பாஸிஸ்ட் எதிர்ப்பு இயக்கத்தின் ஒவ்வொரு தனித்தனியான பிரிவிலும் கம்யூனிஸ்டுகளுடைய கடமைப்பாடுகள்


1. பாஸிஸத்தை எதிர்த்து ஒரு முறையான சித்தாந்தப் போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியத்தைப் பற்றி காங்கிரஸ் குறிப்பான கவனத்தைப் பாஸிஸ்டு சித்தாந்தத்தில் பிரதானமானது. மிகவும் ஆபத்து மிக்கது இனமொழி, தேசிய வெறியின் வடிவமாகும். மக்களுக்கு இதைத் தெளிவுபடுத்த வேண்டும். பாஸிஸ்டு பூர்ஷுவா வர்க்கம் தங்கள் நாட்டு மக்களை ஓடுக்கவும் கரண்டவும். இதர நாட்டு மக்களைக் கொள்ளையடிக்கவும் அடிமைப்படுத்தவுமான அதனுடைய கீழ்த்தரமான வர்க்கக் கொள்கையை நிறைவேற்றுவதற்காகத் தேசிய நலன்களைப் பாதுகாப்பதாகச் சொல்லி அந்தப் போர்வையைப் பயன்படுத்துகிறது. எல்லா வகையான அடிமைத்தனத்தையும், தேசிய ஒடுக்கு முறையையும் எதிர்த்துப் போராடும் தொழிலாளி வர்க்கம்தான் தேசிய விடுதலைக்கும் மக்களுடைய சுதந்திரத்திற்கும் உண்மையான கதாநாயகன் என்பது மக்களுக்கு எடுத்துக் காட்டப்பட வேண்டும். மக்களுடைய வரலாற்றைப் பாஸிஸ்டுகள் தவறாகத் திருத்திக் கூறுவதை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் எல்லா வழிகளிலும் நின்று போராட வேண்டும். சொந்த மக்கள் தங்களின் கடந்த காலத்தை வரலாற்றுப் பூர்வமாகச் சரியான வகையில் உழைக்கும் மக்களுக்குத் தெளிவு ஏற்பட அனைத்தும் செய்ய வேண்டும். லெனின், ஸ்டாலினின் உண்மையான உணர்வோடு நிகழ்காலப் போராட்டத்தைக் கடந்த காலத்திய புரட்சிகரமான பாரம்பரியத்துடன் இணைக்க வேண்டும். தேசிய சுதந்திரத்தின் பிரச்சினை பற்றியும் விரிவான மக்கள் பகுதியின் தேசிய உணர்வுகளைப் பற்றியும் எந்த வகையிலும் ஒரு மதிப்புக் குறைவான அணுகுமுறை கூடாது என்று இந்தக் காங்கிரஸ் எச்சரிக்கை செய்கிறது. இந்த அணுகும் முறை நம்மிடம் சரியானபடி இல்லாவிட்டால், பாஸிஸத்திற்கு தனது தேசிய வெறி பிரச்சாரத்தைஇயக்கப் பிரச்சாரத்தை வளர்ப்பதற்கு வசதியாகிவிடும். (சார் செக்கோஸ்லோவேகியாவிலுள்ள ஜெர்மன் பகுதிகள் முதலியன) இந்தப் பிரச்சினையில் லெனினிஸ்டு ஸ்டாலினிஸ்டு கொள்கையைச் சரியானபடியும் ஸ்தூலமாகவும் செயல்படுத்த வேண்டும்.
  எல்லா வகையான பூர்ஷுவா தேசியத்திற்கும் கோட்பாட்டில் கம்யூளிஸ்டுகள் விட்டுக் கொடுக்காத எதிரிகள். அதே சமயத்தில் நாம் தேசிய சூனியவாதத்தின் ஆதரவாளர்கள் அல்ல. அது தனது சொந்த மக்களின் தலை விதியைப் பற்றிய அக்கறையில்லாத போக்காகும்.

