பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதிபடுத்த, ஆசிரியர்களின் நடத்தைகள் சோதிக்கப்பட வேண்டும்.


ஆன்லைன் கல்வியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாட்ஸப் மூலம் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் அனுப்புவது, பொருத்தமற்ற முறையில் ஆடைகள் அணிந்து வகுப்பில் கலந்து கொள்வது, மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு தனிப்பட்ட முறையில் சாட்டிங் செய்வது (அரட்டை அடிப்பது), அதில் மோசமான நகைச்சுவைகளை அனுப்புவது போன்ற ஆன்லைன் குற்றங்கள் பெருகி வருகின்றன.


கே.கே.நகர் பி.எஸ்.பி.பி பள்ளி முன்னாள் மாணவர்களும், இந்நாள் மாணவர்களும் ராஜகோபாலன் என்ற ஆசிரியரால் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக புகாரளித்து இவ்விசயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். இது போல், பல மாணவர்கள் புதிய புகார்களை வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளனர். ராஜகோபாலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஒரு பக்கம், தமிழக அரசு, கமிட்டி அமைத்து இது போன்ற பாலியல்ரீதியான வன்முறைகள் குறித்த புகார்களை விசாரித்தாலும், மறுபக்கம் பள்ளிகள் ஆன்லைன் கல்வி மூலம் எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ரக்‌ஷித் தாண்டன் என்ற இணைய பாதுகாப்பு நிபுணர் கூறுகையில், 


“கடந்த ஆண்டு கோரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில், பல மாணவர்கள் பல மணிநேரம் ஆன்லைனில் இருப்பதும், அவை கவனிக்கப்படாமலும் இருந்தது. இது பாலியல் வக்கிரப்புத்தி கொண்டவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாதுகாப்பான ஆன்லைன் செயல்பாடுகள் குறித்துக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஆபத்து நிறைந்த விசயங்களைத் தவிர்க்க அவர்கள் கற்றுக் கொள்ள முடியும். மேலும் சைபர் குற்றங்கள் மற்றும் தண்டனைகள் குறித்து ஆசிரியர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ஒருவரது சம்மதம் இல்லாமல் அந்தரங்க உறுப்புகளைப் படம் பிடிப்பதும், அதைப் பகிர்வதும் சட்டத்திற்கு எதிரானது.”


சென்னையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் இண்டர்நேசனல் பள்ளியில் இது குறித்து விழிப்புணர்வு கொடுக்கப்படுகிறது. அப்பள்ளியின் பிரின்சிபல் பாரதி லட்சுமி கூறுகையில், “ஆன்லைன் கல்வி மூலம் ஆசிரியர்கள் மாணவர்களின் வீட்டிற்குள் நுழைகின்றனர். எனவே பள்ளிகள் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்ய வேண்டும்”.


சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் அமைப்பை நடத்தும் வழக்கறிஞர் டெபாரதி ஹால்டர் கூறும் போது, “நம்பிக்கையான பதவியில் வகிக்கும் ஒருவர் இத்தகைய பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் போது அதன் தீவிரம் மோசமடைகிறது.


ஒரு குழந்தையிடம் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக தனியாக வீடியோ கால் செய்வது, சாட்டிங் செய்வது ஆகியவை தவறானவை” என்கிறார்.


ஒருவேளை ஒரு குழந்தை தனது சொந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவி கேட்டு வந்தாலும், அந்த ஆசிரியர் முதலில் பிரின்சிபலிடம் தெரிவிக்க வேண்டும். ஆசிரியர் மட்டுமே தனிப்பட்ட முறையில் அவ்விவகாரத்தைக் கையாளக் கூடாது. ஆன்லைன் செயலிகளால் பல பாதிப்புகள் இருந்தாலும், தவறுகள் நடக்கும் போது ஆதாரங்களையும் எளிதாக எடுக்க முடியும்”


குழந்தைகள் நல மருத்துவரான கண்ணன் கிரீஷ் கூறும் போது, ”குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை பெற்றோர் அறிந்து கொள்வதற்கு பல அறிகுறிகள் உள்ளன. உறக்கமின்மை, சோர்வு, தனிமை, தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது, வகுப்பில் கலந்து கொள்ள மறுப்பது போன்ற அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


பாலியல் குற்றவாளிகள் குற்றமிழைத்த உடனேயே பிடிபடுவதில்லை. எனவே குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விதிமுறைகள் பள்ளிகளில் இருக்க வேண்டும். மாணவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குற்றம் நடந்தால், புகார் அளிப்பது எப்படி என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். தான் சொல்வதை மற்றவர்கள் கேட்பார்கள், நம்புவார்கள் என ஒரு குழந்தை நம்பாதவரை, பெற்றோரிடமோ, பள்ளி நிர்வாகிகளிடமோ வெளிப்படையாக பேச துணிய மாட்டார்கள்“ என்றார்.


சென்னையை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான துளிர் என்ற அமைப்பை நடத்தும் வித்யா ரெட்டி கூறுகையில், “கடந்த ஆண்டு ஆன்லைன் கல்வியில் எப்படி வகுப்பு எடுக்க வேண்டும் என பள்ளிகள் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்ததேயொழிய வகுப்புகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கற்றுக் கொடுக்கவில்லை.


மொழிபெயர்ப்பு :  முகில்

ஆங்கிலத்தில் படிக்க...

https://timesofindia.indiatimes.com/city/chennai/time-to-school-teachers-on-online-code-of-conduct/articleshow/82992432.cms

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.