Posts

Showing posts from November, 2023

புரட்சிக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும் ! | லெனின்

Image
விசேடமான இரகசிய எந்திரத்தைக் கட்டியமைப்பது, ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரையும் புரட்சிக் கடமைகளுக்காக வளர்த்தெடுப்பது, புரட்சி நடவடிக்கைகளுக்குப் போதுமானதாக கட்சி நிறுவனத்தைக் கட்டியமைப்பது தலைமையின் தலையாயக் கடமை. முதல் பாகம் புரட்சி நடவடிக்கைகளுக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும். 57. எனவே புரட்சிக்கு முந்திய காலத்திலேயே புரட்சியின் தேவைகளுக்குப் போதுமான ஒரு போரிடும் நிறுவனத்தை உருவாக்கி உறுதிப்படுத்துவதை உத்திரவாதப்படுத்தக் கூடிய முறையில் நமது பொதுவான கட்சி வேலைகள் பிரித்தளிக்கப்பட வேண்டும். பொதுவுடைமைக் கட்சியை வழிநடத்தும் தலைமையானது தனது நடவடிக்கைகள் அனைத்திலும், புரட்சியின் தேவைகளால் வழிநடத்தப்படுவது மகத்தான முக்கியத்துவமுடையதாகும். இத்தேவைகள் என்னவாக இருக்குமென்று முன்கூட்டியே சாத்தியப்பட்ட அளவு காண முடிவது மகத்தான முக்கியத்துவம் உடையதாகும். இது இயல்பாகவே எளிய விசயமல்ல. ஆனால் இது எந்த விதத்திலும் பொதுவுடைமைவாத நிறுவனத் தலைமையில் இந்த முக்கிய விசயத்தைக் கவனத்தில் கொள்ளாமல் விடுவதற்கான காரணமாக இருக்கக் கூடாது. பகிரங்கமான புரட்சி எழுச்சிகளின் காலத்தில், கட்சி இயங்குவதில்