையே நிலவிய சித்தாந்த குழப்பங்களை, தயக்கங்களை நீக்கும் வகையில் இருந்தன. கீழ் காணும் கடிதம் லெனின் அவர்கள் அக்டோபர் புரட்சிக்கு ஒரு நாள் முன்பு மத்திய குழு உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் ஆகும். இதில் அவர், வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களை புரட்சியாளர்கள் உணராமல், மக்களின் புரட்சிகர உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் போவது எவ்வாறு மாபெரும் குற்றமாக விளையும் என்பதை விளக்குகிறார். ரஷ்ய புரட்சி அரங்கேறிய தேதி, தற்போது புழக்கத்தில் உள்ள ஜார்ஜியன் நாள்காட்டி முறைப்படி நவம்பர் 7 ஆகும். ஆனால் 1917 ஆம் ஆண்டில்,  ரஷ்யாவில் ஜூலியன் நாள்காட்டி முறை பழக்கத்தில் இருந்து. அது ஜார்ஜியன் நாள்காட்டி முறையை விட 13 நாட்கள் பின் தங்கியது. அதன்படி புரட்சி அரங்கேறிய தேதி அக்டோபர் 25. அதனால் இந்த கடிதத்தில் தேதிகள்  “அக்டோபர்” மாதத்தில் என குறிப்பிடப்பட்டுள்ளன. – ஆசிரியர் குழு] தோழர்களே , நான் 24ஆம் தேதி மாலையில் இவ்வரிகளை எழுதுகிறேன். மி

சிங்கார வேலர் நினைவு நாள் பாகம்-4

 சுயமரியாதை இயக்கம். சமதர்மம், இந்நாட்டு மக்களுக்குத் தக்கபடி எடுத்துச் சொல்லி, 'மார்க்சியம்' என்பதன் பொருளாதாரத் தத்துவத்தைச் சாதாரணமானவரும் உணரும்படி செய்த பெருமை இந்நாட்டில் இருவரையே சாரும். மற்ற மாகாண மக்கள் பொது உடைமைத் தத்துவத்தை உணர்த்திருப்பதற்கும், இம்மாகாண மக்கள் அதிலும் தொழிலாளர் இயக்கம் பொது உடைமையை உணர்ந்திருப்பதற்கும் இன்னும் ஏராளமான வித்தியாசம் உண்டு. மார்க்சிசத்தைக் கரைத்துக் குடித்து, எவரும் எளிதில் உணரும்படி எழுதியும் பேசியும் வந்தவர்கள் பெரியார் இராமசாமி அவர்களும், தோழர் சிங்காரவேலருமே யாகும். தோழர் சிங்காரவேலர் சயமரியாதை இயக்கம் வளருவதற்குப் பெரிதும் பாடுபட்டார். அவரின் உழைப்பை எந்தச் சுயமரியாதைக் காரனும் மறக்க மாட்டான். எல்லா மக்களும் இன்ப வாழ்வு பெற வேண்டுமென்ற சிறந்த இலட்சியமே அவருக்கு. இது கிடைக்க விடாமல் தடுப்பது எதுவாக இருப்பினும், அதனைத் தவிடு பொடியாக்க வேண்டுமென்று அவர் துடித்தார். ஏகாதிபத்தியம், மதவாதம் இரண்டுமே முடக்குவாத நோய் தான்-சமுதாயத்துக்கு என்பதை அவர் எவருக்கும் அஞ்சாது கூறினார். அவருடைய தீவிர வாதத்தைக் கண்டு திகில் கொண்டவர்கள் அவரை நாத்திகர

