பொலிவியா – ஓடு, ஒளிந்துகொள்! பகுதி-2

 

.

                                   

பொலிவியா – ஓடு, ஒளிந்துகொள்! பகுதி-2

வானைத்தொடும் ஆண்டில் மலைகள் ஒரு பக்கம். அமேசான் மழைக் காடுகள் மறுபக்கம். நடுவில் பரந்த புல்வெளிகள். ஆழமான பள்ளத்தாக்குகள். பசுமைப் போர்த்திய மண். உள்ளே வெள்ளி, லித்தியம், தாமிரம், பெட்ரோல். இதன் பெயர் பொலிவியா.       

பொலிவியாவின் ஆட்சியாளராக ஒரு தகுதி வேண்டும். ரத்தத்தில் அமெரிக்க மோகம். சித்தத்தில் தேசதுரோகம். பொலிவியாவை பதமாக சமைத்துக் கொடுப்பவருக்கே ஆட்சி அதிகாரம். 

1970-ல் விதிவிலக்காக வந்தார் டோரஸ். இயற்கை வளங்கள் நாட்டின் சொத்து என்றார். அமெரிக்க கார்ப்பரேட்டுகளை அடக்கினார்.

அமெரிக்க கழுகு டாலரை வீசியது. கவ்விக் கொண்ட பொலிவிய ராணுவம் வாலாட்டியது. டோரஸைக் குதறியது. ராணுவ சர்வாதிகாரம் மக்களை அடக்கியது.

அடக்கினார்கள் அமெரிக்க அடிமைகள். திமிறி எழுந்தார்கள் மக்கள். மீண்டும், மீண்டும் போராட்டங்கள்.

போராட்டக் களத்தில் பூத்தது ஒரு நெருப்பு மலர். அதன் பெயர் மொராலஸ். 

மொராலஸை நாளைப் பார்க்கலாம்                         

                                      -சார்லி

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.