2. எல்லா பாஸிஸ்டு வெகுஜன ஸ்தாபனங்களிலும் கம்யூனிஸ்டுகள் நுழைய வேண்டும் குறிப்பிட்ட நாட்டில் பாஸிஸ்டுகளுக்கு ஏகபோகமாக சட்ட பூர்வமாக செயல்படுவதற்கு உரிமையுள்ள அந்த நாட்டில் அந்தப் பாஸிஸ்டு வெகுஜன ஸ்தாபனங்களில் கம்யூனிஸ்டுகள் நுழைய வேண்டும். அதிலுள்ள சட்டபூர்வமான, அரைகுறைச் சட்ட பூர்வமான நிலைகளையும் மிகச் சிறிய அளவில் இருந்தாலும்கூட அதையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அந்த ஸ்தாபளங்களுக்குள் வேவை செய்ய வேண்டும். அதிலிருந்து கொண்டே அதில் பாஸிஸ்டுகளின் கொள்கைகளுக்கு எதிரிடையாக மக்களுடைய நல்வுரிமைகளை முன்வைக்க வேண்டும். அதன்மூலம் பாஸிஸ்டுகளின் வெருஜன அடிப்படையைக் கீழறுக்க வேண்டும். உழைக்கும் மக்களுடைய மிக அவசரமான அன்றாடத் தேவைகளுக்காகச் சாதாரண ஆக ஆரம்ப நிலையிலான ஆட்சேபனை இயக்கங்களிலிருந்து தொடங்கி கம்யூனிஸ்டுகள் மேலும் மேலும் அதிகமான விரியான மக்கள் பகுதிகளை இயக்கத்திற்குக் கொண்டு வருவதற்கு நெளிவு கழிவான உபாயங்களைப் பயன்படுத்த வேண்டும் குறிட்டாக வாக்க உணர்வு போதுமான அளவு இல்லாமல் இன்னும் பாஸிஸ்டுகளின் தலைமையின் கீழ் உள்ள தொழிலாளிகள்பால் மிகவும் நெளிவு கழிவான உபாயங்களைக் கையாள வேண்டும். விரிவாகவும் தீவிரமாகவும் இயக்கம் வளரும்போது போராட்டத்திற்கான     கோஷங்களை மாற்ற வேண்டும் பாஸிஸ்டு ஸ்தாபளங்களில் உள்ள மக்களின் உதவியோடு பாஸிஸ்டு   பூர்ஷ்வா: சர்வாதிகாரத்தை தொறுக்குவதற்குத் தயாரிக்கும்போது படிப்படியாகக் கோஷங்களை மாற்றிப் போராட்டத்தை வளர்த்துக் கொண்டு செல்ல வேண்டும்.

3. வேலையின்றி வாடுவோரின் நலவுரிமைகளையும். கோரிக்கைகளையும் வேகமாகவும் உறுதியாகவும் பாதுகாத்துக் கொண்டும். வேலை கொடு என்னும் கோரிக்கையில் அவர்களுக்குப் போதுமான நிவாரணம் காப்பீடு முதலியவற்றிற்கான போராட்டத்தில் அவர்களை ஒன்று திரட்டிக் கொண்டு தலைமை தாங்கிக் கொண்டு செல்லும் அதே நேரத்தில் கம்யூனிஸ்டுகளை வேலையில்லாதோரை ஐக்கிய முன்னணி இயக்கத்திலும் கொண்டு வர வேண்டும் அவர்களுக்கிடையில் பாஸிஸ்டுகளுக்குள்ள செல்வாக்கை அறவே நீக்குவதற்குப் பாடுபட வேண்டும். அதே சமயத்தில் வேலையின்றி வாடுவோரில் பலவேறு பிரிவுகளுக்கும் (திறமை. திறமையற்ற தொழிலாளர்கள். ஸ்தாபன ரீதியில் உள்ளவர்கள், அல்லாதவர்கள், ஆண்கள் பெண்கள், இளைஞர்கள் முதலானோருக்கு) உள்ள குறிப்பிட்ட நலன்களைக் கணக்கில் எடுத்து அதற்குத் தக்க முறையில் அவர்களுடைய இயக்கத்தை நடத்த வேண்டியது அவசியமாகும்.

