Posts

Showing posts from March, 2021

Fortress of War (2010)

Image
கதை. 1941. இரண்டாம் உலகப்போர் காலக்கட்டம். ரசியாவின் மேற்குப்பகுதியின் பெலாரஸ் பகுதி. போர்ட்ரெஸ் என்ற கோட்டைக்குள் 8000 செம்படை வீரர்களும் அவர்களுடைய குடும்பங்களும் வசிக்கிறார்கள். ஜூன் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை. அங்கு வாழ்பவர்கள் வார இறுதி நாள் என்பதால், ஜாலியாக நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போர் கட்டம் என்பதால், இட்லரின் நாஜிப்படைகள் எப்பொழுது வேண்டுமென்றாலும், தாக்குவார்கள் என ஒரு படைத்தளபதி கணிக்கிறார். ஒருவித பதட்டமாகவும், இறுக்கத்துடன் இருக்கிறார். அவர் கணித்ததை போலவே அடுத்தநாள் இட்லரின் நாஜிப்படைகளில் ஒரு குழு ரசிய வீரர்களின் இராணுவ உடையணிந்து, ரயிலிருந்து இறங்குகிறார்கள். எல்லோரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் விடிகாலை 4மணி அளவில் இட்லரின் வான்படை கொத்து கொத்தாக குண்டுகளை வீசுகிறார்கள். கோட்டைகள் தூள் தூளாகின்றன. வீரர்கள், மக்கள் என பலர் இறக்கிறார்கள். திடீர் தாக்குதலால் கொஞ்சம் நிலைக்குலைந்து போன செம்படையை, தளபதிகள் சுதாரித்து தாக்குதலை எதிர்கொள்ள தயார்படுத்துகிறார்கள். நாஜி படைகள் எந்தவித போர் ஒழுங்கையும் கடைப்பிடிப்பதில்லை. மக்கள் பலரையும் சுட்டுத் தள்ள

மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சாமியினுடய ஜாமீன் மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டது!

Image
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப்பட்ட மக்களுடனும், ஆதிவாசி மக்களுடனும் மக்கள் பணி ஆற்றி வரும் மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சாமி. அவருக்கு வயது இப்பொழுது 83. அவரை 2018 பீமாகோரேகான் வழக்கில், அதில் சம்பந்தமே இல்லாத மனித உரிமை ஆர்வலர்களான கவிஞர் வரவரராவ், பேராசிரியர் ஆனந்த் தெல்தும்ப்டே என வரிசையாக 15க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அரசு சிறையில் அடைத்து வருகிறது.   அதன் தொடர்ச்சியில் தேசிய புலனாய்வு அமைப்பு ஸ்டேன் சாமி அவர்களையும் கைது செய்து அக். 9ந் தேதி மும்பை சிறையில் அடைத்தது.   வயது மூப்பின் காரணமாக ஸ்டேன்சாமி அவர்களுக்கு நடுக்கவாத நோய் (Parkinson Disease) இருக்கிறது. அவரால், ஒரு குவளையில் தண்ணீர் குடிக்க முடியாத நிலை இருக்கிறது. தண்ணீரை உறிஞ்சி குடிப்பதற்கு உறிஞ்சி குவளையும், உறிஞ்சி குழலும் கேட்டதற்கு, அவரை கைது செய்யும் பொழுது நாங்கள் கைப்பற்றவில்லை என திமிராக பதில் சொல்லியது. ஊரே காறித்துப்பிய பிறகு, 20 நாட்கள் கழித்து உறிஞ்சி குடிப்பதற்கான பொருட்களை வழங்கினர்.   இப்பொழுது அவருக்கு சிறையில் தன்னுடன் இருக்கும் பிற மனித உரிமை ஆர்வலர்களும், உடன் இருக்கும் சிறை கைதிக

பெரியார் மண்ணா? பார்ப்பன பாசிசமா? கொதிக்கும் தேர்தல் களம்!