சிங்கார வேலர் நினைவு நாள் அறிஞர் அண்ணாவின் கட்டுரை பாகம்-3

Image
சிங்கார வேலருடைய அபாரத் திறமை தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தின் போது நன்கு விளங்கிற்று. அதுசமயம் அவர், பத்து ஆண்டு சிறைத்தண்டனை தரப்பட்டார். ரயில்வே வேலை நிறுத்தம் நான்கு நாட்கள் வெற்றி கரமாக நடந்ததைக் கண்டு, ரயில்வே தலைமை அதிகாரி, ரயில்வே தொழிலாளர்களுடன் சமாதானத்திற்கு வருவதைத் தடுத்தவர்களும், தானும் தனது சகாக்களும் கடும் தண்டளை பெற்றதிலிருந்து தப்பி, அப்பீல் மூலம் முயன்ற காலத்தில், அதற்கு எதிராக இருந்தவர்களும், பெசண்டு அம்மையாரும் அவர் தம் சிஷ்ய கோடிகளும்தான் என்பதைத் தோழர் சிங்காரவேலர் நன்கு உணர்ந்தார். ரயில்வே வேலை நிறுத்தத்தில். இந்நாட்டுப் 'பத்திரிகை ஜாதி செய்த பொய்ப் பிரசாரம் அன்றைய ஒரு லட்சம் தொழிலாளர் வாயில் மண் போட்டது என்பதற்கும், பின் தலை எடுக்கவேண்டிய கோடானு கோடி தொழிலாளரின் கண் விழிப்புக்குத் தடைக் கல்லாக இருந்தது என்பதையும் கண்ட பின்பே, அவர் மன மாறுதல் அடைந்தார். சமூகம் உண்மையாக நியாயம் பெறவேண்டுமானால், முதலாளிகளான வெள்ளை முதலானி, கருப்பு முதலானி ஆகிய இவர்களின் பிடியினின்று விடுதலையாகுமுன், முதலாளிகட்கும், தொழிலாளிகட்கும், உண்மையில் துரோகிக ளாக உள்ள போலித் தொழில

சிங்காரவேலர் நினைவுநாள் பாகம் -2

Image
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரிடையாகக் கிளம்பிய சிப்பாய்க் கலகம் 1857-ல் நடந்தது. சிறுவன் சிங்காரவேலனுக்கு, அந்தக் கலகம் காலத்துச் சம்பவங்களையே, வீட்டாரும் ஊராரும் கூறியிருப்பார்கள். பொழுது போக்குக்கோ, மிரட்டவோ, எக்காரணத்துக்காகவோ, கம்பெனிக்காரனைச் சிப்பாய்கள் எதிர்த்தனர். எதிர்த்தவர்களை வெள்ளைக் காரர் சுட்டனர் என்று சிறுவயதிலே அவர் கேள்விப்பட் டிருப்பார். நமது காலத்தைப்போல் கவர்னர் ஜெனரலின் கனவு - கோகலேயின் தெளிவு - முதல் சீர்திருத்தத்தின் அழகு - என்பன போன்றவைகளை அல்ல, அவர் சிறுவராசு இருக்கும்போது கேட்டது.  நாம் அடிமைத் தனத்திலே - நாடு அதிகமாக ஊறிப்போன காலத்திலே பிறந்தோம்; அவர் ஆங்கிலேய ஆட்சியை ஆயுத பலத்தால் தாக்கிய சிப்பாய்க் கலகம், சிறுவர்களுக்கான சிறு கதை யாகப் பேசப்பட்ட காலத்திலே பிறந்தவர். 1862-ல், சிப்பாய்க் கலகம் அடங்கி ஐந்து ஆண்டுகள் ஆன பிறகு அவர் பிறந்தார். புயல் அடித்து ஓய்ந்தது. ஆனால் சாய்ந்துபோன மரங்களிலே சில, பாதையிலே கிடந்தன! அப்படிப்பட்ட சமயத்திலே பிறந்தவர், சிங்காரவேலர். இறுதிவரையில் அவரைப் பொருத்தவரையிலே 1857 தான் ஏகாதிபத்யம், முதலாளித்னம், வர்ணாஸ்ரமம், மௌடீகம்? இவைகளைத் த

சிங்கார வேலர் நினைவு நாள்

Image
சிங்கார வேலரின் நினைவு நாளான இன்று பேரறிஞர் அண்ணா திராவிட நாடு 26/2/1946 இதழில் எழுதிய அஞ்சலிக் கட்டுரையை நான்கு பாகங்களாக பிரித்துத் தருகிறேன். நான்கும் இன்றே பதிவேறும். தவற விடாமல் வாசித்து விடுங்கள் 👇👇👇👇 சிந்தனைச் சிற்பி தோழர் மா. சிங்காரவேலர் இறந்துவிட்டார்; இலட்சியமே மூச்சாகக் கொண்டிருந்த சீரர் இந்தியா உப கண்டத்தின் முதல் பொது உடைமை வாதி காலமானார்.  மூன்றாவது சர்வதேச அபேதவாத அங்கத்தினர் மூவர்; இந்தியாவில், அவர்களில் ஒருவர் இவர். அப்படி ஒருவர் இருந்தாரா? என்றும் கேட்கும், நான்கு கதர் ஜிப்பாக்களும்,'' 'காரல் மார்க்ஸ் படிப்போரும்?” ஏராளம். சோவியத்திலே பொது உடைமை ஆட்சி ஸ்திரமாவதற்கு முன்னாலேயே, இங்கு சென்னையிலே, கடலோரத்திஸ், மயிலையில் ஒரு புரட்சி வீரர் உலவிக்கொண்டிருந்தார். உலகிலே காணப்படும் கொடுமைகளைக் கண்டு, மனதிலே கோபம் அலை அலையாகக் கிளம்ப, அதனால் தூண்டப்பட்டு, யாரும் அதுவரையில் கேட்டறியாத கொள்கையை, பொது உடைமைத் தத்துவத்தைப் புரட்சிக் கனலுடன் கலந்து அளித்து வந்தவரே, தோழர் மா.சிங்காரவேலர் என்பதை, அவர்கள் அறியார்கள். தேசியத் தொழிலாளர் இயக்கங்களிலே அவர், பிரபலமாக இருந்

