பெட்ரோல், டீசல் விலை விலை உயர்வு ஏன்?


பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்திக்கொண்டே செல்கிறது. சென்னையில் இன்றைய விலை ஒரு லிட்டர் ரூ. 96.23. ஆந்திராவில் 87.24. போபாலில் 102.89 என மாநிலங்களுக்கு ஒரு விலை விற்கப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா பேரல் விலை என்ன? அதில் மத்திய மாநில அரசுகளின் வரி எவ்வளவு?
நேரடி வரி, மறைமுக வரியின் தாக்கம் என்ன?
தேசம் முழுவதும் ஒரே வரி ஜிஎஸ்டி என்றவர்கள்,
பெட்ரோல், டீசலை ஏன் அதிலிருந்து கழட்டிவிட்டார்கள்?
நம் நாட்டில் தனிநபருக்கு வரி எவ்வளவு? கார்ப்பரேட்டுகளுக்கு வரி எவ்வளவு?
சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை ஏற்ற சொல்வதற்கு காரணம் என்ன?
என பல அம்சங்களையும் மொத்தமாக பார்த்தால், கட்டுரை நீண்டு விடும். ஆகையால், ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
****
கடந்த ஜூன் 1 ந்தேதி தில்லியில் பெட்ரொல் விலை ரூ. 94.49. இந்த விலை எப்படி விதிக்கப்படுகிறது என்றால்….
கச்சா பேரல் விலை – 5151.00
ஒரு கச்சா பேரல் என்பது 159 லிட்டர்.
ஆக 1 லிட்டர் ரூ. - 32.39
சுத்தப்படுத்த ரூ.- 3.60
மத்திய அரசு வரி ரூ. 32.90
(சுங்கம் + சாலைவரி)
பெட்ரோல் பம்பு ரூ. 3.79
மாநில வாட் வரி ரூ. 21.81
ஒரு லிட்டர் ரூ. 94.49

ஆக ஒரு லிட்டர் பெட்ரோலில் மத்திய அரசு 32.90யும், மாநில அரசு 21.81 யும் வரியாக விதிக்கின்றன.
இன்னும் பேசுவோம்….

- சாக்ரடீஸ்

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.