Posts

Showing posts from April, 2021

The Court (2014) மராத்தி

Image
தலித்துகளின் வாழ்க்கை மிக மோசமாக இருக்கிறது. இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு பதில் செத்துப் போகலாம் என மனம் கொதித்து பாடல் எழுதி மேடைகளில் பாடுகிறார் ஒரு நாட்டுப்புற பாடகர்.  தலித்துகள் மத்தியில் எழுச்சி வந்துவிடும் என பயந்து, “அவர் பாடியதால் ஒரு சாக்கடை அள்ளும் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார் ” ஆகையால் தற்கொலைக்கு தூண்டியதாக என ஒரு பொய்வழக்கை போட்டு சிறையில் தள்ளுகிறார்கள்.   அந்த வழக்கை கையாளும் அரசு தரப்பு வழக்கறிஞர், பாடகரின் விடுதலைக்காக போராடும் ஒரு வழக்கறிஞர், நீதிபதி, நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை அதன் இயல்புகளோடு காட்டுகிறார்கள்.   பிறகு அவர் விடுதலையானாரா என்பதை முழுப்படமும் விவரிக்கிறது.   அரசு தரப்பு வழக்கறிஞர் ஒவ்வொரு முறை வழக்காடும் பொழுதும், சட்ட நுணுக்கங்களை மேற்கோள் காட்டி பெயில் கிடைக்காமல் செய்கிறார். அவர் தன் வேலையை ஒரு வழக்கமான அலுவல் வேலையாக பார்க்கிறாரே தவிர ஒரு மனிதன் வாழ்க்கை தன் கையில் உள்ளது என்ற பொறுப்புணர்ச்சி அவரிடம் சிறிதும் இல்லை.   பாடகரின் தரப்பு வழக்கறிஞர் பொறுமையாக போராடுகிறார். கோபப்பட்டோ அவசரப்பட்டோ ஒன்றும் ஆகப்போவதில்லை என்று அவர் கற்ற அ

தமிழக முப்பெரும் கவிஞர் மரபில் ‘தமிழ் ஒளி’ தமிழ் மரபுக்கவிதை வரலாறு - பேரா. வீ. அரசு

Image
கவிஞர் தமிழ் ஒளியை அவர் கவிஞராக மலர்ந்த காலம் முதல் சுமார் 15 ஆண்டு காலம் இச்சமூகத்துக்குள்ளேயே வீரியமுள்ள கவிஞராக முதிர்ச்சி பெற்றது வரை அப்பயணத்தை சமூகத்தில் எழுந்த கொந்தளிப்புகளோடு சித்தரித்திருக்கிறார் பேரா. வீ. அரசு.   சாதாரணமாக கவிதை, அழகியல் என்று வந்தால் இலக்கிய வரலாற்றைத் தனியே துண்டித்து ரசனை அடிப்படையில் புகழ்பாடி ஓய்வதே ஒரு தனிபோக்கு; அல்லது அதற்குச் சாரமாக உள்ளீடாக உள்ள அரசியலை எடுத்து விளக்கி வாழ்த்திவிட்டுச் செல்வது மற்றொரு போக்கு.   இரண்டையும் ஊடாடிப் பாராட்டுவது சிறப்பான வழிமுறை.   தமிழ்ஒளி பாரதிதாசனின் வழிகாட்டுதலில் வளர்க்கப்பட்ட ஆலமரம்.    ‘போய் கரந்தையில் தமிழ்படி’ என்றார் தாசன்.   அங்கே பாடம் சொல்லிய வழிமுறையை ஏற்கமுடியாமல் வெளியேறுகிறார் தமிழ்ஒளி. சமூகத்தின் உண்மை வரலாற்றை, பண்பாட்டின் உண்மை வரலாற்றை ஆழ்ந்து தேடிய அந்தப் பாவலன் அச்சிறுவயதிலிருந்தே சாதியத்தின் கடுமை/கொடுமையையும் நேருக்கு நேர் அனுபவித்தான்.    பின்னாளில் ‘தமிழர் சமுதாயம்’ என்ற நூலில் அத்தனையையும் திரைகிழித்தான்.   (1945 வாக்கில் ஜீவாவைப் பார்த்து கட்சியில் சேருவதோடு பத்திரிக்கைகளில் எழு

நாதக = பாஜக..

