தடுப்பூசியிலும் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு!
“ தடுப்பூசி கொரோனா மரணங்களை தடுக்கிறது . கொரோனா மூன்றாவது நான்காவது அலைகள் வராமல் தடுக்கவும் , வந்தாலும் தற்போதிருப்பதுபோல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தாமல் தடுக்கவும் மிக முக்கியமான ஆயுதம் ” என மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள் . அதன்படி , இந்த ஆண்டுக்குள் நாட்டில் 80% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் . அதனால்தான் மாநில அரசுகளும் தடுப்பூசிகளைப் பெற தீவிரமாக செயல்படுகிறார்கள் . ஆனால் , தடுப்பூசியை மாநில அரசுகளுக்கு பிரித்துத் தரவேண்டிய ஒன்றிய அரசோ ஓரவஞ்சனை செய்கிறது . ஒரு கண்ணுக்கு வெண்ணெயும் , இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்கிறது . 7.88 கோடி மக்கள்தொகை இருக்கும் இராஜஸ்தானுக்கு 1.42 கோடி தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளது . பாஜக ஆளும் குஜராத்தில் 6.94 கோடி மக்கள்தொகை . அதற்கு 1.06 கோடி ஒதுக்கியுள்ளது . இராஜஸ்தானை விட சற்று குறைவாக , 7.62 கோடி மக்கள்தொகை இருக்கும் தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்சம் 1.25 கோடியாவது ஒதுக்கியிருக்க வேண்டும் . ஆனால் , வெறும் 72 இலட்சம் தடுப்பூசி...