சுயவிமர்சனம் - திருத்தப்பட்ட பதிவு!

 

அன்பார்ந்த தோழர்களே!

வினை செய் வலைப்பக்கம் மற்றும் முகநூல் பக்கத்தில் தோழர் கணேசன் பற்றி இளஞ்செழியன் என்பவர் எழுதியிருந்த இரங்கற்பாவில் அவரது இறுதி காலத்தில் சாதிய கண்ணோட்டத்துடன் செயல்பட்டதாக கருத்தை பதிவு செய்திருந்தார்.

தோழர் கணேசன் செயல்பட்ட அமைப்பு வாழ்க்கை முறையின் மீது அவதூறு செய்கின்ற வகையில் சாதிய சிந்தனை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது பரிசீலனை இன்றி வெளியிட்டதை தவறு என சுயவிமர்சனமாக உணர்கிறோம்.

இத்தகைய கண்ணோட்டத்தில் இரங்கற்பா எழுதிய இளஞ்செழியன் என்ற தோழருக்கும் இது பற்றி விமர்சனமாக சுட்டிக் காட்டி உள்ளோம்.

அவரது தனிப்பட்ட புரிதல்களின் அடிப்படையில் தான் எழுதிய கவிதை வரிகளின் தவறுதலாக உண்மைக்கு மாறான அர்த்தத்தை கொடுக்கும் வகையில் எழுதிய தனது தவறை உணர்ந்து மீண்டும் அவர் எழுதிக் கொடுத்த வரிகளை இங்கே பதிவிடுகிறோம்.

ஆசிரியர் குழு,

வினை செய்.

தோழனே! கணேசனாய் களமாடிய அன்பழகனே!

இப்படி ஒரு இரங்கல் தங்களுக்கு தெரிவிக்கும் அவல நிலை ஏற்படும் என இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை ஒருபோதும் எண்ணியதில்லை.

கல்லூரியில் வெளிவந்த நாள் முதல் கரம் பிடித்து எமை அரவணைத்து உலகை புரிந்து கொள்ளும் மார்க்சிய லெனினிய பார்வையை உருவாக்கிக் கொடுத்து சிந்தனையால் உயர்ந்த நிலைக்கு எம்மை மறு வார்ப்பு செய்தாய்!

இந்திய சமூக அமைப்பின் கோரமுகத்தை இதுவரை யாரும் இத்தனை எளிமையாய் எல்லோருக்கும் புரியும் வடிவத்தில்    பிட்டுக் காட்டியதில்லை!

மார்க்ஸ் முன்வைத்த ஆசிய உற்பத்தி முறை எனும் கிழக்கத்திய கொடுங்கோன்மை இன்றுவரை நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு அடிப்படை என்பதை ஆழமாய் பல கோணங்களில் விளக்கிப் புரிய வைத்தாய்!

அந்தோ நின் இறுதி நாட்களில் ஆசிய உற்பத்தி முறை காத்து நிற்கும் சாதிய கண்ணோட்டத்திற்கு ஆட்பட்ட சிலர்              அமைப்பு பிளவிற்கு வித்திட்டதை கண்டிக்காததால் நீர் சுமந்து நின்ற சாதி, மதமற்ற அமைப்பில் சாதியத்தின் சுவடுகள் படிய நேர்ந்தது!

வகைவகையாய் புனைக்கதைகளை உன் மூளையில் இட்டு நிரப்பி              தன்னுடன் உம்மை அணைத்துக் கொண்டவர்கள், தனது எதிர்பார்ப்புகள் நிறைவேறிய பிறகு                                            உன் முதுகிலும் குத்தினர்!                       உன் முகத்தையும் சிதைத்தனர்!

மக்கள் திரள்வழி என்ற சீனத்து செஞ்சுடர் மாசேதுங் முன்வைத்த அரசியல் திசை வழியை பாங்காய் அனைவரும் பயன்பெறும் வகையில் செதுக்கிக் கொடுத்து பலரையும் உருவாக்கிய உன் இறுதி நாட்களில் அரசியல் மாண்பு வீழ்ந்தது ஏன்?

விமர்சனம், சுயவிமர்சனம் என்ற உயர்ந்த மார்க்சியக் கோட்பாட்டை புறந்தள்ளிய வயது முதிர்வு மற்றும் அதிகார திமிர்த் தனங்களின் நச்சுக்கிருமி ஆழமாய் உன் அகத்தில் பதிந்து நிலை தடுமாறி வீழ்ந்தாய்!

வன்மதியாளர்களின் சாட்சியங்களைக் கொண்டு உன்னை மதித்தவர்களை காலில் போட்டு மிதித்தாய்!

பாசிச இருள் நாட்டை சூழ்ந்து நிற்கும் அபாயக் கட்டத்தில்,,                                  அதை அங்குலம் அங்குலமாய் புரிந்துகொண்டு எதிர்த்து நின்று போராடிய இயக்கத்தை                    துண்டுத் துண்டாய் உடைக்கும் கெடுமதியாளர்களின் சிந்தனையுடன் ஒட்டிக்கொண்டு பிளவை துரிதப்படுத்தி அதன்மூலம் நீ முன்வைத்த கருத்துக்களுக்கே எதிரியாய் முடிந்தாய்!



உ‌ன் வாழ்நாளில் 80 சதவீத நாட்களில் கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் என்பதை முன்னிறுத்தி போராடிய உன் இறுதி நாட்கள்                                                அராஜகம்,                                  அதிகாரவெறி என சிதிலமடைந்தது.

தமிழகத்தின் மூலை முடுக்குகளில், கிராமங்களில் நக்சல்பரி என்ற ஒற்றை வாக்கியத்தின்                             அற்புதத்தை அனைவர் மனங்களிலும் விதைத்த உன் சிறப்பு இறுதி நாட்களில் இந்த பாட்டாளி வர்க்க விரோத பண்புகளால் தரைமட்டமானது.

என்றாவது உணர்ந்து, இளம் வயதின் சிந்தனைக்கும், உயர் பண்புகளுக்கும் திரும்பி விடுவாய் என ஏக்கத்துடன் காத்திருந்த எமக்கு தூற்றப்பட்ட உன் வாழ்வு கற்றுக் கொடுக்கிறது நேர்மறையிலும் எதிர்மறையிலும்.

இளஞ்செழியன்

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.