75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி தாக்கல் செய்ய தேவையில்லையா?!


பட்ஜெட்டில் இப்படி ஒரு அறிவிப்பை நிதி அமைச்சர் அறிவித்ததாக ஊடகங்கள் அறிவித்தன. பா.ஜ. தலைவர்கள் இந்த அறிவிப்பை ஒரு சாதனை போல பத்திரிக்கைகளில் சொல்லியிருந்தார்கள்.

உண்மை என்னவென்றால் ...

நம் நாட்டில் பெரும்பாலும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் பிள்ளைகளை சார்ந்து தான் வாழ்ந்து வருகிறார்கள். அரசு வேலை பார்த்தவர்கள், தனியாரில் உயர்பதவிகளில் இருந்தவர்கள் என 75 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலும் வங்கிகளில் சேமிப்பாக வைத்திருந்து வட்டி வாங்கி வாழ்ந்து வருவார்கள். அந்த வட்டிக்கு வங்கி எப்போதும் போல வரி (TDS) பிடித்தம் செய்து அரசுக்கு செலுத்திவிட வேண்டுமாம். ஆக, வரி தாக்கல் செய்வதில் (Income Tax Return) இருந்து மட்டும் தான் விலக்கு என தெளிவாக சொல்லிவிட்டார்கள்.

வேறு வகைகளில் வருமானம் ஏதும் இருந்தால், கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்யவேண்டும் எனவும் கறாராக சொல்லிவிட்டார்கள்.இதைத் தான் சாதனை அறிவிப்பு என அலட்டிக்கொள்கிறார்கள்.

-சாக்ரடீஸ்

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.