Image
இன்று அரசியல் சூழ்நிலையில் தமிழக இளைஞர்களுக்கு மாற்றாகவும் எழுச்சி நாயகனாகவும் தன்னை காட்டிக்கொள்பவர் அண்ணன் சீமான் அவர்கள். முன்னொரு காலத்தில் எனக்கும். அதனால்தான் அவரை நம்பும் தம்பி, தங்கைகளை நினைத்து மனம் கலங்குகிறது. சீமான்தான் மாற்று, வளர்ச்சிக்கான கீற்று என கருதுகிறோம். அவர் மாற்று அல்ல. மற்றொரு பாஜக. புரியவில்லையா? பாஜக எப்படி ஒரு பாசிச கட்சியோ, அதுபோல் அண்ணன் சீமானும் ஒரு பாசிஸ்ட். நாட்டை சீனா-பாகிஸ்தானிடம் இருந்து காக்க ஒரு தலைவன் (மோடி), அவருக்கான கட்சி (பாஜக). அந்த கட்சிக்காக மக்கள். பாஜக வை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள், ஆண்டி-இந்தியன், சீன கைக்கூலி என்பதெல்லாம் இந்த சர்வாதிகாரத்தின் வெளிப்பாடுதான். இதேதான் சீமானுக்கும் பொருந்தும். தன்னை முன்னிறுத்துவது. தான்தான் தமிழினத்தைக் காக்க வந்தவராக பீலா விடுவது. மோடி தேசிய வெறியைத் தூண்டி விடுவதுபோல தமிழின வெறியை தூண்டிவிடுவது. தமிழ்மானம் காப்பதற்கு சீமான் தேவை. அதற்காக ஒரு கட்சி. அதை ஆதரிப்பதற்காக மக்கள். 56 இஞ்ச் மார்பு என மோடி சீன் போட்டதற்கும், யாரா இருந்தாலும், அடிப்பேன், வெட்டுவேன், நான் அதை செஞ்சிடுவேன், இதை செஞ்சிடுவேன்னு ப

வானவில் நாவல் – நூல் அறிமுகம்

Image
சிவந்த கண்களோடு உங்களை நான் எச்சரிக்கிறேன், பழைய புத்தககடையில் இப்புத்தகத்தை நீங்கள் பார்க்க நேரிட்டாலோ, தனித்து விடப்பட்டு அனாதையாக அது கிடந்தாலும், உங்களை வெறுக்கும் உங்கள் நண்பர் தவிர்க்க முடியாதபடி இப்புத்தகத்தை உங்களிடம் ஒப்படைத்துவிட்டாலோ, வேறு எவ்வாறு இவ்வுலகில் அப்புத்தகத்தை நீங்கள் கடக்க நேரிட்டாலும் ஒருபோதும் படிக்க துணியாதீர். நான் இப்பொழுது உங்களுக்கு தரும் எச்சரிக்கையை எனக்கு யாரும் தரவில்லை, அதனால் அறியாமையில் அப்புத்தகத்தை திறந்து ஒருபக்கம் படிக்கலாமென வாசிக்கத் தொடங்கினேன். அது ஒரு அகோர போதை, என் ஐந்து நாள் தூக்கத்தை காவுவாங்கி விட்டது, இன்னும் ஒரு பக்கம் படிக்கலாம், இன்னும் ஒன்று, மேலும் சில, மற்ற அத்தியாயங்கள், எது 300 பக்கம்வந்துவிட்டதா, 321 பக்கம் ,புத்தகம் முடிந்துவிட்டதா, இன்னொரு முறை படிக்கலாமே எனதோன்றும் அளவுக்கு அந்த சிறந்த யுத்தகால நூல் என்மீது போர் தொடுத்துவிட்டது. நானும் எவ்வளவோ தப்பிக்க முயன்றேன். ஆனால் அதன் பலத்துக்கு முன்னால் என் பராக்கிரமங்களெல்லாம் நொறுங்கிப்போயின, வேறுவழியின்றி அதனிடம் நான் சரணடைந்தேன். அதன் பின்தான் நான் அறிந்தேன், அது என்மீது தாக்குத