4. பாஸிஸத்திற்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்களின் தனிச் சிறப்புமிக்க பங்கைப்பற்றி முதலாளித்துவ நாடுகளிலுள்ள எல்லாக் கம்யூனிஸ்டுக் கட்சியின் கவனத்திற்கும் இந்தக் காங்கிர வலியுறுத்திக் கொண்டு வருகிறது. இளைஞர்களிடமிருந்துதான் பாஸிஸம் தனது அதிர்ச்சிப் படைகளைத் திரட்டுகிறது உழைக்கு இளைஞர்களுக்கிடையில் வெகுஜன வேலை செய்வது பற்றி முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதை எதிர்த்து போராடியாக வேண்டும். இளங்கம்யூனிஸ்டு லீக் ஸ்தாபனங்களின் ஒதுங்கி நிற்கும் போக்கைத் திருத்துவதற்குத் தீர்க்கமான நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அதற்காக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாப் பாசிஸ்ட்டு அல்லாத வெகுஜன இணைஞர் ஸ்தாபனங்களில் உள்ள சக்திகள் அனைத்தையும் தொழிற்சங்கங்களில் கூட்டுறவு சொஸைட்டி முதலியவற்றில் உள்ள இளைஞர் ஸ்தாபளங்கள் உள்பட அனைத்து சகதிகளையும் ஒன்றுபடுத்துவதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் உதவி செய்ய வேண்டும் மிகப் பரந்த ஐக்கிய முன்னணியின் அடிப்படையில் பாஸிஸத்திற்கெதிரான போராட்டத்தில் பலவேறு வகையான பொது ஸ்தாபளங்களை உருவாக்குவது உள்யிட்ட ஐக்கிய முன்னணியின் அடிப்படையில் இளைஞர்களுக்குள்ள எல்லா உரிமைகளையும் பறிப்பதை எதிர்த்தும். இளைஞர்களை ராணுவத்தில் இழுத்து பீரங்கித் தீனியாக்குவதை எதிர்த்தும் இளம் தலைமுறையினர் பொருளாதார, கலாச்சார நலவுரிமைகளுக்காகவும் அனைத்து இளம் சக்திகளையும் ஒன்று திரட்டுவதற்குக் கம்யூனிஸ்டுக் கட்சிகள் உதலி செய்ய வேண்டும் கம்யூனிஸ்டு மற்றும் சோஷலிஸ்டு இளைஞர் லீக்குகளைக் கொண்ட பாலிஸ்டு எதிர்ப்புக் கூட்டமைப்புகளை வர்க்கப் போராட்ட வேவைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கும் கடமைப்பாட்டை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும்.


இளம்கம்யூனிஸ்ட் லீக்கின் வளர்ச்சிக்கும் உறுதிப்பாட்டிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லா விதமான உதவிகளையும் செய்ய வேண்டும்.

