புதிய வகைப்பட்ட ஆர்எஸ்எஸ் பாசிசத்தைப் புரிந்து கொள்வோம்!

புதிய வகைப்பட்ட ஆர்எஸ்எஸ் பாசிசத்தைப் புரிந்து கொள்வோம்! பாகம் - 2 

- பேராசிரியர் பி ஜே ஜேம்ஸ்

நன்றி கீற்று

புதிய பாசிசத்தினை எப்படி அணுகுவது 



இந்த நெருக்கடியான கட்டத்தில், புதிய பாசிசத்தின் பருண்மையான புரிதல் (அதாவது, பாசிசத்துடன் தொடர்புடைய பழைய விதிமுறைகளும், நடைமுறைகள் பொருத்தமற்றதாகிவிட்ட புதிய தாராளவாதத்தின் கீழ் பாசிசம்) பாசிச எதிர்ப்பு இயக்கத்தை கட்டி அமைப்பதற்கும் பாசிசத்தை தோற்கடிப்பதற்கும் இன்றியமையாதது. சந்தேகத்திற்கு இடமின்றி, மிக மிகப் பிற்போக்குத்தனமான கார்ப்பரேட் பெருநிறுவனங்கள்-நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்துடன் பாசிசத்தின் பிரிக்க முடியாத ஒருங்கிணைப்பு எனபது அதன் உலகளாவிய தன்மையாகும். எவ்வாறாயினும், பாசிசத்தின் தோற்றத்திற்கு அனைத்து சூழ்நிலைகளிலும் ஒரு நிலையான வடிவம் அல்லது வழிமுறை இருப்பதாகக் கருதுவது பிழையானது. மேலும் இது பாசிச எதிர்ப்பு போராட்டங்களை கட்டியெழுப்புவதற்கும் தடையாக இருக்கும். எடுத்துகாட்டாக, நிதி மூலதனத்தில் பாசிசத்தை அதன் உறுதியான அடித்தளங்கள் தொடர்பாக வரையறுத்த 7- ஆவது அகிலத்தின் (Comintern) காங்கிரஸ் (1935), காலனித்துவ, அரை-காலனித்துவ (அரை காலனி என்பதை பாதி காலனி எனப் புரிந்து கொள்ளக் கூடாது – மொழி பெயர்ப்பாளர்) நாடுகளில் பாசிசத்தின் வளர்ச்சியின் வெவ்வேறு போக்குகளை அடிக்கோடிட்டுக் காட்டியது. மேலும் இந்த நாடுகளில், சர்வதேச அகிலத்தின் படி, ‘ஜெர்மனி, இத்தாலி, இன்ன பிற முதலாளித்துவ நாடுகளில் நாம் கண்டு மனதில் பழக்கப்படுத்தி கொண்டிருக்கின்ற பாசிசத்தின் வகை பற்றி எந்த கேள்வியும் இருக்க முடியாது’ அதாவது, நாடுகளின் குறிப்பிட்ட அரசியல், பொருளாதார, வரலாற்று நிலைமைகளைப் பொறுத்து, பாசிசம் வெவ்வேறு வடிவங்களை எடுக்கலாம்.

இன்று இந்த முக்கியமான கேள்விக்கு ஒரு பெரும் அரசியல் (macro) பரிமாணம் உள்ளது. நாட்டின் அனைத்து முற்போக்கு-ஜனநாயகப் பிரிவுகள், தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள், ஒடுக்கப்பட்ட மக்கள், அறிவுஜீவிகளுக்கு எதிராக கார்ப்பரேட்-நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான, பயங்கரவாதக் கூறுகளைக் கொண்ட அரசாங்கம் என்பது பாசிசம் என்பதில் சந்தேகமில்லை. எவ்வாறாயினும், 20 - ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்களுக்கு இடையிலான ஆண்டுகளில் பாரம்பரிய (Classical) பாசிசம் தோன்றியபோது, நிதி மூலதனம் அல்லது ஏகாதிபத்தியம் அதன் காலனித்துவ கட்டத்தில் இருந்தது. ஆனால், இன்று ஏகாதிபத்தியம் அதன் புதிய காலனித்துவ கட்டத்தில் உள்ளது, மேலும் மூலதன குவிப்பினுடைய நெருக்கடியின் காரணமாக, அதன் சமூக நல முகமூடியைக் கைவிட்டு, நிதி மூலதனம் புதிய தாராளவாதத்தை அது தழுவியுள்ளது. அதன் சாராம்சம், கார்ப்பரேட் மூலதனத்தின் உலகமயமாக்கல் அல்லது மூலதனத்தின் சர்வதேசமயமாக்கல் வரம்பற்ற, கட்டுப்படுத்த முடியதாக, நாடுகளின் எல்லைகளைத் தாண்டியதாக தன்னை வெளிப்படுத்தி கொண்டிருக்கின்றது. 21 - ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஏகாதிபத்திய நெருக்கடியின் தீவிரத்துடன், குறிப்பாக 2008 ‘துணை குற்ற நெருக்கடி’ (sub-crime crisis) முதல், டிஜிட்டல் மயமாக்கல் போன்ற எல்லைகளே இல்லாத தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்களைப் பயன்படுத்தி, ஏகாதிபத்தியம் தனது சுமையை மேலும் மேலும் மேலும் உலக மக்களின் தோள்களுக்கு மாற்றுவதில் ஈடுபட்டுள்ளது. மக்கள். இந்தச் சூழலில், பிற்போக்குத்தனம், இனவாதம், பேரினவாதம், பழமைமீள் உருவாக்கம்,தேசிய இனவெறி, மத அடிப்படைவாதம், வெறுப்பு, ஜோசியம்-மூடநம்பிக்கை போன்ற இருள் வாதம் போன்ற சித்தாந்தங்களை தனது அரசியல் அடிப்படையாக திறம்பட பயன்படுத்தி உலக அளவில் கார்ப்பரேட் பெருநிறுவன மூலதனத்தின் மிகக் கொடுங்கோன்மையை செயல்படுத்த புதிய பாசிசம் தீவிரப்படுத்தப்படுகிறது.

