இயற்றும்.., ஈட்டும்.., ஆனால் காக்காத அரசு!


100 நாள் வேலை திட்டமென்பது ஒரு ஆண்டில் ஒரு குடும்பத்திற்கு (தனி நபருக்கு அல்ல) 100 நாட்களுக்கு வேலை வழங்குவது. இது அவர்களது வாங்கும் சக்தி விழாமல் காக்க கொண்டு வரபட்டத் திட்டமாகும்.

கடந்த சில ஆண்டுகளாகவே கிராம புறங்களில் வேலையின்மையும் வறுமையும் அதிகமாகிவருகிறது, அதற்கேற்ப 100 நாள் வேலையை நாடி வரும் மக்களது எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

முக்கியமாக கொரோனா ஊரடங்கு, தொடர்ந்து தொழில் முடக்கம் காரணமாக புலம் பெயர் தொழிலாளர்கள் மாநிலங்களை கடந்து தங்கள் கிராமங்களுக்கு நடந்தே சென்றனர். இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாக 100 நாள் வேலையை நாடும் குடும்பங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்தது.

உச்ச பட்சமாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், இராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில். இந்த நிதியாண்டில் மட்டும் 7.17 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தை நாடியுள்ளன. 40 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தங்களுக்கான 100 நாட்கள் முடிந்துவிட்டது. 2006 ஆம் ஆண்டு இத்திட்டம் அறிமுகபடுத்தபட்டதிலிருந்து வரலாறு காணாத அளவிற்கு அதிகம்.

100 நாள் வேலைத் திட்டத்தை _நாடிய_குடும்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


2019-20

2020-21
உயர்ந்த அளவு


ஆகஸ்ட்
1,23,50,429
2,00,81,012
62.59%

அக்டோபர்
1,09,10,439
1,99,04,005
82.43%

டிசம்பர்
1,41,84,243
2,08,22,500
46.80%

ஆக, 2 கோடி குடும்பங்களுக்கு இந்த திட்டம் தான் சோறு போடுகிறது. ஆனால் இதற்கான நிதியை அரசு அதிகரிக்கவில்லை.

பேரிடர் காலங்களில் 100 நாள் என்பதை 150 நாளாக அரசு உயர்த்த முடியும் என்பது இந்த திட்டத்தின் ஒரு அம்சம். ஆனால் அரசு வேலை நாட்களை அதிகரிக்கவில்லை. 

அது மட்டுமல்ல. சென்ற ஆண்டு இத்திட்டத்திற்காக் செலவு செய்ததைக்காட்டிலும் (1,11,500 கோடி) இவ்வாண்டு நிதி குறைவாகவே ஒதுக்கியுள்ளது (73,000 கோடி). 

அரசு, ஜிஎஸ்டி(5.15 லட்சம் கோடி), கலால் வரி(3.61 லட்சம் கோடி) என மக்களிடம் மறைமுக வரிகளைப் போட்டு உறிஞ்சுகிறது. மக்களின் பசியைத் தீர்க்கும் கடமையை புறக்கணிக்கிறது. மக்களைச் சாக சொல்கிறது.
-இளையராஜா

Comments

Popular posts from this blog

எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்_11.

அதிகாரத்துவத்துக்கு எதிராக போராடுவோம்! பாகம் - 2.