5 கோடிக்கணக்கான உழைக்கும் மாதர்களை ஐக்கிய மக்கள் முன்னணியில் கொண்டுவர வேண்டியது மிகவும் முக்கியமான தேலையாகும். அதிலும் குறிப்பாகப் பிரதானமாக. பெண் தொழிலாளர்கள். உழைக்கும் விவசாயப் பெண்கள் அவர்கள் எந்த அரசியல் கருத்தோ மதக் கருத்தோ கொண்டிருந்தாலும் சரி. அவர்களை ஐக்கிய முன்னணியில் கொண்டு வர வேண்டியது அவசியம் எனவே கம்யூனிஸ்டுகள் மாதர்களின் வெருஜன இயக்கத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும் அவ்வேலையைத் தீவிரப்படுத்த வேண்டும். மாதர்களின் அவசர அவசியக் கோரிக்கைகளுக்காக நலவுரிமைகளுக்காக குறிப்பாக விலைவாசி உயர்ளை எதிரத்து பெண்களுக்குச் சம அந்தஸ்து இல்லாததை எதிர்த்து பாசிஸ்ட் அடிமைப்படுத்தலை எதிர்த்து, வேலையை விட்டு நீக்குதல்களை எதிர்த்து "சம வேலைக்கு சம ஊதியம்" என்னும் அடிப்படையில் சம்பள உயர்வு வேண்டும் என்று, யுத்த அபாயத்தை எதிரத்து வெகுஜன மாதர் இயக்கத்தை உருவாக்கும் வேலையைத் தீவிரப்படுத்த வேண்டும் ஒவ்வொரு நாட்டிலும் மற்றும் சர்வதேச அளவிலும், புரட்சிகரமான. மாதர் ஸ்தாபனங்கள், சமூக ஜனநாயக மாதர் ஸ்தாபனங்கள் மற்றும் முற்போக்கு மாதர் ஸ்தாபனங்கள். ஆகியவற்றுக்கிடையில் தொடர்புகளை ஸ்தாபித்து, கூட்டு நடவடிக்கைகளுக்குக் கொண்டு வருவதற்கு எல்லாவிதமான முயற்சியும் செய்ய வேண்டும் அதே சமயத்தில் பல வேறுபட்ட மாதர் ஸ்தாபனங்களுக்கிடையில் கருத்துச் சுதந்திரம், விமர்சனம் செய்யும் உரிமை தேவைப்பட்டால் சில தனியாக அவர்களுடைய தனியான மாதர் ஸ்தாபனங்களை வைத்துக் கொள்வதற்கான உரிமையும் உத்திரவாதப்படுத்த வேண்டும்.

6. பாட்டாளி வர்க்க ஐக்கிய முன்னணியின் அணிகளில் பாஸிஸ எதிர்ப்பு மக்கள் முன்னணியின் அணிகளில் கூட்டுறவு ஸ்தாபனங்களையும் கொண்டு வருவதற்கான போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து நடத்த வேண்டும்.

கூட்டுறவு சொஸைட்டிகள் தங்களுடைய உறுப்பினர்களின் அவசரஅவசிய நலன்களுக்காகக் குறிப்பாக விலைவாசி உயர்வை எதிர்த்து கொள்ளைக்கார வரிகளை எதிர்த்து கடன் வசதிகளுக்காக, மேலும் கூட்டுறவு சங்கங்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக் தடை விதிகளை எதிர்த்தும் அவற்றை அழிப்பதற்காகப் பாலிடுகள் எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்தும் நடத்தும் போராட்டத்திற்குக் கம்யூனிஸ்டுகள் மிகவும் ஊளக்கத்துடன் உதவி செய்ய வேண்டும்.  
    
 7. எதிர்ப்பு மக்கள் தொண்டர் படையை நிறுவுவதற்கு கம்யூனிஸ்டுகள் முன் கையெடுக்க வேண்டும். பாஸிஸ்டு கூட்டத்தின் தாக்குதல்களை எதிர்த்து முறியடிக்க இப்படை அவசியமாகிறது ஐக்கிய முன்னணிலிருந்து பல சோதனைகளிலும் வெற்றித் தேர்ந்தமணிகளை இந்தப் படைக்கு ஆள் சேர்க்க வேண்டும்.
 
கம்யூனிஸ்டுக் கட்சிகளைப் பலப்படுத்துவதும், தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் ஒற்றுமைக்கான போராட்டமும்.

காங்கிரசானது குறிப்பிடத்தக்க அழுத்தத்துடன் வலியுறுத்திக் கூறுவது என்னவென்றால் கம்யூனிஸ்டுக் கட்சிகளை மேலும் அதிகமாகச் சகல துறைகளிலும் உறுதிப்படுத்துவதன் மூலம்தான் முன்கையெடுத்து வேலை செய்யும் திறனை வளர்ப்பதன் மூலம் மார்கஸிஸ்டு-லெனினிஸ்டு கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு கொள்கையை வகுத்து நிறைவேற்றுவதன் மூலம் ஸ்தூலமான நிலைமைகளையும் வர்க்க  சக்திகளின் சேர்க்கையையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ள சரியான நெளிவு சுழிவான உபாயத்தைச் செயல்படுத்துவதன் மூலம்தான் பாஸிஸத்தை எதிர்த்தும் முதலாளித்துவத்தை எதிர்த்தும் ஒன்றுப்பட்ட போராட்டத்திற்கு உழைக்கும் மக்களின் விரிவான பகுதியை ஒன்று திரட்டுவதை உத்திரவாதப்படுத்த முடியும்.