கார்ப்பரேட் எதிர்ப்பு என்ற பெயரில் திமுகவையும், பாஜகவையும் சமமாக பார்க்கின்ற தற்குறி அரசியல்.

Image
இன்று திமுகவையும் அதன் திட்டங்களையும் வசைபாடுகின்ற மக்கள் அதிகாரம் எனப் பெயரை வைத்துக் கொண்டு செயல்படும் திருவாளர்கள் வெற்றிவேல், மருது உள்ளிட்ட சிலர் 2018 ஆம் ஆண்டு திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி மரணம் அடைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். ஏன் ஒரு ஆளும் வர்க்க கட்சியைச் சார்ந்த தலைவர் மரணம் அடைந்ததற்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்கான கேள்வி எதையும் அவர்கள் அப்போது எழுப்பவில்லை. அவர்கள் எழுப்பினாலும் எழுப்பா விட்டாலும் அதற்கான விடை சீனாவில் முதலாளித்துவ ஜனநாயகத்திற்காகப் போராடிய டாக்டர் சன்னியாட்சன் குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த நிலைப்பாடுகளை புரிந்து கொண்ட எவருக்கும் இரண்டு வேறு குழப்பமான நிலை இருக்க முடியாது. திமுகவின் கார்ப்பரேட் கொள்கைகளை விமர்சிப்பது வேறு! அதே சமயத்தில் பாஜகவையும், திமுகவையும் ஒரே தட்டில் வைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளை திசை திருப்புவதும், பலவீனப்படுத்துவதும் அரசியல் ரீதியிலான புரிதல் இன்றி தான்தோன்றி தனத்திலிருந்தும் அகநிலை விருப்பங்களில் இருந்தும் முன்வைக்கின்ற கருத்துக்களாகும். இதனால்தான் சொல்கிறோம் திமுகவை அதாவது திமுக உள்ளிட்ட அரசியல் கட்ச

பாசிசமும் நவீன பாசிசமும் பாகம்_2.

Image
பொதுவாக பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதாகக் கூறிக் கொள்கின்ற இடதுசாரி அமைப்புகள், திருத்தல்வாத மார்க்சிய லெனினிய அமைப்புகள், பல்வேறு ஜனநாயக சக்திகள் அனைவரும் அரசியல் மேற்கட்டுமானத்தில் உள்ள ஆட்சி வடிவங்களில் ஒன்றாகப் பாசிச ஆட்சியைப் புரிந்து கொள்கின்றனர். எனவே மேற்கட்டுமானத்தில் பாசிச ஆட்சிக்குப் பதிலாக வேறொரு ஆட்சி ஒன்றைக் கொண்டு வருவது ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர். இந்தியாவில் முதலாளித்துவ வடிவிலான பாராளுமன்ற அமைப்பை எப்படி குறிப்பிட்ட தருணங்களில் பயன்படுத்துவது அல்லது புறக்கணிப்பது என்பதைப் பற்றி மார்க்சிய - லெனினிய புரிதல் இல்லாத அரசியல் தற்குறிகள் அல்லது இடது சந்தர்ப்பவாதிகள் அனைவரும் தங்களுக்குப் புரிந்த வகையில் ஜனநாயக குடியரசு, மக்கள் ஜனநாயக அரசு எனப் பல்வேறு பெயர்களில் மாற்று ஒன்றை முன் வைக்கின்றனர் . வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் அல்லது ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் பாசிசத்தை வீழ்த்துவதற்கு, கம்யூனிஸ்டுகள் ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவினருடன் ஐக்கிய முன்னணி அமைத்து நிதி மூலதனத்தின் ஆகக்கேடான, ஆக பிற்போக்கான, ஆக இனவெறி பிடித்த, கடிவாளம் ஒன்று இல்லாத பாச