நெருப்பை வணங்குபவர்கள்


கோபம் வேண்டாம், பதட்டம் வேண்டாம்

தயாராகுங்கள், அது போதும்
இதுவே தருணம் –
கண் காதுகளைத் திறந்து வைக்க,
ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்க.
இம்மாதிரி நேரத்தில் பரவசமடைவது
நெருப்பில் குதிப்பதற்குச் சமம்
உங்கள் கடமை
வெறியுடன் நெருப்பைக் காதலிப்பதல்ல
நெருப்பைப் பொறுப்போடு
பயன்படுத்தக் கற்பது.
கோபம் வேண்டாம், பதற்றம் வேண்டாம்
இது தருணம், தயாராகுங்கள்,
அது போதும்.
- வீரேந்திர சட்டோபாத்தியாயா, வங்காளம்
(தோழர் சுமந்தாவின் ‘நக்சல்பாரி கவிதைகள்’ என ஆங்கிலத்தில் 1987ல் தொகுத்தார். அதிலிருந்து 52 கவிதைகளை தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் “வசந்தத்தின் இடிமுழக்கம்”. அந்த தொகுப்பிலிருந்து ஒரு கவிதை)
விலை ரூ. 100
பக்கங்கள் : 120
#நூல் _கிடைக்குமிடம் :
கீழைக்காற்று வெளியீட்டகம்,
16, அருமலைச் சாவடி,
கண்டோண்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043
தொலைபேசி : 9444881066
சென்னையில் நடைபெற இருக்கிற புத்தக கண்காட்சியில் கீழைக்காற்று கடையில் புத்தகம் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.