சிவசங்கர் பாபா எனும் பொறுக்கி சாமியார்!
நித்யானந்தா , பிரேமானந்தா வரிசையில் இணைந்துள்ளான் சிவசங்கர் பாபா . இந்தப் போலிச் சாமியார்களே பொறுக்கிகள்தான் . அதிலும் இவன் கடைந்தெடுத்தப் பொறுக்கி . உலகத்திலுள்ள எல்லாக் கெட்டவார்த்தைகளுக்கும் பொருத்தமானவன் . பத்ம சேஷாத்ரி பள்ளியால் ஏற்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள்ளாக , அதைவிட பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது இவனது காமக் களிவெறியாட்டங்கள் . சென்னை ஈசிஆர் கேளம்பாக்கத்தில் உள்ள ” சுஷில்ஹரி இண்டர்நேசனல் ஸ்கூல் ” பள்ளியின் நிறுவனர்தான் இந்த 70 வயது கிழட்டுப் பொறுக்கி . ” கடவுளுக்காக வந்திருக்கிறேன் . கடவுளாக வந்திருக்கிறேன் ” என தன்னை விஷ்ணுவின் அவதாரமாகக் கூறிக்கொண்ட போலிச்சாமியார் . பாலியல்வெறிபிடித்த ஜந்து . பிஞ்சுக் குழந்தைகளையும்கூட கடித்துக் குதறும் மோசமான மிருகம் . மற்ற பள்ளிகளைப்போலவே , இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் மூலம்தான் இப்பிரச்சினை வெளிஉலகத்துக்கு வந்துள்ளது . தற்போதைய மாணவிகளும் புகார் அளித்துள்ளனர் . சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ள அக்குழந்தைகளின் வாக்குமூலங்களை காதுகொடுத்துக் க...