பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றும் சங்கிகள்!
பத்ம சேஷாத்ரி பால பவன் ( PSBB ). சென்னையில் உள்ள பிரபல பள்ளி . நடுத்தர , உயர் நடுத்தர மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளி . மக்களை பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வாகப் பார்க்கும் பார்ப்பனிய நஞ்சை விதைக்கும் பள்ளி . இப்போது மக்களின் கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கிறது . காரணம் , பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததற்காக அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால் கைது செய்யப்பட்டிருக்கிறார் . ஆன்லைன் வகுப்பில் அரைகுறை ஆடையுடன் இருப்பது . மாணவிகளின் புகைப்படங்களை அனுப்பச் சொல்வது . ஆபாச தளங்களின் லிங்க்குகளை அனுப்புவது . சினிமாவுக்கு போகலாமா என கூப்பிடுவது . மாணவிகளின் உடலமைப்பை கிண்டல் செய்வது . மாணவிகளுக்கு உடலளவிலும் , மனதளவிலும் தொல்லை தருவது என இவர் மீதான புகார்கள் நீள்கின்றன . முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்யப்படுள்ளான் இக்காமுகன் . இதைத் தொடர்ந்து 30- க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவிகள் புகார் அளித்திருந்தனர் . இன்று முன்ன...