Image
தேர்தல் சூறாவளியால் பரபரப்பாக இருக்கிறது தமிழ்நாடு. நாளொரு காமெடியும் பொழுதொரு போர்க்களமுமாக அல்லோலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் வேட்பாளர்கள்.  5 முனை போட்டி. இலை ஜெயிக்குமா? விடியல் வருமா? என டி.ஆர்.பிக்காக மல்லுக் கட்டுகின்றன ஊடகங்கள். ஒவ்வொரு கட்சிக்கும் இத்தேர்தல் மிக முக்கியமானதாக இருக்கிறது. அதிமுக விற்கு தனது கொள்ளையைத் தொடரவும், கட்சியைத் தக்க வைக்கவும் இத்தேர்தல் வெற்றி அவசியம். பாஜக விற்கு பெரியாரின் கோட்டையைக் கைப்பற்ற ஒரு சீட்டாவது ஜெயிக்க வேண்டுமென்ற கட்டாயம். திமுகவிற்கு கட்சியைக் காப்பற்றிக் கொள்வதற்கே வெற்றிபெற வேண்டும். விசிக. மற்றும்  இடதுசாரிக் கட்சிகளுக்கு பார்ப்பனியத்தை விரட்டியடிக்க வெற்றிபெற்றே தீரவேண்டும். பிஜேபியின் திட்டத்திற்காக  கழகங்களின் ஓட்டைப்பிரிக்க வேண்டிய கட்டாயம் சீமானுக்கும், கமலுக்கும். கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் மிக முக்கியமான தேர்தல் இது. தமிழக மக்களின் தன்மானத்தை, சுயமரியாதையை சோதிக்கின்ற தேர்தல். யார் வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாதென்பது முக்கியமாகப் பார்க்கும் தேர்தல். இத்தேர்தலின் சாரமே, திராவிட மரபை, பாரம்பர

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இப்பொழுது ரூ.90 விரைவில் 100 ஐ எட்டிவிடும்!

Image
ஒரு இந்திய குடிமகன் தான் சம்பாதிப்பதில் 30% (பத்து லட்சத்திற்கும் மேலாக) வரி கட்டவேண்டும். ஆனால், இந்த நாட்டில் கார்ப்பரேட்டுகளுக்கு வரி 22% கட்டினால் போதும். காரணம் கார்ப்பரேட்டுகளுக்கு இப்படி வரியை குறைக்காவிட்டால், தங்கள் நிறுவனங்களை எடுத்துக்கொண்டு பக்கத்து நாடுகளுக்கு ஓடிவிடுமாம். இப்படி கார்ப்பரேட்டுக்களுக்கு வரியை குறைப்பதால், நாட்டுக்கு மிகப்பெரிய வரி இழப்பு ஏற்படுகிறது. கொரானா ஊரடங்கு காலத்தில் பெரும்பாலோர் ஊதியம் இழந்து, தொழில் இழந்து வாழ்வா, சாவா என தவித்த பொழுது, 100 கோடீஸ்வரர்களின் சொத்து 15 லட்சம் கோடி சொத்து மதிப்பு கிடு கிடுவென உயர்ந்திருக்கிறது. இப்படி நேரடி வரியை (Direct Tax) குறைத்த மத்திய அரசு தான், பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பெட்ரொல், டீசல் மீதான வரியை (indirect Tax) குறைக்க மறுக்கிறது. கூடுதலாக சாவுங்கடா! என பெட்ரோல் மீது ரூ 2.50யும், டீசல் ரூ.4யும் வேளாண் செஸ் வரியாக வசூலிக்க போகிறேன் என நம்ம நிதி அமைச்சர் நிம்மி இந்த பட்ஜெட்டில் அறிவித்துவிட்டார். வேளாண் செஸ்ஸாக வசூலித்தால் மத்திய அரசே வைத்துக்கொள்ளலாம். மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க தேவையில்லை.

75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி தாக்கல் செய்ய தேவையில்லையா?!

Image
பட்ஜெட்டில் இப்படி ஒரு அறிவிப்பை நிதி அமைச்சர் அறிவித்ததாக ஊடகங்கள் அறிவித்தன. பா.ஜ. தலைவர்கள் இந்த அறிவிப்பை ஒரு சாதனை போல பத்திரிக்கைகளில் சொல்லியிருந்தார்கள். உண்மை என்னவென்றால் ... நம் நாட்டில் பெரும்பாலும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் பிள்ளைகளை சார்ந்து தான் வாழ்ந்து வருகிறார்கள். அரசு வேலை பார்த்தவர்கள், தனியாரில் உயர்பதவிகளில் இருந்தவர்கள் என 75 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலும் வங்கிகளில் சேமிப்பாக வைத்திருந்து வட்டி வாங்கி வாழ்ந்து வருவார்கள். அந்த வட்டிக்கு வங்கி எப்போதும் போல வரி (TDS) பிடித்தம் செய்து அரசுக்கு செலுத்திவிட வேண்டுமாம். ஆக, வரி தாக்கல் செய்வதில் (Income Tax Return) இருந்து மட்டும் தான் விலக்கு என தெளிவாக சொல்லிவிட்டார்கள். வேறு வகைகளில் வருமானம் ஏதும் இருந்தால், கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்யவேண்டும் எனவும் கறாராக சொல்லிவிட்டார்கள்.இதைத் தான் சாதனை அறிவிப்பு என அலட்டிக்கொள்கிறார்கள். - சாக்ரடீஸ் #Budget #incometax

இருவர் செத்த பிறகு கால்வாயை மூடும் பணி!

