தோழர்களே!

“நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு புதிய ஜனநாயகப் புரட்சியை சாதிப்பது தான் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சியம் என்றாலும், நேபாள மக்கள் ஜனநாயகப் புரட்சி தற்போது ஒரு புதிய இடைக் கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது நேபாளத்தில் மன்னர் ஆட்சியை தூக்கி எறிந்து ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவுவது என்பதை அந்த இடத்தில் உடனடி நோக்கமாகக் கொண்டு போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த செயல் தந்திரத்தை வகுத்து மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது” என்று 2008 -ஆம் ஆண்டு புதிய ஜனநாயகம் இதழில் எழுதி இருந்தோம்.

குறிப்பிட்ட போர்த்தந்திர காலகட்டத்தில் பல்வேறு இடைக் கட்டங்கள் தோன்றும். அந்த இடைக் கட்டங்களை சரியாக கணித்து அதற்கு பொருத்தமான செயல்தந்திரம் வகுத்து கொள்ள வேண்டும். அதன் ஒளியில் முழக்கங்களை தீர்மானித்து மக்களை அரசியல் படுத்துவதும், மக்களைத் திரட்டுவதும் தான் அந்த இடைக் கட்டத்தை கடந்து செல்வதற்கான சரியான மார்க்சிய - லெனினிய அரசியல் வழியாக இருக்கிறது.

குறிப்பிட்ட இடைக்கட்டம் என்பது சில பத்தாண்டுகளுக்கு அப்படியே நீடிக்கும் என்பது அரசியல் தற்குறிகளின் பார்வையாகும். இடைக்கட்டம் என்பதே திடீரென்று தோன்றுவதாகும். அதனை சரியாக அவதானிக்கும் அரசியல் சித்தாந்த தலைமை மட்டுமே புரட்சியை முன்னெடுத்து செல்வதற்கு பொருத்தமான தலைமையாக இருக்கமுடியும். மாறாக அதை அவதானிப்பதையே பெரிய வேலையாக பீற்றிக்கொள்வதும், தன்னால் முடியாத போது நேர்மையாக ஏற்றுக்கொள்ள துணிச்சல் இல்லாத கோழைத்தனமும் தான் மொத்த அமைப்பையும் சிக்கலுக்கு உள்ளாகும். 

புரட்சிக்கு தலைமை தாங்கும் விஞ்ஞான கலையை மார்க்சிய - லெனினிய ஒளியில் புரிந்துக் கொள்ள வேண்டும். இவற்றைப் புரிந்து கொள்வதற்கு 21 ஆம் நூற்றாண்டில் எழுந்த மகத்தான மக்கள் எழுச்சியான, நேபாள மன்னருக்கு எதிரான மக்கள் புரட்சி பற்றி. புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் ஆகிய எமது ஏடுகளில் வந்த கட்டுரைகளின் தொகுப்பை வாசகர்களுக்கு அளிக்கிறோம். இதன்மூலம் கார்ப்பரேட் - காவி பாசிசம் என்ற இந்த இடைக் கட்டத்தை எதிர்கொள்வதற்கு பொருத்தமான செயல்பாட்டை வந்தடைய முடியும் என்று கருதுகிறோம்.


தோழமையுடன்,

வினை செய்,

ஆசிரியர் குழு.                                                                                                                                                                                                                                           

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.