ஐக்கிய முன்னணியை உண்மையிலேயே கொண்டு வருவதற்கு கம்யூனிஸ்டுகள் தங்கள் சொந்த அணியிலுள்ள சுயதிருப்தி கொண்ட தனித்த போக்கை (செக்டேரியனிஸம்) சமாளித்து வெற்றி கொள்ள வேண்டும் இந்தத் தனித்தப் போக்கு நம் அணிகளில் இன்றைய காலத்தின் பல இடங்களில் கம்யூனிஸ்டு இயக்கத்திலுள்ள வெறும் "சிறுபிள்ளைத் தனமாக மட்டுமில்லை. அது ஒரு வேரோடிப்போயுள்ள தீமையாக உள்ளது. மக்களுடைய புரட்சிகரப் பக்குவ நிலை பற்றி அதிகப்படியாக மதிப்பிடுவது. பாஸிஸ்டு இயக்கம் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் பாஸிஸம் ஏற்கெனவே தடுக்கப்பட்டு விட்டதாகப் பிரமைகளை உண்டாக்குவது, இதன்மூலம் செக்டேரியனிசம் உண்மையில் பாஸிஸத்தின்பால் செயலற்ற நிலைமையைத் தான் உண்டாக்கி விட்டது. நடைமுறையில் அது ஒரு குறுகிய கட்சிக் குழுவுக்குத் தலைமை தாங்கும் முறைகளை மக்களுக்குத் தலைமை தாங்குவதற்கான முறைகளாக செயல்படுத்தியது. வெகுஜனக் கொள்கைக்குப் பதிலாக வெறும் வரட்டுத்தனமான பிரச்சாரத்தையும் இடதுசாரி கோட்பாட்டு வாதத்தையும் முன்வைத்தது. சீர்திருத்த வாத தொழிற்சங்கங்களிலும், பாஸிஸ்டு வெகுஜன ஸ்தாபனங்களிலும் வேலை செய்ய மறுத்தது. ஒவ்வொரு குறிப்பிட்ட நாட்டிலும் அந்தந்த நாட்டிலுள்ள ஸ்தூலமான நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் எல்லா நாடுகளுக்கும் ஒரே மாதிரியான உபாயங்களையும் கோஷங்களையும் மேற்கொள்கிறது. செக்டேரியனிசம் கம்யூனிஸ்டுக் கட்சிகளின் வளர்ச்சியைப் பெரும் அளவில் பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. உண்மையான வெகுஜனக் கொள்கையை நிறைவேற்றுவதைக் கடினமாக்குகிறது. வர்க்க விரோதியின் கஷ்டங்களைப் பயன்படுத்தி புரட்சி இயக்கத்தைப் பலப்படுத்துவதற்கு இடையூறு விளைவிக்கிறது. கம்யூனிஸ்டுக் கட்சிகளின் பக்கம் பாட்டாளி மக்களின் விரிவான ஜனப்பகுதியைக் கொண்டு வருவதற்கு இடையூறு விளைவிக்கிறது.

