Posts

Showing posts from April, 2024

அதிகாரத்துவத்துக்கு எதிராக போராடுவோம்! பாகம் - 2.

4. கர்வம் தலைக்கேறி தாங்கள் பெரிய கொம்பு, மிக உயர்ந்த பேராற்றல் மிக்கவர் என்று எண்ணிக்கொண்டு செயல்படும் அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் மக்களின் மீது அதிகாரம் செய்துகொண்டு, அதைப் பார்த்து மற்றவர்கள் தம்மிடம் பணிந்து பயபக்தியுடன் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் பொறுக்கமுடியாத திமிர் பிடித்தவர்களாகவும், மற்றவர்களைத் தமக்குச் சமமாக மதிக்காதவர்களாகவும் உள்ளனர். மேலும் அவர்கள் அடிக்கடி மக்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றனர்; அல்லது காட்டுத்தனமாகக் கூச்சலிட்டு மக்களை இழிவுபடுத்துகின்றனர். இவ்வகை அதிகாரிகள் நிலப்பிரபுத்துவ மேலாண்மையாளரைப் போலவே நடந்து கொள்கின்றனர். 5. அறியாமையும் தகுதியின்மையும் கொண்டவர் களாக இருந்தபோதிலும், சில அதிகாரிகள் தங்களின்கீழ் பணிபுரிபவர்களிடம் அறிவுரையோ, ஆலோசனையோ கேட்பது தங்கள் கௌரவத்துக்கு இழுக்கு என்று எண்ணுகின்றனர். பீற்றிக் கொள்வது, ஊதிப் பெருக்க வைத்துக் காட்டுவது ஆகியவற்றால் பீடிக்கப்பட்ட இவாகள், மத்திய நிர்வாக அமைப்புகளுக்கு தவறான அறிக்கைகளை அடிக்கடி அனுப்புகின்றனர். இவர்கள் தவறான அல்லது திசை திருப்பும் அறிவிப்புகளை-அறிக்கைகளைஉருவாக்குவதோ

அதிகாரத்துவத்துக்கு எதிராக போராடும் கம்யூனிஸ்டுகள்!

"அதிகாரத்துவம் என்பது தாராளவாதம், தனிநபர் வாதம், கட்டளை வாதம்,  வழமை வாதம், மையமில்லா வாதம், துறை வாதம், குழுவாதம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையதாகும்" என்கிறார் தோழர் மாவோ. அரசியல் சித்தாந்த ரீதியாக ஓட்டாண்டித்தனத்தில் மூழ்கி போகும் தலைமை, தனது தலைமையை தக்க வைக்க கையில் எடுத்துக் கொள்கின்ற அதிகாரத்திற்கு  மறுபெயர் மேற்கண்ட அம்சங்களில் கண்டிப்பாக வெளிப்படுகிறது. இத்தகைய "அதிகாரத்துவம் என்பது நமது தலைமை உறுப்புகளை பெரிதும் தாக்கக்கூடிய ஒரு அரசியல் நோய்" என்கிறார் தோழர் மாவோ. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவர் ஜனநாயக மத்தியத்துவ விழுமியங்களுக்கு கட்டுப்படாமல், தான்தோன்றித்தனமாக தன்னுடைய விருப்பத்தை அமல்படுத்துவது என்பது அதிகாரத்துவத்தின் துலக்கமான வெளிப்பாடுதான். ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேலாக பிளவுபடாத , வலது, இடது சந்தர்ப்பவாத போக்குகளுக்கு  ஆட்படாத எமது அமைப்பிற்குள் 2020 ஆம் ஆண்டு இத்தகைய அதிகாரத்துவ போக்கு அமைப்பை பிளவு படுத்தியது. கார்ப்பரேட் காவி பாசிசம் நாடு முழுவதும் மிகப்பெரும் அபாயமாக, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிராக தாக்குதலை

பாசிச பாஜகவை எதிர்த்து தெருவில் நடக்கும் எமது போராட்டங்கள்!

Image
“பாசிச பாஜகவை தோற்கடிப்போம்! இந்தியாவை ஆதரிப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் கடந்த ஐந்து மாத காலமாக பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் கார்ப்பரேட் காவி பாசிச சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகின்ற சூழலில் தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துவோம் என்று நாங்கள் முன்வைத்த போது அதன் அனைத்து பரிமாணங்களையும் ஆய்வு செய்தே முடிவு செய்திருந்தோம். தேர்தலுக்கு வெளியில்தான் பாசிச பாஜகவையும், கார்ப்பரேட் காவி பாசிசத்தையும் வீழ்த்த முடியும் என்பதில் எமக்கு குழப்பமோ, ஐயங்களோ எதுவும் இல்லை. நாட்டின் பெரும்பான்மை மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைத்தும் குறிப்பிட்ட தருணத்தில் தேர்தல் அரசியலை முன்வைத்து வேலை செய்து கொண்டிருக்கும் போது வெறுமனே புறக்கணிப்பு என்று சொல்லிக்கொண்டு தனது குட்டி முதலாளித்துவ வர்க்க வாழ்க்கை குலையாமல் வீட்டில் இருந்து கொண்டே செயல்படுவது பொருத்தமானது அல்ல என்று முடிவெடுத்தோம். நாங்கள்