மோடி - யோகி குறித்து கருத்து தெரிவித்தவர்கள் மீது இதுவரை 293 தேசத்துரோக வழக்குகள்.

கடந்த 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட மொத்த தேசத்துரோக வழக்குகளில் அரசியல்வாதிகள் மற்றும் அரசுக்கு எதிராக பேசியதற்காக 405 இந்தியர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டுள்ளன. இவற்றில் 96% வழக்குகள் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரே போடப்பட்டுள்ளன.

01.01 2010 முதல் 31.12.2020 வரை பதிவு செய்யப்பட்ட அனைத்து தேசத்துரோக வழக்குகளை கண்காணித்து இச்செய்தியை வெளியிட்டுள்ளது சட்ட செய்திகள் தொடர்பான ஒரு வலைத்தளம் (article14).

ஒருபுறம் உச்சநீதிமன்றம் விமர்சனங்களை தேசத்துரோகமாக கருத முடியாது என்று கூறுகிறது. மறுபுறம் தேசத்துரோக வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து உள்ளன. Article 14 என்ற வலைத்தளத்தில் சுவரொட்டிகளை வைத்திருத்தல், அல்லது ஒட்டுதல், முழக்கங்களை எழுப்புதல், சமூக ஊடகங்களில் பதிவுகள் எழுதுதல் மற்றும் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட உரையாடல்கள் கொண்டிருப்பது ஆகியவை "தேசத்துரோக" நடவடிக்கையாக கருதப்படலாம் என்று கூறுகிறது.

முந்தைய UPA ஆட்சியை விட, NDA ஆட்சியில் தேசத்துரோக வழக்குகள் 28% அதிகரித்துள்ளது. CAA - NRC போராட்டங்களின் போதும், ஹத்ராஸ் கற்பழிப்புக்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான வழக்குகள் இதற்கு காரணமாக கூறப்படுகின்றன.

மோடி அரசின் முதல் ஆறு ஆண்டுகளில் 519 தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், 2010 முதல் 2014 மே வரை UPA அரசின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் 279 மட்டுமே. இந்த 279-ல் 39 சதவீத வழக்குகள் அணுமின் நிலையத்திற்கு எதிராக தமிழகத்தில் கூடங்குளத்தில் நடந்த போராட்டங்களின் கணக்கிலும், இந்தியாவின் சில பிராந்தியங்களில் மாவோயிசத்தின் கணக்கிலும் வருகின்றன. போதுமான தகவல்கள் இல்லாததால், 18 வழக்குகளுக்கான பதிவு நேரம் தீர்மானிக்கப்படவில்லை.

விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்பாக இதுவரை ஆறு தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும், ஹத்ராஸ் கற்பழிப்புக்கு பின்னர் 22 வழக்குகளும், CAA-NRC போராட்டங்களின்போது 25 வழக்குகளும் (பாஜக ஆட்சி செய்த மாநிலங்களின் வழக்குகள்) பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் தரவுகள் தெரிவிக்கின்றன. இவை மட்டுமல்லாமல் புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் 27 வழக்குகளும் உள்ளன. (பாஜக ஆட்சியின் போது 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன)

கடந்த 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள தேசத்துரோக வழக்குகளில் 65% வழக்குகள் பீகார், கர்நாடகா, தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களைச் சார்ந்தவை. இவற்றில் பெரும்பாலானவை பாஜக ஆட்சியின் கீழ் போடப்பட்டவை.

கடந்த 10 ஆண்டுகளில் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்ட 10,938 பேரில் 65 சதவீதம் பேர் மீதான வழக்குகள் மோடி ஆட்சிக்கு வந்த பின்னரே பதிவு செய்யப்பட்டுள்ளன என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த வழக்குகளில் 30 சதவீதம் சட்ட விரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் பொது சொத்துக்களுக்கு சேதம் (தடுப்பு) சட்டம் மற்றும் தேசிய கௌரவத்துக்கு சேதம் ஏற்படுவதை தடுப்பது போன்ற செயல்களும் தேசத்துரோக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. எதிர்ப்பை கையாள்வதற்கு அரசுக்கு பிடித்த கருவியாக தேசத்துரோக சட்டம் உள்ளது. NDA மற்றும் UPA ஆகிய இரண்டுமே வெளிப்படையானதாக இல்லை.

UPA அரசாங்கத்தால் தேசத்துரோக முத்திரை குத்தப்பட்டதற்கு எடுத்துக்காட்டுகள் - அசீம் திரிவேதி, அருந்ததிராய். இப்போது காங்கிரஸ் எம்பி சசிதரூர் இந்தியா டுடே இன் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் நேஷனல் ஹெரால்டின் மூத்த ஆலோசகர் ஆசிரியர் மிருனல் பாண்டே ஆகியோர் மீது குடியரசு தினத்தன்று நடந்த வன்முறைக்குப் பின்னர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

தவறான செய்திகளை வெளியிட்டதாகக் கூறி "நேஷனல் ஹெரால்டு ஆசிரியர் ஜாபர் ஆகா, தி கேரவனின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் பரேஷ் நாத் மற்றும் ஆனந்த் நாத், மற்றும் நிர்வாக ஆசிரியர் வினோத் கே ஜோஸ் ஆகியோர் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன. 

மோடிக்கு எதிராக ' பொருத்தமற்ற ' அல்லது ' அவமதிக்க ' தக்க வார்த்தைகளை கூறியதற்காக 149 பேர் மீது தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டுள்ளன
இதே போன்று யோகி ஆதித்யனாத்க்கு எதிராக பேசியதற்காக 144 பேர் மீது தேசத்துரோக வழக்குகள் போப்பட்டுள்ளன. 
- நதியா

மூலம்:gaurilankeshnews

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.