Posts

Showing posts from December, 2020

பொலிவியா – ஓடு, ஒளிந்து கொள்! பகுதி-4

Image
பொலிவியா – ஓடு, ஒளிந்து கொள்! பகுதி-4 தென் அமெரிக்க கண்டம். அமெரிக்காவின் தின்பண்டம். 1958-ல் கழுகின் காலில் முள் தைத்தது. கியூபாவில் விடுதலைப் போர் வெற்றி. இப்போது தேசிய பொருளாதாரத்தைக் கட்டுகிறது வெனீசுலா. அவர்களோடு கை கோர்த்தார் மொராலஸ். விடுமா அமெரிக்கா? டாலர் சாக்கடை வழிந்து ஓடியது. அரசியல் கட்சிகள், ராணுவம், ஊடகம் அனைத்தும் நக்கின. 2019 நவம்பரில் தேர்தல். நான்காவது முறையாக வென்றார் மொராலஸ். தேச துரோகிகள் முறைகேடு என்றார்கள். உலக ஊடகம் ஒப்பாரி. எதிர் கட்சிகள் கலாட்டா. மொராலஸைக் கொல்ல கூலிப்படைகள். பதவி விலகினார் மொராலஸ். ஆனஸ் அதிபர் ஆனார். மொராலஸ் கட்டியதை எல்லாம் இடித்தார். இப்போது மக்கள் திருப்பி அடித்திருக்கிறார்கள். தேர்தலில் மீண்டும் மொராலஸின் கட்சி வெற்றி. தேச துரோகிகள் மீது நடவடிக்கை பாய்கிறது. ஆனஸ் திருட்டுத்தனமாக அமெரிக்காவிற்கு ஓட வழி தேடுகிறார். டிரம்பின் தோழியே! மக்களின் கோபம் உன்னை விடாது. ஓடு. ஒளிந்து கொள். தொடர் முடிந்தது! -சார்லி

பொலிவியா – ஓடு, ஒளிந்து கொள்! பகுதி-3

Image
  பொலிவியா – ஓடு, ஒளிந்து கொள்! பகுதி-3 மொராலஸ் யார்? பழங்குடி இனம். விவசாயி மகன். விவசாயிகளின் போராட்டங்களோடு வளர்ந்தார். விவசாய சங்கத்தை வலுவாக்கினார். படிப்படியாக அதன் தலைவரானார். சோசலிச இயக்கத்தில் சேர்ந்தார். போராட்டங்களில் முன் நின்றார். பெக்டெல் என்ற அமெரிக்க கம்பெனி நீரை உறிஞ்சி கொள்ளையிட்டது. கோச்சாம்பா நகரில் மக்கள் அடித்து விரட்டினர். மொராலஸ் முன்னணியில் நின்றார். மக்களின் மனதை வென்றார். விளைவு? 2006 குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி. அறிவித்தார். இனி இயற்கை வளங்கள் நாட்டின் சொத்து. ரயில்வே, தொலைத்தொடர்பு தேசியமயம். எரிவாயு கம்பெனிகளின் லாபத்தில் 88% வரி. கார்ப்பரேட்டுகள் அலறின. மக்கள் சிரித்தனர். அரசின் கருவூலம் நிரம்பியது. நாடெங்கும் அரசுப் பள்ளிகள் அரும்பின. 100% எழுத்தறிவு பெற்ற நாடானது பொலிவியா. குக்கிராமங்களிலும் அரசு மருத்துவமனைகள் முளைத்தன. மக்களின் நோய் நொடி தீர்ந்தது. இதோடு நிற்கவில்லை. அமெரிக்க கழுகை குறி வைத்தார். எப்படி? நாளைப் பார்க்கலாம். -சார்லி

பொலிவியா – ஓடு, ஒளிந்துகொள்! பகுதி-2

Image
  .                                     பொலிவியா – ஓடு, ஒளிந்துகொள்! பகுதி-2 வானைத்தொடும் ஆண்டில் மலைகள் ஒரு பக்கம். அமேசான் மழைக் காடுகள் மறுபக்கம். நடுவில் பரந்த புல்வெளிகள். ஆழமான பள்ளத்தாக்குகள். பசுமைப் போர்த்திய மண். உள்ளே வெள்ளி, லித்தியம், தாமிரம், பெட்ரோல். இதன் பெயர் பொலிவியா.        பொலிவியாவின் ஆட்சியாளராக ஒரு தகுதி வேண்டும். ரத்தத்தில் அமெரிக்க மோகம். சித்தத்தில் தேசதுரோகம். பொலிவியாவை பதமாக சமைத்துக் கொடுப்பவருக்கே ஆட்சி அதிகாரம்.  1970-ல் விதிவிலக்காக வந்தார் டோரஸ். இயற்கை வளங்கள் நாட்டின் சொத்து என்றார். அமெரிக்க கார்ப்பரேட்டுகளை அடக்கினார். அமெரிக்க கழுகு டாலரை வீசியது. கவ்விக் கொண்ட பொலிவிய ராணுவம் வாலாட்டியது. டோரஸைக் குதறியது. ராணுவ சர்வாதிகாரம் மக்களை அடக்கியது. அடக்கினார்கள் அமெரிக்க அடிமைகள். திமிறி எழுந்தார்கள் மக்கள். மீண்டும், மீண்டும் போராட்டங்கள். போராட்டக் களத்தில் பூத்தது ஒரு நெருப்பு மலர். அதன் பெயர் மொராலஸ்.  மொராலஸை நாளைப் பார்க்கலாம்                                                                 -சார்லி

பொலிவியா – ஓடு,ஒளிந்து கொள் -பகுதி 1

Image
  பொலிவியா – ஓடு,ஒளிந்து கொள் -பகுதி 1 டிரம்பின் தோழி ஓடி ஒளிகிறார். பெயர்: ஜீன் ஆனஸ். நாடு: பொலிவியா தொழில்: தாய்நாட்டைக் காட்டிக் கொடுப்பது. பாவத்தின் சம்பளத்திற்கு பயந்து ஓடி ஒளிகிறார். 2019 நவம்பரில் குடியரசுத் தலைவராக முடி சூட்டிக் கொண்டார். கிரீடம் வைத்தது டிரம்பின் அடியாட்கள். ஆனஸுக்கு இளகிய மனசு. பாவம் கார்ப்பரேட்டுகள். நாட்டைத் தின்னும் பசியில் துடித்தார்கள். நாட்டை நறுக்கி அவர்களின் பசியாற்றினார். பாவம் பணக்காரர்கள். வரி கட்ட மனம் இல்லை. வரிகளை ரத்து செய்தார். பாவம் முதலாளிகள். மக்களின் சேமிப்புகளைக் கடன் வாங்கித் தின்றார்கள். அதிகம் தின்றதால் அஜீரணம். கடன்களை ரத்து செய்தார். கொதித்து எழுந்தார்கள் மக்கள். போலீசின் தோட்டாக்களால் உயிரைப் பறிக்க முடிந்தது.. உணர்வை? பற்றிப் படர்ந்தன போராட்டங்கள். மண்டியிட்டார் ஆனஸ். தேர்தல் நடந்தது. தூக்கி வீசினர் மக்கள். ஓடி ஒளிகிறார் ஆனஸ். டிரம்பின் தோழியை ஓட விட்ட பொலிவியா பற்றி அடுத்த பகுதியில்! -சார்லி