Image
மதுரவாயில் பகுதியை ஒட்டி புறவழிச் சாலை (Bypass Road) கடந்து செல்லும். அந்த பாலத்திற்கு கீழே உள்ள சாலையை நொளம்பூர், முகப்பேர், அயனம்பாக்கம், அம்பத்தூர், ஆவடி என பல பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் அந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த கூவம் கரையோரம் தான் எம்.ஜி.ஆர் பல்கலை கழகத்தில் படிக்கும் மாணவர்களின் ஹாஸ்டல்களும் இருக்கின்றன. அந்த மாணவர்களும் அந்த பாலத்தின் வழியே தான் தினம் போய்வருகிறார்கள். அந்த பாலத்திற்கு அடியே கூவம் ஓடுகிறது. அந்த கூவத்திற்கு மேலே உள்ள பாலம் தாழ்வானது. அந்த பாலத்திற்கு எந்த தடுப்பும் கிடையாது. அந்த பகுதியில் வெளிச்சமும் கிடையாது. அங்கு கடந்து செல்பவர்கள் கொஞ்சம் பிசகினாலும் கூவத்தில் கவிழ்ந்துவிட கூடும். புறவழிச் சாலையில் பெய்கின்ற மழையும், அந்த பகுதியில் பெய்கின்ற மழையும் நொளம்பூர் பகுதியிலிருந்து வரும் திறந்த வழி கால்வாய் வழியே தான் கூவத்திற்கு வந்து சேரும். அவ்வப்பொழுது எங்கிருந்தோ கழிவுநீரை எடுத்து வரும் லாரிகள் அந்த கால்வாயில் கலந்துவிடும் காட்சியையும் அவ்வபொழுது பார்க்கமுடியும். பலமுறை மக்கள் புகாரளித்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. கடந

12 Angry Men - 1957

Image
  "நீதி புலன்களால் அறியமுடியாத பொருளாகும். அதனை உணர மட்டுமே இயலும்." "மனிதனை மனிதன் சுரண்டாத சமுதாயத்தில், ஒரு சிலருடைய நன்மைகளுக்காக பலர் துன்பங்கள் அனுபவிக்க வேண்டியதாக இருக்காத சமுதாயத்தில் மட்டுமே சமுதாய நீதியை நிலை நாட்ட இயலும்" - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம் தொகுப்பிலிருந்து... **** கதை. 18 வயது பையன் தன் தந்தையை கொன்றுவிட்டான் என்பது வழக்கு. சந்தர்ப்பங்களும், சாட்சிகளும் அவன் குற்றவாளி என்கிறார்கள். நீதிபதி சமூகத்தில் வெவ்வேறு தகுதிகளில் இருக்க கூடிய 12 பேரை ஜுரிகளாக நியமித்து, அந்த பையன் குற்றவாளியா இல்லையா என்பதை விவாதித்து முடிவைச் சொல்ல சொல்கிறார். அதன்படி தான் தீர்ப்பு என்கிறார். விவாதம் தொடங்கும் முன்பே, எத்தனை பேர் குற்றவாளி என வாக்கெடுப்பு நடத்தும் பொழுது, 11 பேர் "குற்றவாளி" என்கிறார்கள். ஒருவர் மட்டும் "குற்றவாளி இல்லை" என சொல்லவில்லை. நாம் விவாதிப்போம் என்கிறார். விவாதம் மெல்ல துவங்கி, வழக்கின் முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படுகிறது. இறுதியில் என்ன முடிவெடுத்தார்கள் என்பது முழுநீளக்கதை! ***** சமூகத்தில் பல்வேறு ந

ஆசிரியரும் பனானா கேக்கும்!

