வினை செய் வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு.

 

அன்பார்ந்த தோழர்களே! 

இன்றைய அரசியல் சூழலில் முகநூல் பக்கம் தொடர்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்க வேண்டியுள்ளது என்பதை நாங்கள் உணர்கிறோம்.ஏகாதிபத்திய நிதி மூலதனம் உருவாக்குகின்ற நுகர்வு கலாச்சாரம், பண்பாட்டு ரீதியாக, அரசியல் விழுமியங்கள் அற்ற தக்கை மனிதர்களை உருவாக்குகிறது.

அரசியல், சித்தாந்தம், லட்சியம், அர்பணிப்பு, தியாகம் போன்ற சொல்லாடல்களில் பின்னே உள்ள வலிமையான பொருட்களுக்கு உண்மையான மதிப்பு சமூகத்தில் குறைந்து கொண்டே போகிறது. ஏன் என்றால் இந்த சொல்லாடல்களை உபயோகிக்கின்ற மனிதர்கள் திடீரென்று தலைகுப்புற கவிழ்வதும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளாமல் நழுவுவது என்ற காரணங்களினால் சமூகத்தில் காத்திரமான விஷயங்களை விவாதிப்பதும் அதற்கு நேர்மையாக வாழ்நாள் முழுவதும் இருப்பது சாத்தியமற்றது, உடனே சாத்தியம் என்னவோ அதை பற்றி பேசலாம் போன்ற தற்குறித்தனங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்திய அரசியல் சூழலில் பாசிசம், கார்ப்பரேட் காவிப் பாசிசமாக வடிவெடுத்து ஏறித் தாக்கிவரும் இந்த சூழலில் அரசியல் சித்தாந்தம் குறிப்பாக சோசலிசம், கம்யூனிசம் போதிக்கும் மார்க்சிய-லெனினிய சித்தாந்தங்களை ஆழமாகவும், திருத்தம் இல்லாமல் சரியாகவும், கற்றுக் கொள்வதும், பிரயோகிப்பதும் அவசியம் ஆகிறது. 

எனவே வினை செய் முகநூல் பக்கம் சித்தாந்தத்தை விவாதிக்கின்ற களமாக தங்கள் முன் நடைபோட உள்ளது. வழக்கம்போல் எமது புதிய முயற்சியை ஆதரிக்குமாறு தோழமையுடன் கோரூகிறோம்.

எமது புரட்சிகர அமைப்பின் இணையதளமான வினவு இணையதளத்தை மார்க்சிய- லெனினியத்தில் நம்பிக்கையில்லாத, அனுபவ வாதம் பேசுகின்ற, வறட்டு வாதிகள் சிலர் கைப்பற்றி நடத்தி வருவதால் காலத்திற்கும் வினவிக் கொண்டே இருப்பது பயனற்றது. மாறாக வினை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், அதாவது நடைமுறையில் இறங்கி செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற வகையில் வினை செய் என்று எமது முகநூல் பக்கத்திற்கும் இணையத்திற்கும் பெயர் சூட்டி உள்ளோம் என்பதை மீண்டும் தங்களுக்கு நினைவு படுத்துகிறோம். உங்கள் ஆதரவை பிறருக்கு பகிர்வதன் மூலமும், விமர்சனங்களை எமக்கு தெரிவிப்பதன் மூலமும் விரிவுபடுத்துவீர்கள் என்று நம்புகிறோம்.


தோழமையுடன்,

ஆசிரியர் குழு,

வினை செய்.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.