உளவுத் துறையாலும், உட்கட்சி பூசலாலும் சிதைக்கப்படும் கம்யூனிஸ்ட் கட்சி!

 

“ஒரு மனிதன் கம்யூனிஸ்ட்டாக மாறுவது ஒன்றும் அற்புதம் இல்லை. ஆனால் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்டாக நீடித்து வாழ்வதுதான் அற்புதமான விஷயம்” என்று முன்வைத்தார் தோழர் மாசேதுங்.

பல்வேறு வர்க்கங்களில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு வரும் ஒவ்வொரு தோழரும் தனது பழைய வர்க்க வாழ்க்கையை மாற்றிக் கொண்டு பாட்டாளி வர்க்கமாக அல்லது அந்த நாட்டின் ஆகக்கேடாக ஒடுக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்நிலைக்கு தன்னை தாழ்த்திக் கொள்வது, வரக்க இறக்கம் செய்து கொள்வது ஆகியவற்றின் மூலம் மட்டுமே சிறந்த கம்யூனிஸ்டாக உருவாக முடியும்.

அவ்வாறு ஒரு தோழரை உருவாக்குவதில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைவர்களின் தொடர்ச்சியான துரோகத்தினாலும், கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு செயல்படுகின்ற அணிகளின் தியாகத்தினாலும் நிலைத்து நிற்கிறது. ஆனாலும் கூட அவ்வப்போது பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை தன்னை ஒரு மத பீடமாக கருதிக்கொண்டு ஜனநாயக மத்தியத்துவத்திற்கு கட்டுப்படாமல் தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளை முன்னிறுத்தி, நாயக பிம்பங்களை உருவாக்குகின்றனர்.

தனது அறிவாற்றல் மற்றும் தனிப்பட்ட முறையிலான சில பண்புகளை முன்வைத்து விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியிலிருந்து முன் வருகின்ற இளம் கம்யூனிஸ்டுகளை உற்சாகத்துடன் வளர்த்து முன்னேற்றுவதற்கு பதிலாக அவர்களின் வேலை முறைகளில் குறுக்கு பதிலடி நடவடிக்கைகளை போல பல்வேறு தாக்குதல்களை முன்வைத்து வளர்ச்சியை சிதைக்கின்றனர்.

மறுபுறம் அர்ப்பணிப்பு, தியாகம் போன்ற அம்சங்களில் திருமணம், குடும்பத்திலிருந்து வெளியேறுவது, கல்வியை தொடராமல் இடை நிறுத்தம் செய்து கொள்வது அல்லது வேலையை உதறி எறிந்துவிட்டு புரட்சிகர பணிகளில் ஈடுபடுவது இதன் மூலம் பிறரை விட தன்னை சற்று உயர்வாக கருதிக் கொண்டு செயல்படுகின்றனர்.

இவர்களின் வேலைப்பாணியை கண்டு மதிப்பு கொடுக்கின்ற மக்களின் முன்பு சிறந்த மனிதர்களை போல தோற்றத்தை உருவாக்குகின்ற குள்ள மனிதர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

இத்தகைய தோழர்களே கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய ஊழியர்களாக அல்லது முன்னணி ஊழியர்களாக உருவெடுப்பதால் அவர்களின் வேலை பாணியை பொருத்துதான் கட்சியின் வளர்ச்சி, மக்களுடன் நெருக்கம் ஆகியவை உருவாகின்றன.

பொதுவாக ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை வீழ்த்துவது, சோஷலிசம், கம்யூனிசம் இறுதி இலக்கு எனக் கூறிக்கொண்டு தமக்குள் பல்வேறு பிரிவுகளாக பிளவுபடுவதற்கு சித்தாந்தரீதியான வேறுபாடுதான் காரணம் எனக் கூறிக்கொண்டாலும் தன்னை முன்னிறுத்தி பரிசீலிக்கின்ற குட்டி முதலாளித்துவ அகம்பாவம், மேட்டிமை சிந்தனை ஆகியவைதான் பல்வேறு குழுக்களாக நீடிப்பதற்கு அடிப்படையாக உள்ளன.

இவ்வாறு செயல்படுகின்ற போது சொந்த வாழ்க்கையை கவனித்துக்கொண்டே கம்யூனிச இயக்க பணிகளில் ஈடுபடுவது என்பது மிகவும் சிக்கலான போராட்டமான வாழ்க்கை முறையாகும்.

தன்னை முன்னிறுத்தி செயல்படுகின்ற சிலரால் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட முடியாத போது வேறு ஏதாவது ஒரு காரணங்களை கவிதை பாணியில் வெளியிட்டு விட்டு கம்யூனிச இயக்கத்தை விட்டு வெளியேறுகின்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் உள்விவகாரங்களை புரிந்துகொள்ளமுடியாத உளவுத் துறையின் பணி இங்கேதான் துவங்குகிறது. அவ்வாறு வெளியேறியவர்களை தேடிச் சென்று மீண்டும் அதே அமைப்பில் வேலை செய்யுங்கள் அங்கு என்ன நடக்கிறது என்பதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். இதற்கு உரிய ஊதியத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம் என மூளைச் சலவை செய்கின்றனர்.

ஆந்திராவின் மக்கள் யுத்தக் குழு அமைப்பு தலைமைக் குழு வரை உளவுத்துறையினர் ஊடுருவி மத்திய கமிட்டி உறுப்பினர்களை இனம் கண்டு அழித்தொழித்த வரலாறு நமக்கு கண்முன்னே புலப்படுத்துகிறது.

தமிழகத்தில் மத்திய மாவட்டங்களில் ஏற்கனவே வேலை செய்து பின்வாங்கிய சிலரை உளவுத்துறை அணுகி அமைப்பில் நடக்கின்ற விவகாரங்களை அவ்வப்போது தெரிவிப்பதற்கு உரிய ஊதியம் வழங்குவதாக முயற்சி மேற்கொண்டுள்ளனர் என்பதை அந்தத் தோழர்கள் வெளிப்படுத்தியதால் நமக்கு தெரிய வருகிறது.

அதுமட்டுமின்றி குருதிப்புனல் திரைப்பட பாணியில் பல்வேறு அமைப்புகளுக்குள் ஊழியர்களாக ஊடுருவி செயல்படுவதைப் போன்றுதான் தற்போது கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரில் சிலர் நடத்தி வரும் குழுச் சண்டைகள் மற்றும் குழுவிற்கு வெளியில் அவர்கள் போடுகின்ற சண்டைகள் நமக்கு புலப்படுத்துகின்றன.

ஒரு அமைப்பில் இருந்து வெளியேறுகின்றவர்களைப் பற்றி அமைப்பிற்குள் நடந்த பல்வேறு நம்பகமான பரிசீலனைகளை, அவர் வெளியேறிய பிறகு அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி இழிவு படுத்துகின்ற செயலை கம்யூனிச போர்வையில் பலர் செய்து வருகின்றனர்.

•சீராளன்

தொடரும்...


Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.