Image
நேற்று முடிவெட்ட வழக்கமான கடைக்கு போயிருந்தேன். அதே கடைக்கு தொடர்ச்சியாக செல்வதால், அவரோடு பொதுவிசயங்கள் பேசுகிற வழக்கம் வந்திருந்தது. அவரின் இரு பிள்ளைகள் ஒரு பிரபல பள்ளியில் படித்து வருகிறார்கள். கட்டணத்தை கட்ட சொல்லி, அடிக்கடி நச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்றார். ஆனால், அதே பள்ளியில் இருந்து ஒரு ஆசிரியர் ஒருவர் தன் கடைக்கு தொடர்ந்து வருவார் என்றார். அவர் நேற்று கடைக்கு முடிவெட்ட வந்திருந்தார். அவர் ஒரு விசயம் சொன்னதும் அதிர்ச்சியாக இருந்தது. "1998ல் ஆசிரியராக 1500 ரூ. சம்பளத்தில் சேர்ந்தேன். கடந்த 23 வருடங்களில், கொஞ்சம் கொஞ்சமா சம்பளம் கூடி கொரானா ஊரடங்கிற்கு முன்பாக, 45000 ரூ. சம்பளம் வாங்கினேன். ஊரடங்கு அறிவித்த பிறகு, ஏப்ரல் மாதத்தில் இருந்து ரூ. 9000 மட்டும் தான் சம்பளம் தந்தார்கள். இந்த ஜனவரியில் இருந்து கூட ரூ 3000 சேர்த்து ரூ. 12000 தருகிறார்கள். பற்றாக்குறைக்கு கடன் வாங்கித்தான் வாடகை உட்பட சமாளிச்சேன். கடந்த சில வருடங்களாக என் பொண்ணுக்கு கட்டணம் இல்லாமல் அனுமதித்தார்கள். இப்ப பொண்ணு பத்தாவது படிக்குது. இந்த வருசம் என்னை பள்ளிக்கட்டணம் வேறு கட்ட சொல்கிறார்கள். ர

கனஷத்ரு (மக்கள் விரோதி) - சத்யஜித்ரே

Image
மேற்கு வங்கத்தில் இருக்கும் சாந்திபூரில் 26 ஆண்டுகளாக மருத்துவராகப் பணியாற்றி நற்பெயர் எடுத்த அசோக் குப்தா தன்னிடம் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை கவனித்து அதன் காரணத்தைக் கண்டுபிடிக்க முற்படுகிறார். அவர்களுள் பெரும்பாலோர் நகரத்தின் மக்கள் தொகை நெருக்கம் அதிகமான பகுதியிலிருந்து வருவதால் அந்தப் பகுதியில் இருக்கும் திரிபுரேஷ்வர் கோவிலில் புனித தீர்த்தமாகத் தரப் படும் நீரை அறிவியல் பரிசோதனைக்கு அனுப்புகிறார். தண்ணீர் கொண்டுவரும் நிலத்தடிக் குழாய் உடைந்திருப்பதால் அந்த நீர் மாசு பட்டிருப்பதை ஆய்வு உறுதி செய்கிறது. அந்தக் குழாயை சரி செய்யும் வரை கோவிலை மூட வேண்டும் என்று ஒரு பத்திரிக்கைக்கு கட்டுரை எழுதுகிறார். அவருடைய கோரிக்கைக்கு முதல் எதிர்ப்பு அவருடைய சகோதரரும், நகரசபைத் தலைவருமான நிசித்திடமிருந்து வருகிறது. நிசித் அந்தக் கோவிலின் உரிமையாளர் நடத்தும் பார்கவா டிரஸ்டின் முக்கிய உறுப்பினரும் ஆவார். கோவில் உரிமையாளர் அசோக் குப்தாவின் வீட்டிற்கு ஒரு புட்டியில் புனித தீர்த்தத்தைக் கொண்டு வருகிறார். அதில் துளசி போன்ற மூலிகைகள் இருப்பதால் அது மாசுபடவ

The Post (2017) - பத்திரிக்கை சுதந்திரம்

Image
1960-களில் அமெரிக்கா வியட்நாம் மீது ஆக்கிரமிப்பு போர் செய்து கொண்டிருந்தது. வியட்நாமிய போராளிகள் கொரில்லா போர் செய்து அமெரிக்க ராணுவத்தினரை சிதறடித்துக் கொண்டிருந்தார்கள். உச்சக்கட்ட போர் சமயத்தில் 60 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இறந்தும் காணாமலும் போயினர். அமெரிக்க அரசோ கெத்தாக போரில் முன்னேறி கொண்டிருப்பதாக கதை விட்டுக் கொண்டிருந்தது. இராணுவ ஆய்வாளர் ஒருவர் உலகுக்கு உண்மையை சொல்ல நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஆதாரம் அளிக்கிறார். இதழில் வெளியானதும் நாடே கொந்தளிக்கிறது. அமெரிக்க அரசு ஆடிப்போய்விடுகிறது! 'நியூயார்க் டைம்ஸ்'க்கு போட்டி பத்திரிக்கையான 'வாஷிங்டன் போஸ்ட்' மேலும் வியட்நாமிய போர் தொடர்பான செய்திகளை தேடுகிறது. கண்டுபிடித்தும் விடுகிறது. இதற்கிடையில் வாஷிங்டன் போஸ்ட் பொருளாதாரத்தில் தள்ளாடுகிறது. பொதுமக்களிடம் பங்குகளை வெளியிட்டு, தன்னைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்கிறது. இதே சமயத்தில் நியூயார்க் டைம்ஸில் ஆதாரம் வெளியானதை ஒட்டி, அமெரிக்க அரசு சுதாரித்து மேற்கொண்டு ஆதாரங்களை வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி விடுகிறது. கிடைத்த ஆதாரங்களை

