பெல்லா சியாவோ இத்தாலியில் பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் முன்னணியில் செயல்பட்ட பல்வேறு பிரிவினர்களின் குரலாக ஒலித்தது பெல்லா சியாவோ என்ற நாட்டுப்புறப் பாடல்.

குறிப்பாக 1942 க்கு 1945க்கும் இடையில் இத்தாலியை ஆக்கிரமித்த நாஜிச கட்சிக்கு எதிராக போராடிய பாசிச எதிர்ப்பு போராளிகள் பயன்படுத்திய விடுதலை முழக்கமாகவும் பாடலாகவும் இத்தாலியின் வீதி எங்கிலும் எதிரொலித்தது பெல்லா சியாவோ!

இன்று உலகமெங்கிலும் பாசிசத்தை எதிர்த்துப் போராடுகின்ற பல்வேறு நாடுகளில் இந்த மெட்டில் அமைந்த பாடல் எதிரிகளை எதிர்த்து தெறிக்கிறது.

பாசிசத்தை எதிர்த்து போராடும்போது அந்த நாட்டின் வரலாற்று புகழ் முதல் முதலாக பாரம்பரியத்தின் சொந்தக்காரர்களாக உள்ள கலை இலக்கியம் பண்பாடு பாசிச எதிர்ப்பு போராளிகளின் மரபு அனைத்தையும் பயன்படுத்த வேண்டும்.

இந்த அடிப்படையில் செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த தினத்தில் மக்கள் அதிகாரம் மனுதர்ம, வேத - ஆகம குப்பைகளை எரிக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பு என்று பேசும்போதோ இந்தியாவில் பார்ப்பன பாசிசம் காவி பாசிசம் என்று பேசும்போது பெரியாரின் பங்களிப்பை மறுக்கின்ற யாராலும் உண்மையில் பாசிசத்தை வீழ்த்த ஒரு அடி கூட முன்னேற முடியாது.

தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு மரபை நயவஞ்சகமாகவும், சந்தர்ப்பவாதமாகவும் பயன்படுத்தும் போலி புரட்சியாளர்கள் மத்தியில் கம்யூனிசத்தை வரலாற்றுப் பொருள் முதல்வாத கண்ணோட்டத்தில் புரிந்து கொண்ட மக்கள் அதிகாரம் பெரியார் பிறந்த தினத்தை, போராட்ட தினமாக கழுத்தை நெரிக்கும் காவி பாசிசத்திற்கு எதிரான அறைகூவலாக முன்னெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலும் பெல்லா சியாவோ க்களை தேடி கண்டுபிடிப்போம் பாசிச எதிர்ப்பு போராட்ட களத்தில் ஆயுதமாக ஏந்தி பறந்து பட்ட மக்களை திரட்டுவோம்.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.