அன்பார்ந்த வாசக தோழர்களே!

பேக் ஐடியில் உலவும் ஹேக்கர்கள், முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் ஊடாடும் கிரிமினல் கூட்டத்தை அடிக்கடி எதிர் கொண்டு இருக்கிறோம். பிரபலமான நபர்கள், அரசின் உயர் பதவியில் இருப்பவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் போன்றவர்களின் மெயிலையோ அல்லது வாட்ஸ்அப், முகநூல் பக்கங்களையோ ஹேக் செய்து போலியான பதிவுகளை போடுவதும், அல்லது முழுவதும் முடக்குவதும் உலகம் எங்கும் நடந்து கொண்டிருக்கிறது. 

எமது வினைசெய் முகநூல் மற்றும் பிளாக்ஸ்பாட் இரண்டையும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருட்டுக் கும்பல் ஒன்று போலி கணக்கில் உள்ளே நுழைந்து முடக்கியுள்ளனர். ஆரம்பத்தில் இது ஏதோ தொழில்நுட்பக் கோளாறு என்று தான் இருந்தோம். ஆனால் ஒரு வாரத்திற்கும் மேலாக முகநூல் முடக்கப்பட்ட பிறகு தான் தொழில்நுட்ப வல்லுனர்களின் மூலம் நடந்த விவரத்தை அறிந்து கொண்டோம். சொந்தக் கருத்துகள் இல்லாமல் பிறரது கருத்துகள் மீது குறுக்கு வழியில் தாக்குதல் நடத்தும் திருட்டு கும்பல் சீப்பை எடுத்து வைத்து விட்டால் திருமணமே நின்று விடும் என்ற படு பிற்போக்கான சிந்தனையுடன் செயல்படுகின்றனர்.

 அதிநவீன தொழில்நுட்பத்துடன், செயற்கை நுண்ணறிவு திறனுடன் உலகைச் சூறையாடுவதற்கு கிளம்பியுள்ள ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கு பாட்டாளி வர்க்கத்தை தயார்படுத்தி வரும் வினைசெய் ஆசிரியர் குழு இது போன்ற அற்பத்தனமான சில்லறை விஷயங்களை கண்டு மிரண்டு விடாது அல்லது பின்வாங்கி விடாது. அதுமட்டுமின்றி இந்த இழி செயலில் இறங்கிய திருட்டு கும்பலையும் கண்டுபிடித்து உள்ளோம். சட்ட ரீதியான நடவடிக்கைக்கு தயாராகி வருகிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
தோழமையுடன், 

ஆசிரியர் குழு, 

வினை செய்.

Comments

Popular posts from this blog

எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்_11.

அதிகாரத்துவத்துக்கு எதிராக போராடுவோம்! பாகம் - 2.