Posts

Showing posts with the label பொதுவுடைமை

தமிழக முப்பெரும் கவிஞர் மரபில் ‘தமிழ் ஒளி’ தமிழ் மரபுக்கவிதை வரலாறு - பேரா. வீ. அரசு

Image
கவிஞர் தமிழ் ஒளியை அவர் கவிஞராக மலர்ந்த காலம் முதல் சுமார் 15 ஆண்டு காலம் இச்சமூகத்துக்குள்ளேயே வீரியமுள்ள கவிஞராக முதிர்ச்சி பெற்றது வரை அப்பயணத்தை சமூகத்தில் எழுந்த கொந்தளிப்புகளோடு சித்தரித்திருக்கிறார் பேரா. வீ. அரசு.   சாதாரணமாக கவிதை, அழகியல் என்று வந்தால் இலக்கிய வரலாற்றைத் தனியே துண்டித்து ரசனை அடிப்படையில் புகழ்பாடி ஓய்வதே ஒரு தனிபோக்கு; அல்லது அதற்குச் சாரமாக உள்ளீடாக உள்ள அரசியலை எடுத்து விளக்கி வாழ்த்திவிட்டுச் செல்வது மற்றொரு போக்கு.   இரண்டையும் ஊடாடிப் பாராட்டுவது சிறப்பான வழிமுறை.   தமிழ்ஒளி பாரதிதாசனின் வழிகாட்டுதலில் வளர்க்கப்பட்ட ஆலமரம்.    ‘போய் கரந்தையில் தமிழ்படி’ என்றார் தாசன்.   அங்கே பாடம் சொல்லிய வழிமுறையை ஏற்கமுடியாமல் வெளியேறுகிறார் தமிழ்ஒளி. சமூகத்தின் உண்மை வரலாற்றை, பண்பாட்டின் உண்மை வரலாற்றை ஆழ்ந்து தேடிய அந்தப் பாவலன் அச்சிறுவயதிலிருந்தே சாதியத்தின் கடுமை/கொடுமையையும் நேருக்கு நேர் அனுபவித்தான்.    பின்னாளில் ‘தமிழர் சமுதாயம்’ என்ற நூலில் அத்தனையையும் திரைகிழித்தான்.   (1945 வாக்கில் ஜீவாவைப் பார்த...