செக்டேரியனிஸத்தின் அடையாளங்கள் அனைத்தையும் வேரோடு களைவதற்கு மிக சக்திமிக்கதொரு போராட்டத்தை நடத்த வேண்டும். செக்டேரியனிசம்தான் இப்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு உண்மையான வெகுஜன போல்ஷிவிக் கொள்கையைக் கடைப்பிடிப்பதற்கு மிகப் பெரிய இடையூறாக இருக்கிறது. எனவே அதை எதிர்த்து வலுவாகப் போராடியாக வேண்டும். ஆனால் அதே சமயத்தில் கம்யூனிஸ்டுகள் வலதுசாரி சந்தர்ப்பவாத அபாயத்திற்கு எதிராக மிக உஷாரான காவலை அதிகப்படுத்த வேண்டும். ஐக்கிய முன்னணி உபாயங்களை மிகப் பரவலாக பயன்படுத்தும்போது வலதுசாரி அபாயம் வளரும் என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஐக்கிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான போராட்டம், தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட நடவடிக்கை ஒரு அவசியத்தை உண்டாக்குகிறது. அதாவது கம்யூனிஸ்டுக் கொள்கையின் சரியான தன்மை, சீர்திருத்தவாதக் கொள்கையின் சரியில்லாத தன்மை ஆகியவற்றின் புறநிலையான படிப்பினைகளைச் சமூக-ஜனநாயகத் தொழிலாளர்கள் புரிந்து கொள்கிறார்கள். இதற்காக ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சியும் சீர்திருத்த வாதத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடையிலுள்ள கோட்பாடுகளிலுள்ள வேறுபாடுகளைப் பூசி மெழுகுவதற்குள்ள எந்த ஒரு போக்கையும் எதிர்த்து விட்டுக் கொடுக்காத போராட்டத்தை நடத்த வேண்டும். பூர்ஷுவா வர்க்கத்துடன் வர்க்க சமரஸம் செய்து கொள்ளும் தத்துவமும் நடைமுறையும் என்ற முறையில் சமூக-ஜனநாயகத் தத்துவத்தையும் நடைமுறையையும் விமர்ஸனம் செய்வது பலவீனமடைவதை எதிர்த்து விட்டுக் கொடுக்காத போராட்டத்தை நடத்த வேண்டும். சமாதானமான முறையில் சட்ட பூர்வமான வழிகளில் சோஷலி சத்தைக் கொண்டுவர முடியும் என்னும் பிரமைகளை எதிர்த்துப் போராட வேண்டும். எல்லாம் தன்னியக்கமாகவும் தன் விருப்பமாகவும் தானாகவே நடந்துவிடும் என்று நம்பியிருப்பது அது பாஸிஸத்தை ஒழிப்பது பற்றியோ அல்லது ஐக்கிய முன்னணியை அமைத்து விடுவது பற்றியோ அவ்வாறு நம்புவதை எதிர்த்து விட்டுக்கொடுக்காத போராட்டத்தை நடத்த வேண்டும். கட்சியின் பங்கைப் பற்றி குறைத்துப் பார்ப்பதை எதிர்த்தும் தீர்மானமான முடிவுகளை எடுக்கும்போது சின்னஞ்சிறு அளவிலான ஊசலாட்டம் ஏற்படுவதை எதிர்த்தும் விட்டுக் கொடுக்காத போராட்டத்தை நடத்த வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்ட நலன்கள். பாட்டாளி வர்க்க புரட்சியின் வெற்றி ஆகியவற்றிற்குத் தொழிலாளி வர்க்கத்தின் ஒரே ஒரு வெகுஜன அரசியல் கட்சி ஒவ்வொரு நாட்டிலும் ஏற்பட வேண்டியது அவசியம் தவிர்க்க முடியாதது என்பதைப் பற்றி உறுதியான கருத்தைக் கொண்டு இந்தக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இந்த ஒற்றுமையைக் கொண்டு வருவதற்கு முன்கையெடுப்பதற்கான கடமையை கம்யூனிஸ்டுக் கட்சிகளுடன் சமூக-ஜனநாயகக் கட்சிகளும் அல்லது தனித்தனி ஸ்தாபனங்களும் ஒன்றுபடுவதற்குத் தொழிலாளர்களிடம் வளர்ந்து வரும் விருப்பத்தைச் சார்ந்து இந்த ஒற்றுமையைக் கொண்டு வருவதற்கு முன்கையெடுப்பதற்கான கடமையை முன் வைத்திருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் அத்தகைய ஒற்றுமை சில குறிப்பிட்ட சூழ்நிலைமைகளில்தான் ஏற்பட முடியும் என்பதைத் தவறாமல் தொழிலாளர்களுக்கு விளக்கிக் கூறவேண்டும். அந்தச் சூழ்நிலைமைகள் என்ன? பூர்ஷுவா வர்க்கத்திடமிருந்து முழுமையான சுதந்திரம் பெற்ற சூழ்நிலைமை, சமூக ஜனநாயகத்திற்கும் பூர்ஷுவா வர்க்கத்திடமிருந்தும் எந்தவிதமான கூட்டும் இல்லாமல் முழுமையாகத் தொடர்பு அறுத்துக் கொண்ட நிலைமை பாட்டாளி வர்க்கத்திடம் செயலொற்றுமை முதலில் கொண்டு வந்துள்ள சூழ்நிலைமையில் பூர்ஷுவா வர்க்கத்தின் ஆட்சியைப் புரட்சிகரமான முறையில் தூக்கியெறிய வேண்டிய அவசியமும், சோவியத்துக்களின் வடிவத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டு அதை அங்கீகரிக்கும் சூழ்நிலை.. ஏகாதிபத்திய யுத்தத்தில் தனது சொந்த நாட்டு பூர்ஷுவா வர்க்கத்திற்கு ஆதரவு கொடுப்பதை நிராகரிக்கும் நிலை ஏற்பட வேண்டும். கட்சியும் ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். செயலொற்றுமையையும் கருத்தொற்றுமையையும் உத்திரவாதப்படுத்தும். ரஷ்ய போல்ஷிவிக்கு அனுபவங்களின் மூலம் சோதித்து எடுக்கப்பட்ட நிலையும் அதுதான்அதுதான்

