Posts

Showing posts from January, 2024

நாட்டின் அரசியலை பிரதிபலிக்கும் JNU. பாகம் 1.

Image
இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிலையங்களில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம். (JNU) முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய அரசியலில் தோன்றும் பல்வேறு விதமான அரசியல் போக்குகள் அனைத்தும் இந்த பல்கலைக்கழக வளாகத்தில் பிரதிபலிக்கும் என்பதுதான் இதன் சிறப்புத் தன்மை. நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கின்ற அரசியல், பொருளாதார, பண்பாட்டு கருத்துக்களை முன்னறிந்து கூறுவதற்கு JNU எப்போதும் தயாராகவே உள்ளது. பாசிச அபாயத்தை அது தோன்றும் காலகட்டத்திலேயே முன்னறிந்து முன்வைத்தவர்கள் மாணவர்கள். 2016 ஆம் ஆண்டு எமது இணையதளம் செய்தியாளர்கள் JNU மாணவர்களுடன் நடத்திய நேர்காணல் மற்றும் கட்டுரை தொகுப்புகளை புதிய வாசகர்களுக்கு அறியத் தருகிறோம். வினை செய் ஆசிரியர் குழு. JNU – கம்யூனிசம் : புரட்சியா , தாராளவாதமா ? செய்தியாளர் குழு ஜே.என்.யு சென்று திரும்பி ஒரு மாதத்திற்கும் மேல் ஆகி விட்டது. அப்போது கண்ணையா குமார் சிறையிலும் உமர் காலித், அனிர்பான் உள்ளிட்ட தோழர்கள் தலைமறைவாகவும் இருந்தனர். நாங்கள் திரும்பி வந்ததற்கு இடைப்பட்ட நாட்களில் கண்ணையா பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டார். தலைமறைவாக இருந்த உமர் காலித் உள்ளிட்ட தோழர்கள்

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம் -8.

Image
1930 களில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார மந்தம், முதலாளித்துவத்தின் தோல்வி ஆகியவற்றிலிருந்து பிறந்தது பாசிசம். வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளான ஜெர்மனி மற்றும் இத்தாலியில் பாசிசம் மற்றும் நாசிசம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி கம்யூனிஸ்ட்களையும், சமூக - ஜனநாயக சக்திகளையும், கம்யூனிச ஆதரவாளர்களையும் நர வேட்டையாடியது. அந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் பணியை வரையறுத்து மூன்றாம் அகிலத்தின் 7-வது காங்கிரசில் தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ் ஆற்றிய உரை ஐக்கிய முன்னணி தந்திரம் என்று வெளியிடப்பட்டு ஏறக்குறைய 90 ஆண்டுகள் ஆகிறது. பாசிசத்திற்கு எதிராக பரந்துபட்ட உழைக்கும் மக்களை ஒரே அணியின் கீழ் திரட்டுவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி வேலை செய்ய வேண்டும் என்று முன் வைத்ததோடு, குறிப்பாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் வேலை செய்வதை வலியுறுத்தினார் டிமிட்ரோவ். இதன் அடிப்படையில் விவசாயிகளை திரட்டுவதற்கு தேவையான விவசாய அமைப்பை கலைத்து விட்டு செயல்பட்ட முந்தைய தலைமையின் விவசாய புரட்சியை கைவிட்ட போக்கை கண்டித்து மீண்டும் விவசாயிகள் அமைப்பை செயல்பட வைத்துள்ளது மக்கள் அதிகாரத்தின் தோழமை அமைப்புகள். ஆனால் விவ