Joji (2021) மலையாளம்

Image
கதை.  கேரளத்தின் ஒரு வளமான காட்டுப் பகுதியில் தனியாக ஒரு பெரியவீடு.  ஒரு தந்தை தனது மூன்று மகன்களுடன் கூட்டு குடும்பமாய் வாழ்ந்து வருகிறார்.  மூத்த மகனுக்கு திருமணமாகி, விவகாரத்தாகி, உயர்நிலைபள்ளி செல்லும் வயதில் ஒரு பையன் இருக்கிறான். இரண்டாவது மகன் திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்துவருகிறார். மூன்றாவது மகன் திருமணமாகாமல் விடலைத்தனத்துடன் இருக்கிறார்.   வீட்டில் உள்ள அனைத்து அதிகாரங்களையும் தந்தை தன்னிடம் வைத்துக்கொண்டு,   மூன்று பிள்ளைகளையும் தன்னிடம் வேலை செய்கிற ஆட்களாய் நடத்திக்கொண்டு இருக்கிறார்.   ஒவ்வொருவரும் தனித்தனியான கனவுகளுடன், தேவைகளுடன் இருக்கிறார்கள். எல்லாவற்றிக்கும் அப்பா கையை எதிர்ப்பார்த்து இருப்பது அவர்களுக்குள் கசப்பை உருவாக்குகிறது.   இந்த சமயத்தில் தந்தை உடல்நிலை சரியில்லாமல், படுத்தப்படுக்கையாகிறார். புகைச்சலோடு வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களுக்குள் இருக்கிற மன விகாரங்கள் மெல்ல மெல்ல வெளியே வருகிறது. பிறகு என்ன ஆனது என்பதை முக்கால்வாசி படத்தில் விரிவாகவும், உணர்வுபூர்வமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.   **** 17ம் நூற்றாண்டின் சேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகங்களில் மேக்

ஒற்றைப் பண்பாடு எனும் வன்முறை : கீழடி அகழாய்வு – தமிழ்ப் பண்பாடு – வீ. அரசு

Image
கீழடி அகழ்வாய்வு : வரலாற்று உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன!   “ மதம் குறித்த விமர்சனம் தான் எல்லா விமர்சனங்களுக்கும் முன்நிபந்தனையாகவும் உள்ளது” - காரல் மார்க்ஸ்  ’கடவுளின் மொழி’யாகச் சொல்லப்படும் சமஸ்கிருதத்தை, அதன் பண்பாட்டை, அதன் ‘உன்னதத்தை’ தலையில் தூக்கி ஆட்டம்போடும் ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.கவின் ‘ஒற்றைப் பண்பாடு எனும் வன்முறை’யை விமர்சிக்கும் பேரா. வீ. அரசுவின் குறுநூலை இங்கே அறிமுகம் செய்கிறோம். மோடியின் கட்சி-மதச்சார்பான கட்சி, சமஸ்கிருதத்தை ஆட்சி பீடத்தில் ஏற்ற முயற்சிக்கும் கட்சி, புராணமே இவர்களுக்கு வரலாறு, தென்னிந்தியா வேறு – வட இந்தியா வேறு, வரலாற்று அடிப்படையிலேயே வேறுபட்டது என்பதை இக்கட்சி ஏற்காது, ஆட்சியிலிருந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ் – பாஜக ஒற்றைப் பண்பாட்டை பாசிச முறையில் திணிக்கிறது என்று முன்னுரையிலேயே கூர்மையாக விமர்சிக்கிறார் வீ. அரசு. வரலாற்றுபூர்வமாக, ஒன்றன்பின் ஒன்றாய் அமைக்கப்பட்ட ஆய்வு நிறுவனங்கள், அவற்றின் தில்லுமுல்லுகளைப் பிரித்துக்காட்டுகிறார்.    பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனியம் 3 முக்கியவேலைகளைச் செய்தது.   1861ல் தொல்பொருள் ஆய்வு

பரவி வரும் கொரோனா இரண்டாவது அலையும், திருப்பதியும்!

