The Pursuit of Happyness (2006)


கதை. 1981ல் நிகழ்கிறது. நாயகன் மருத்துவமனைகளில் அலைந்து திரிந்து ஸ்கேனர் விற்று பிழைக்கிறான். மனைவியும் வேலைக்கு செல்கிறார். ஐந்து வயது பையனுடன், வீட்டு வாடகை கூட கொடுக்கமுடியாமல் தடுமாறுகிறார்கள். நன்றாக வாழ்வோம் என்ற நம்பிக்கை இல்லாமல் போக மனைவி பிரிகிறார்.


தொழிலை மாற்றலாம் என்றால்.. ஆறு மாதம் பயிற்சி. சம்பளம் இல்லை. 20 பேர் கொண்ட குழுவில், முதலிடத்தில் வந்தால்... நிரந்தர வேலை என்கிறார்கள். வீடு இல்லை. வருமானம் இல்லை. ஐந்து வயது மகனுடன் பல்வேறு சோதனைகளை எதிர்கொள்கிறான். எல்லாவற்றையும் மீறி ஜெயித்தானா என்பது முழு நீளக்கதை!

****

“அமெரிக்கன் பியூட்டி” என படம். அமெரிக்க குடும்பங்களின் அகம் எப்படி சிக்கலாக இருக்கிறது என அருமையாக பேசிய படம். உண்மை சம்பவங்களின் அடிப்படையான இந்த படமும் முக்கியமான படம் தான். உலக நாடுகள் முழுக்க தலையிட்டு ரவுடித்தனம் செய்து கொண்டிருக்கும் அமெரிக்கா, அங்கு ஒரு சராசரி மனிதனின் வாழ்வு எத்தகைய அழுத்தங்களுடனும், பதட்டங்களுடனும் நகர்கிறது என சொல்கிறது படம்.

அடிதடி நாயகனான ஸ்மித்தும், அவருடைய பையனும் பாத்திரங்களில் அத்தனை இயல்பாக நம்மை கொள்ளை கொள்கிறார்கள். எத்தனை துயரம் வந்தாலும், அய்யோ என நாயகன் நம்பிக்கை இழக்கவில்லை.

1980 காலத்தை விட 2008ல் நிகழ்ந்த முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி பல மடங்கு ஆழமானது. உலக புகழ்பெற்ற அமெரிக்க வங்கிகள் திவாலாகின. தனியார் வங்கிகளை அமெரிக்க அரசு மக்கள் பணத்தை வாரிக்கொடுத்து காப்பாற்றினார்கள். மக்களை?

மக்கள் கோடிகளில் வேலை இழந்தார்கள். வீடிழந்தார்கள். தெருவில் கூடாரம் அமைத்து வாழ்ந்தார்கள். தங்களது செல்ல பிராணிகளை வளர்க்க வழியில்லாமல் தூரமாய் விட்டுவந்தார்கள். ரத்தம் விற்றார்கள். விந்தணுவை கூட விற்றார்கள். வேறு நாடுகளில் சொந்தங்கள் இருந்தால், ஒன்வே டிக்கெட் தருகிறோம். கிளம்புங்கள் என்றது அரசு. ”நாங்கள் 99%” என மக்கள் தொடர்ந்து போராடினார்கள்.

அந்த சமயத்தில் நிகழ்ந்த கதைகள் ஆயிரமுண்டு. அதையெல்லாம் எடுக்கலாம்.
ஹாலிவுட் திரையுலகம் உலக பிரச்சனைகளை எல்லாம் ஏற்கனவே ”தீர்த்துவிட்டதால்”, இப்பொழுது வேற்று கிரகவாசிகளின் பிரச்சனைகளை தீர்க்க கிளம்பிவிட்டார்கள். உள்ளூர் பிரச்சனைகளை அமெரிக்க மக்கள் தான் போராடி தீர்க்கமுடியும்.

இந்த படம் தமிழிலும் கிடைக்கிறது. குடும்பத்தோடு பார்க்கலாம். பாருங்கள்

Comments

Popular posts from this blog

எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்_11.

அதிகாரத்துவத்துக்கு எதிராக போராடுவோம்! பாகம் - 2.