பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றும் சங்கிகள்!


பத்ம சேஷாத்ரி பால பவன் (PSBB). சென்னையில் உள்ள பிரபல பள்ளி. நடுத்தர, உயர் நடுத்தர மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளி. மக்களை பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வாகப் பார்க்கும் பார்ப்பனிய நஞ்சை விதைக்கும் பள்ளி. இப்போது மக்களின் கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கிறது.


காரணம், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததற்காக அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.


ஆன்லைன் வகுப்பில் அரைகுறை ஆடையுடன் இருப்பது. மாணவிகளின் புகைப்படங்களை அனுப்பச் சொல்வது. ஆபாச தளங்களின் லிங்க்குகளை அனுப்புவது. சினிமாவுக்கு போகலாமா என கூப்பிடுவது. மாணவிகளின் உடலமைப்பை கிண்டல் செய்வது. மாணவிகளுக்கு உடலளவிலும், மனதளவிலும் தொல்லை தருவது என இவர் மீதான புகார்கள் நீள்கின்றன.


முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்யப்படுள்ளான் இக்காமுகன். இதைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவிகள் புகார் அளித்திருந்தனர். இன்று முன்னாள் மாணவர்கள் 1000 பேர் சேர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலமாக புகார் அளித்திருக்கிறார்கள்.


கைது செய்யப்பட்ட நபர், 20 வருடங்களாக இப்பள்ளியில் பணிபுரிகிறானாம். தன்னைப்போல் இவ்வளவு வருடங்களில் எத்தனை பிள்ளைகளுக்கு தொல்லை கொடுத்திருப்பான் இந்த காமுகன்? இன்னும் சில ஆசிரியர்கள் தன்னைப்போல் இருப்பதாக வாக்குமூலம் கொடுத்துள்ளான்.


எவ்வளவு மாணவிகள் இவர்களால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எவ்வளவு மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பார்கள்? எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள். நினைக்கவே வேதனையாக இருக்கிறது.


ஆனால், இதுகுறித்து இப்பள்ளியின் முகமாக அறியப்படும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கோ அவரது மகள் மதுவந்திக்கோ அவர்களின் குடும்பத்துக்கோ  துளியும் வருத்தம் இல்லை. பதற்றம் இல்லை. தனது தாய், பாட்டி உருவாக்கிய பள்ளியின் பெயர் கெடக்கூடாது என்பதுதான் இவர்களின் நோக்கமாக இருக்கிறது.


பாதிக்கப்பட்ட மாணவிகள் ஏற்கனவே பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தபோதும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆயிரக்கணக்கான மாணவிகள் பாதிக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறார்கள். இதெல்லாம் மதுவந்தியின் காதிலும், அவரது அப்பாவின் காதிலும் விழவில்லையா.


பல்வேறு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் உரை நிகழ்த்துபவர் ஒய்.ஜி.மகேந்திரன். உலகத்திலுள்ள நல்லதெல்லாம் எங்களால்தான் என சாதிப் பெருமைப் பேசுபவர் மதுவந்தி. ஆனால், இருவரும் இக்குற்றத்தைப் பற்றி கொஞ்சமும் வருத்தமோ, பொறுப்புணர்வோ இல்லாமல் பேசுகின்றனர். பாலியல் குற்றத்தை கண்டிக்கவோ, பொறுப்பேற்கவோ இல்லை.


ஆனால், இதை அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதைப்போல் மாற்ற முயற்சிக்கின்றனர். ”தேர்தல் முடிவு வந்தபோதே இதுபோல நடக்குமென தெரியும். பிராமணர்கள் மீதுள்ள வெறுப்பினால்தான் இப்படி செய்கிறார்கள்என சாமியாடுகிறார்.


அப்படியானால் பாதிக்கப்பட்டதாக புகார் அளித்துள்ள மாணவிகள் பொய் சொல்கிறார்கள் என்கிறாரா? அது எவ்வளவு அருவருப்பானது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை. கைது செய்யப்பட்டு, குற்றத்தை ஒப்புக்கொண்ட பாலியல் குற்றவாளிமீது கோபமில்லை.


இந்த விவகாரத்தில் குற்றவாளிக்கு எதிராக முதலில் வினையாற்றிருக்க வேண்டும். ஆனால், அதைவிடுத்து, கூச்சநாச்சம் இல்லாமல் அரசியல் பிரச்சினையாக மடைமாற்ற முயற்சிக்கிறார். பாதிக்கப்பட்ட மாணவிகளை கொச்சைப்படுத்துகிறார்.


பொதுவாகவே, பாலியல் குற்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை அசிங்கப்படுத்துவதுதான் ஆர்.எஸ்.எஸ்பிஜேபி கும்பலின் வழக்கம். அதைத்தான் மதுவந்தியும், ஒய்.ஜி.மகேந்திரனும் செய்கிறார்கள்.


பாஜக-வின் நாராயணன் சுந்தரம் இதையே பகிரங்கமாக, கூறியுள்ளார். “தயவுசெய்து ராஜகோபாலன் மீதான நடவடிக்கையை நிறுத்துங்கள். தற்போதைய பதின்ம வயது மாணவிகள் குழந்தைகள் இல்லை, அவர்கள் Netflix-இல் ஆபாச படம் பார்ப்பவர்கள். எனவே உண்மையை கண்டறியுங்கள். போதிய ஆதாரமில்லாமல் ஐயா ராஜாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதீர்கள்என அசிங்கமாக ட்வீட் செய்துள்ளார்.


