பெரியார் மண்ணா? பார்ப்பன பாசிசமா? கொதிக்கும் தேர்தல் களம்!


தேர்தல் சூறாவளியால் பரபரப்பாக இருக்கிறது தமிழ்நாடு. நாளொரு காமெடியும் பொழுதொரு போர்க்களமுமாக அல்லோலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் வேட்பாளர்கள். 

5 முனை போட்டி. இலை ஜெயிக்குமா? விடியல் வருமா? என டி.ஆர்.பிக்காக மல்லுக் கட்டுகின்றன ஊடகங்கள். ஒவ்வொரு கட்சிக்கும் இத்தேர்தல் மிக முக்கியமானதாக இருக்கிறது.

அதிமுக விற்கு தனது கொள்ளையைத் தொடரவும், கட்சியைத் தக்க வைக்கவும் இத்தேர்தல் வெற்றி அவசியம். பாஜக விற்கு பெரியாரின் கோட்டையைக் கைப்பற்ற ஒரு சீட்டாவது ஜெயிக்க வேண்டுமென்ற கட்டாயம். திமுகவிற்கு கட்சியைக் காப்பற்றிக் கொள்வதற்கே வெற்றிபெற வேண்டும். விசிக. மற்றும்  இடதுசாரிக் கட்சிகளுக்கு பார்ப்பனியத்தை விரட்டியடிக்க வெற்றிபெற்றே தீரவேண்டும். பிஜேபியின் திட்டத்திற்காக  கழகங்களின் ஓட்டைப்பிரிக்க வேண்டிய கட்டாயம் சீமானுக்கும், கமலுக்கும்.

கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் மிக முக்கியமான தேர்தல் இது. தமிழக மக்களின் தன்மானத்தை, சுயமரியாதையை சோதிக்கின்ற தேர்தல். யார் வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாதென்பது முக்கியமாகப் பார்க்கும் தேர்தல்.

இத்தேர்தலின் சாரமே, திராவிட மரபை, பாரம்பரியத்தை தக்க வைக்கப் போகிறோமா? அல்லது ஆரியத்தை அனுமதிக்கப்போகிறோமா? தமிழகத்தின் சமூக நீதியா? அல்லது ஆர்.எஸ்.எஸ் சின் பார்ப்பன பாசிசமா? என்பதுதான்.

எனவே,  பாசிச பாஜகவையும்-அடிமை அதிமுகவையும் புறக்கணிக்க வேண்டும். பாஜக- வின் பி டீமான கம்லையும், சீமானையும் நிராகரிக்க வேண்டும். 

அடுத்தடுத்த தொடர்களில் இந்தக் கட்சிகளை தோலுரித்து தொங்கவிடுவோம். 


-ஆதிரா.



Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.