 அதே சமயத்தில் "இடது"சாரி சமூக - ஜனநாயகவாய்ச்சவடால் வீரர்கள் சமூக-ஜனநாயகத் தொழிலாளர்களிடம்  பிரமைகள் நீங்கியுள்ளதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தனியான சோஷலிஸ்டுக் கட்சிகள் அமைத்துக் கொள்ளவும் ஒரு புதிய "அகிலத்தை" அமைக்கவும் அதன்மூலம் கம்யூனிஸ்டு இயக்கத்திற்கு எதிராகத் திசை திருப்பிவிடவும் அதன் மூலம் தொழிலாளி வர்க்கத்திடமுள்ள பிளவை மேலும் அகலப்படுத்தவும் செய்யப்படும் முயற்சிகளை எதிர்த்து உறுதியாக நின்று செயல்பட வேண்டியது அவசியமாகும்.செயலொற்றுமை மிகவும் அவசர அவசியமான ஒரு தேவையென்பதையும் அதுதான் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஒற்றுமையைக் கொண்டு வருவதற்கு நிச்சயமான வழி என்பதையும் கருத்தில் கொண்டு கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஏழாவது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அகிலத்தின் எல்லாப் பிரிவுகளின் பேராலும் பிரகடனம் செய்வது என்னவென்றால் முதலாளித்துவத்தின் தாக்குதலை எதிர்த்தும் பாஸிஸத்தை எதிர்த்தும் ஏகாதிபத்திய யுத்த பயமுறுத்தலை எதிர்த்தும் தொழிலாளி வர்க்கத்தின் செயலொற்றுமையை ஸ்தாபிப்பதற்காக இரண்டாவது அகிலத்தைச் சேர்ந்த இணையான கட்சிகளுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை துவங்குவதற்குத் தயாராகும். அதேபோல் கம்யூனிஸ்ட் அகிலம்  இதே நோக்கத்திற்காக இரண்டாவது அகிலத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கும் தயாராக இருக்கிறது என்பதையும் பிரகடனம் செய்கிறது..

ஐக்கிய முன்னணி தந்திரம் என்ற நூலில் இருந்து, 
தலைப்பு 4 பக்கம் 230 முதல் 235,
தலைப்பு 6 பக்கம் 236 முதல் 240 வரை.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.