ஆனால், இந்துப் பெண்களின் கற்புக்கு காப்புரிமை வாங்கி வைத்திருப்பதுபோல் பேசும் காயத்ரி ரகுராம் இதை கண்டிக்கவில்லை. விசிக தலைவர் திரு.தொல்.திருமாவளவன், மனுதர்மத்திலிருந்து மேற்கோள் காட்டிப் பேசியபோது,”திருமா இந்துப் பெண்களை கேவலப்படுத்திவிட்டார். இந்துக்களே ஒன்று சேருங்கள்என்று பாமகவின் இராமதாஸை டேக் செய்து வன்மத்தோடு ட்வீட் போட்டார்.


ஆனால், இன்று (அவர் ஏற்றுக்கொண்ட மத அடிப்படையில்) இந்துப் பெண்கள் பாதிக்கப்படும்போது மதுவந்திக்காக வாயை வாடகைக்கு விடுகிறார். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாதாடவில்லை, மாறாக ஏன் சாதி ரீதியாக குற்றஞ்சாட்டுகிறீர்கள் என மதுவந்திக்காக பொங்குகிறார். சாதிப்பாசம்.


தனக்கு ஆதாயம் என்றால் யாரை வேண்டுமானலும் உயர்த்திப் பிடிப்பதும், எதிரி என்றால் கூட இருப்பவர்களின் கழுத்தறுப்பதும் சங்கிகளின்ஆர்.எஸ்.எஸ்- பாஜக கும்பலின் அடிப்படைக்குணம்.


அதைத்தான் மதுவந்தியும், ஒய்.ஜி.மகேந்திரனும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் நிர்வாகம் செய்யவில்லை. வெறும் ட்ரஸ்டிகள் தான். பள்ளியை நிர்வாகம் செய்வது தனது தம்பியும், தம்பி மனைவியும்தான் என அவர்களை நோக்கி கைநீட்டுகிறார்கள்.


ஆனால், இதற்கு முன்னர் ஒரு பேட்டியில், இசைப்புயல் .ஆர்.ரஹ்மான் எங்களது பத்ம சேஷாத்ரி பள்ளியில் படித்து பாதியில் நின்றுவிட்ட மாணவர் என பெருமை பீற்றிக்கொண்டவர் மதுவந்தி. ஆனால், இப்போது பள்ளி நிர்வாகத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்கிறார். பள்ளியின் மூலம் புகழ், ஆதாயம் தேடிக்கொள்ளும்போது, குற்றத்திற்கும் தார்மீக ரீதியாக பொறுப்பேற்க வேண்டும்தானே.


மேலும், இசைப்புயல் அவர்கள் அப்பள்ளியிலிருந்து நிற்பதற்குக் காரணமே அப்பள்ளி நிர்வாகம்தான். பள்ளிக் கட்டணம் கட்டமுடியவில்லையென அவரது அம்மா அவகாசம் கேட்டபோது, “கோடம்பாக்கம் பிளாட்ஃபார்ம்க்கு (தெருக்களுக்கு) கூட்டிட்டு போங்க, பணம் கிடைக்கும்என பிச்சையெடுக்க சொல்லியிருக்கிறது பள்ளி நிர்வாகம்.


ஒரு மாணவனின் கல்வி தடைபட்டது பற்றி எவ்வித வருத்தமும் இல்லை. மனிதத்தன்மை இல்லை. இவர்கள்தான் மேன்மையானவர்களாம். ச்சை..


தோண்டத் தோண்ட பூதம் கிளம்புவதுபோல், அடுக்கடுக்காக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. 2012 ஆம் ஆண்டில் இந்தப்பள்ளியின் நீச்சல் குளத்தில் விழுந்து இறந்து போயிருக்கிறார் நடிகர் ஆர்.மனோகரனின் மகன். ஆனால், அப்போதைய முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா-வின் தயவால் இது பெரிதாக்கப்படாமல் அமுக்கப்பட்டது. கண்துடைப்புக்காக ஒய்.ஜி.மகேந்திரனின் தம்பி மனைவி ஷீலா ராஜேந்திரன் கைது செய்யப்பட்டு உடனே ஜாமீனில் வெளியே வந்தார்.


இப்படி பல குற்றங்கள். இவற்றோடு மற்றொரு முக்கிய குற்றச்சாட்டும் இருக்கிறது. இப்பள்ளி, ஆரம்பம் முதலே இந்து மதத்தை- சாதியத்தை உயர்த்திப் பிடிப்பதிருக்கிறது. மாணவர்களை சாதி ரீதியாக நடத்தியிருக்கிறது. மற்ற மத மாணவர்களையும் இந்து மத விழாக்களில், சடங்குகளில் பின்பற்ற வைத்திருக்கிறது.


இளம் பிஞ்சுகளின் மனதில் சாதிய விஷத்தை விதைத்திருக்கிறது. ”நான் பிராமணன் இல்லை என்பதாலும், நிறம் காரணமாகவும் ஒடுக்கப்பட்டேன்என அப்பள்ளியின் முன்னாள் மாணவர் வம்சி சந்திரன் ட்வீட் இதற்கு ஆதாரம்.


எனவே, பாலியல் குற்றம் செய்தவர்கள் அனைவரும், அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகமும் தண்டிக்கப்பட வேண்டும். வழக்கின் சாரத்தையே பிராமண வெறுப்பினால் தொடரப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையென திசைதிருப்ப பார்க்கும் மதுவந்தி, காயத்ரி ரகுராம், அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


பாதிக்கப்பட்ட மாணவிகளை கொச்சைப்படுத்தி ட்வீட் செய்த பாஜகவின் நாராயணன் சுந்தரம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இப்பள்ளியின்மீது சுமத்தப்பட்டிருக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் தீர விசாரிக்கப்பட்டு, அதன்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சூட்டோடு சூடாக இவ்வழக்கு விசாரணையை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்.


-ஆதிரா.

 

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.