பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச விலை உயர்வு தான் காரணமா?





பெட்ரொல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் சமீபத்திய சர்வதேச அளவில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு தான் என மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு மந்திரி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். தினத்தந்தியில் இன்று (08/06/2021) செய்தி வந்துள்ளது.


வழக்கமாக பிஜேபி மந்திரிகள் நிலைமையை சமாளிக்க வாயில் வந்ததை அடித்துவிடும் பொய்களில் ஒன்றாகத்தான் இருக்கிறது.

கச்சா பேரல் விலையும்/ தில்லி விலையில் ஒரு லிட்டர் விலை
2012 ல் $94.05 65.60
2014 ல் $93.17 72.24
2016 ல் $43.29 59.68
2018 ல் $65.23 75.55
2020 ல் $39.68 79.76
2021 ல் $60.68 94.69

2012ல் ஒரு பேரல் விலை $94 டாலர் விற்ற பொழுது, தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 65 சொச்சம் தான்.

ஆனால், இப்பொழுது கச்சா பேரல் விலை 60 டாலர் தான். ஆனால் விலையோ ரூ. 95ஐ தாண்டிவிட்டது! பிஜேபி ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல், இயற்கை வாயுவில் அடிக்கும் கொள்ளை இருக்கிறதே, மிகப்பெரியது!

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டியில் சேர்க்க நாங்கள் தயார். ஜி.எஸ்.டி கவுன்சில் தான் தயாரில்லை எனவும் மத்திய மந்திரி பேட்டிக்கொடுத்துள்ளார். இதில் உள்ள அரசியல் என்ன என்பதை அடுத்துப் பார்ப்போம்!

இன்னும் பேசுவோம்!

- சாக்ரடீஸ்

படங்கள் : 1. தினத்தந்தியில் வந்த மத்திய மந்திரி பேட்டி 2. கடந்த 10 ஆண்டுகளில் கச்சா பேரல் விலையின் வரைபடம்

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.