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்_7

Image
சென்ற மாதம் நாங்கள் எழுத துவங்கிய ‘ஓட்டு பொறுக்கிகளும்’, ‘வெடிகுண்டு புரட்சியாளர்களும்’ என்ற தொடரை கடந்த 10 நாட்களுக்கு மேலாக பல்வேறு அமைப்பு வேலைகள் காரணமாக தொடர இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைய அரசியல் சூழல் கருதியும், மார்க்சிய லெனினிய இயக்கத்தில் தோன்றியுள்ள பல்வேறு திருத்தல்வாத போக்குகள், அதிநவீன திருத்தலாக போக்குகள், அரசியல் சித்தாந்தமற்ற தற்குறிகளின் உளறல்கள், லும்பன் கும்பலின் பிதற்றல்கள் போன்ற போக்குகள் காரணமாக மாற்று குழுவினர்கள் மீது வசைபாடல்கள், அவதூறுகளை கிளப்புவது போன்ற நிலைமையை சித்தாந்த ரீதியாக எதிர்கொள்வதற்கு இந்த தொடர் குறிப்பிட்ட அளவிற்கு பங்களிப்பு செலுத்தியுள்ளது என்று கருதுகிறோம். வினவு மற்றும் செங்கனல் ஆகிய இரண்டு பிரிவினரின் இத்தகைய போக்குகளுக்கு அடிப்படை என்னவென்றால் அரசியல் செயல்தந்திர வழியில் மக்களை திரட்டுவது, அதன் நீட்சியாக ஆயுதப் போராட்டத்திற்கு உயர்த்துவது என்ற மக்கள் திரள் வழியை புறக்கணித்து செயல்படுவதுதான். அதற்கு மாறாக தனது அதிரடி சாகச வழிமுறை அல்லது ’வெடிகுண்டு புரட்சி’ தத்துவத்தின் மூலம்  புதிய ஜனநாயக புரட்சி நடத்தப் போவ

ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?

Image
மார்க்ஸ்பிறந்தார் - 3 (கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு) 1. “கிளர்ச்சியற்ற மந்த நிலைமையின்” விலங்குகளில் ஆ) ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ? அக்காலத்திய பிரஷ்ய அற்பவாதி கட்டுப்பாட்டின் மீது மோகம் கொண்டிருந்தார். மாட்சிமை பொருந்திய சக்கரவர்த்தியின் மாடிவீடுகளில் – இராணுவ ரீதி, ஆன்மீக ரீதி ஆகிய இரண்டிலுமே- பயிற்சி பெற்ற அற்பவாதி பிரம்பின் மூலம் ஏற்படும் கட்டுப்பாட்டை உடனே ஏற்றுக் கொண்டார். உலகமே அதைப் பொறுத்திருக்கிறது என்று மனப்பூர்வமாக நம்பினும் பிரம்பின் மீது உண்மையிலேயே நாயைப் போன்ற பிரியம் அவருக்கு ஏற்பட்டிருந்தது; தன்னுடைய எசமான விசுவாசத்தை நிரூபிப்பதற்காக அதன் மீது கை வைத்த நபருடைய குரல்வளையைக் கடிப்பதற்குத் தயாராக இருந்தார். அவரே பிரம்பின் பாத்திரத்தை மனமுவந்து நிறைவேற்றினர். “கலவரம் செய்பவர்களைத்” தண்டித்தார். அற்பவாதி தன்னுடைய சொந்தப் புனிதத் தன்மை, தன்னுடைய நடத்தையின் குறை சொல்ல முடியாத ஒழுக்கத்தில் மிகவும் போதையடைந்திருப்பதால் எல்லோருக்கும் ‘ஒழுக்கத்தைப் போதிப்பது’ எல்லோரையும் சரியான பாதையில் இட்டுச் செல

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம் 6.

Image
கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி ஒன்றை கட்டுவது, அதன் மூலமாக பாசிசத்தை எதிர்த்து போராடுகின்ற புரட்சிகர ஜனநாயக சக்திகள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினர் ஆகிய அனைவரையும் ஒன்றிணைத்து ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவ வேண்டும் என்று முன்வைத்து செயல்படுகிறோம். ஜனநாயக கூட்டரசு நிறுவுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே 2024 நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. இந்த சூழலில் தேர்தலை ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துவோம் என்று அரசியல் முன்முயற்சியுடன் செயல்படுவதை புரிந்து கொள்ள திராணியில்லாத வினவு மற்றும் செங்கனல் தலைமை கிளிப்பிள்ளைகளைப் போல சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்கள். கார்ப்பரேட் காவி பாசிசத்தின் அனைத்து விதமான அடக்குமுறைகளையும் பற்றி அவர்கள் விளக்குவதை எங்காவது நாங்கள் மறுக்கின்றோமா அல்லது இப்படி நிலைமை இல்லை என்று முன்வைக்கின்றோமா என்றால் அதெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் தற்போது உடனடிக் கடமையாக தேர்தலை பற்றி முடிவு எடுப்பதற்கு சமூக சூழ்நிலையும், மக்களது மனநிலையும் கோருகிறது எனும்போது அதை கணக்கில் எடுத்துக் கொண்டு தேர்தல