பொலிவியா – ஓடு, ஒளிந்து கொள்! பகுதி-3


 பொலிவியா – ஓடு, ஒளிந்து கொள்! பகுதி-3

மொராலஸ் யார்? பழங்குடி இனம். விவசாயி மகன். விவசாயிகளின் போராட்டங்களோடு வளர்ந்தார். விவசாய சங்கத்தை வலுவாக்கினார். படிப்படியாக அதன் தலைவரானார்.
சோசலிச இயக்கத்தில் சேர்ந்தார். போராட்டங்களில் முன் நின்றார். பெக்டெல் என்ற அமெரிக்க கம்பெனி நீரை உறிஞ்சி கொள்ளையிட்டது. கோச்சாம்பா நகரில் மக்கள் அடித்து விரட்டினர். மொராலஸ் முன்னணியில் நின்றார். மக்களின் மனதை வென்றார்.
விளைவு? 2006 குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி.
அறிவித்தார். இனி இயற்கை வளங்கள் நாட்டின் சொத்து.
ரயில்வே, தொலைத்தொடர்பு தேசியமயம். எரிவாயு கம்பெனிகளின் லாபத்தில் 88% வரி. கார்ப்பரேட்டுகள் அலறின. மக்கள் சிரித்தனர். அரசின் கருவூலம் நிரம்பியது.
நாடெங்கும் அரசுப் பள்ளிகள் அரும்பின. 100% எழுத்தறிவு பெற்ற நாடானது பொலிவியா. குக்கிராமங்களிலும் அரசு மருத்துவமனைகள் முளைத்தன. மக்களின் நோய் நொடி தீர்ந்தது.
இதோடு நிற்கவில்லை.
அமெரிக்க கழுகை குறி வைத்தார். எப்படி? நாளைப் பார்க்கலாம்.
-சார்லி

Comments

Popular posts from this blog

எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்_11.

அதிகாரத்துவத்துக்கு எதிராக போராடுவோம்! பாகம் - 2.