The Pursuit of Happyness (2006)

Image
கதை. 1981ல் நிகழ்கிறது. நாயகன் மருத்துவமனைகளில் அலைந்து திரிந்து ஸ்கேனர் விற்று பிழைக்கிறான். மனைவியும் வேலைக்கு செல்கிறார். ஐந்து வயது பையனுடன், வீட்டு வாடகை கூட கொடுக்கமுடியாமல் தடுமாறுகிறார்கள். நன்றாக வாழ்வோம் என்ற நம்பிக்கை இல்லாமல் போக மனைவி பிரிகிறார். தொழிலை மாற்றலாம் என்றால்.. ஆறு மாதம் பயிற்சி. சம்பளம் இல்லை. 20 பேர் கொண்ட குழுவில், முதலிடத்தில் வந்தால்... நிரந்தர வேலை என்கிறார்கள். வீடு இல்லை. வருமானம் இல்லை. ஐந்து வயது மகனுடன் பல்வேறு சோதனைகளை எதிர்கொள்கிறான். எல்லாவற்றையும் மீறி ஜெயித்தானா என்பது முழு நீளக்கதை! **** “அமெரிக்கன் பியூட்டி” என படம். அமெரிக்க குடும்பங்களின் அகம் எப்படி சிக்கலாக இருக்கிறது என அருமையாக பேசிய படம். உண்மை சம்பவங்களின் அடிப்படையான இந்த படமும் முக்கியமான படம் தான். உலக நாடுகள் முழுக்க தலையிட்டு ரவுடித்தனம் செய்து கொண்டிருக்கும் அமெரிக்கா, அங்கு ஒரு சராசரி மனிதனின் வாழ்வு எத்தகைய அழுத்தங்களுடனும், பதட்டங்களுடனும் நகர்கிறது என சொல்கிறது படம். அடிதடி நாயகனான ஸ்மித்தும், அவருடைய பையனும் பாத்திரங்களில் அத்தனை இயல்பாக நம்மை கொள்ளை கொள்கிறார்கள். எத்தனை து

The Boy in the Striped Pajamas (2008) அகதியென்றால் அவமானம் தாங்கி பழகவேண்டும்!

Image
  life is beautiful, Schindler's List , The Pianist - நாஜிக்களின் வதை முகாம் பற்றிய படங்களில் இதுவும் முக்கிய படம் தான் ஜெர்மனி. இரண்டாம் உலகப்போர் காலகட்டம். 9 வயது புரூனோ பள்ளி விட்டு சந்தோசமாய் நண்பர்களுடன் வீட்டை நோக்கி ஓடிவருகிறான். அப்பா இட்லரின் நாஜிப்படையில் ஒரு முக்கிய அதிகாரி. பதவி உயர்வு கொடுத்து, வேறு ஊருக்கு மாற்றல் செய்யப்படுகிறார். பள்ளியை, நண்பர்களை விட்டு வர புரூனோவுக்கு மனம் வரவில்லை. அப்பா ஆறுதல் சொல்லி அழைத்துப்போகிறார். போனால், அது ஊருக்கு ஒதுக்குப்புறமான தனியான பங்களா. சுற்றிலும் வீடுகள் இல்லை. பள்ளி இல்லை. புரூனோவின் அப்பா, புரூனோவிற்கும், அவனின் அக்காவிற்கும் வீட்டில் வந்து சொல்லித்தரும் ஒரு ஆசிரியரை ஏற்பாடு செய்கிறார். பள்ளி இல்லாமல், நண்பர்கள் இல்லாமல் அவனுக்கு எதுவும் பிடிக்கவேயில்லை. தனிமையில் வாடுகிறான். வீட்டை விட்டு கொஞ்சம் தள்ளி வேலியிடப்பட்ட நாஜிக்களின் வதைமுகாம் ஒன்று இருக்கிறது. அங்கு சிறைப்பட்டிருக்கும் யூத மக்களுடன் ஒரு யூத சிறுவனும் வேலை செய்கிறான். அவனக்கும் புரூனோவின் வயது தான். வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் பின்பக்கமாக ஜன்னலேறி கு