Image
  கொரானா தொற்றை முன்வைத்து, அரசு அறிவித்த ஊரடங்கு முடிந்து ஒரு வருடத்தை கடந்துவிட்டோம். கொரானாவின் இரண்டாவது அலை இன்னும் புதிய வீரியத்துடன் பரவி வருகிறது என கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் சொல்லிவருகிறார்கள்.   இன்று தில்லி, சண்டிகார், சட்டிஸ்கரில் இரவில் நடமாட்டம் இருக்க கூடாது என சில அறிவிப்புகளை அறிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே மகாராஷ்டிரம் பல அறிவிப்புகளை கொடுத்தப்படி தான் இருக்கிறது. தேர்தல் முடிந்த கையோடு, ”முழித்துக்கொண்டு” தமிழக அரசும் பல அறிவிப்புகளை இன்று அறிவித்திருக்கிறது.   சென்னை உயர்நீதிமன்றமும், தேர்தல் வரை அமைதியாய் இருந்துவிட்டு, கவனமாகவே இல்லையே? என கண்டித்திருக்கிறது. இந்த அறிவிப்புகளுடன் இன்று திருப்பதி தேவஸ்தானம்   தனது பக்த கோடிகளுக்கு ஒரு அறிவிப்பு கொடுத்திருக்கிறது. வருகிற 11ந் தேதியிலிருந்து இலவச தரிசனம் ரத்து.   ஏற்கனவே இணையம் வழியாக ரூ. 300 மதிப்பு கொண்ட டிக்கெட்டுகள் தினமும் 30,000   விநியோகிக்கப்படுவது மட்டும் தொடரும் என அறிவித்திருக்கிறது. கடந்த 50 நாட்களுக்கு முன்பாக, அண்ணன், அக்கா குடும்பம் திருப்பதியை பார்க்க டிக்கெட் புக் பண்ணி தரச

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த உண்மையான விவரங்களோ, நலனுக்கான கொள்கையோ இதுவரை வகுக்கப்படவில்லை!

Image
இந்தியாவில் கொரோனாவுக்காக நாடடங்கு ( லாக்டவுன் ) அறிவித்து ஓராண்டு கடந்த நிலையிலும் , புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த உண்மையான விவரங்களோ , அவர்களின் நலனுக்கேற்ற கொள்கையோ இதுவரை வகுக்கப் படவில்லை . **** அடுத்தவேளை சோற்றுக்கு வழியில்லாத பல கோடி மக்கள் வாழும் நம் ஊரில் திடீரென ஒருநாளில் நாடடங்கை அறிவித்தார் பேரரசர் மோடி.   வீட்டுக்குள் சிறை வைத்தவர் சோற்றுக்கு வழிவகுக்கவேண்டும் அல்லவா! அடிக்கடி கை கழுவவேண்டும் என அரசு அறிவித்துக்கொண்டே இருந்தது. பேரரசர் முதலில் புலம்பெயர் தொழிலாளர்களைத்தான் கைகழுவினார்.   தொழில் இல்லை. வருமானம் இல்லை. பிள்ளைகள் படும் பாட்டை தாங்க முடியாமல் தற்கொலை செய்தார்கள் தகப்பன்கள். எந்த வாகனமும் இல்லை. தூரமும் அதிகம்.   பட்டினியால் சாவது என்றாலும், சொந்த ஊரில் சாகலாம் என முடிவெடுத்தார்கள்.     குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் என குடும்பம் குடும்பமாய் கால்நடையாய் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தார்கள். பசியில் செத்தார்கள். வெயில் கொன்றது. ரயில் ஏறியது. எஞ்சிய காசில் ஒரு பழைய சைக்கிளை வாங்கி தன் நடக்க முடியாத அப்பாவை சொந்