எனவே, இன்று கார்ப்பரேட் மூலதன குவியலின் பின்னுள்ள தர்க்கத்தின் அடிப்படையில் புதிய தாராளவாத பாசிசம் அல்லது புதிய பாசிசத்தைப் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டிய தேவை இருக்கிறது. ஒருபுறம், உலகமயமாக்கல் ஒரு புதிய சர்வதேச தொழிலாளர் பிரிவினையை மிகைப்படுத்தி திணிப்பதன் மூலம் முந்தைய தேசங்களை மையமாகக் கொண்ட உற்பத்தி செயல்முறையை மறுகட்டமைக்க ஏகாதிபத்தியத்திற்கு உதவியது. இதன் மூலம் உழைக்கும் மக்கள் மீது உலகளாவிய மிக மிக அதிகப்படியான சுரண்டலைக் கட்டவிழ்த்து விட்டு, அதன் மூலம் தனது மூலதன குவிப்பினால் வந்த நெருக்கடியை தற்காலிகமாக சமாளிக்கிறது. மறுபுறம், இடதுசாரிகளின் கோட்பாட்டு கருத்தியல் பின்னடைவைச் சாதகமாக்கிக் கொண்டு, பல்வேறு நாடுகளின் உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களிடையே நிலவுகின்ற பன்முகத்தன்மைகளைப் பயன்படுத்துவதன் மூலமும், ‘அடையாள அரசியல்’, ‘பன்முக பண்பாடு’ இன்ன பிற பின்நவீனத்துவ / மார்க்சிசத்திற்குப் பிந்தைய புதிய தாராளவாத சித்தாந்தங்களை திறம்பட பயன்படுத்துவதன் மூலமும், நிதி மூலதனம் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுக்கு இடையே பிளவை உருவாக்கி, கார்ப்பரேட் பெருநிறுவனக் கொள்ளையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புகிறது. அதன் மூலமும் மூலதனத்திற்கு எதிரான எதிர்ப்பை ஒழுங்கமைத்து அமைப்பாக்கப்படுவதை தடுத்தும், அந்த எதிர்ப்பை துண்டாடுவதிலும் வெற்றி பெற்றுள்ளது.

எனவே, கார்ப்பரேட்-நிதி மூலதனத்தின் பிற்போக்கு சாரமானது, புதிய தாராளவாதத்தின் கீழ் மிகவும் பரவலானதாக, பயங்கரமான அழிவாகவும் மாறியுள்ளது. அந்த நேரத்தில் முதலாளித்துவ-ஏகாதிபத்திய நாடுகளுக்கு குறிப்பிட்டதாக இருந்த 'பாரம்பரியமான பாசிசத்தின்' காலகட்டத்தைப் போலன்றி, புதிய பாசிசம், அதாவது புதிய தாராளவாதத்தின் கீழ் பாசிசம் தேசங்களின் எல்லைகளைத் தாண்டி நாடு கடந்த பன்னாட்டு குணாதிசயங்களைக் கொண்டாதாக விளங்குகிறது. இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, ஐரோப்பாவின் நிதி மூலதன சுயநல கும்பலானது, தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தோர், அகதிகளுக்கு எதிராக ஓர் அகண்ட-ஐரோப்பிய புதிய பாசிச கூட்டணியை தொடங்கிய விதம் ஆகும்.

கார்ப்பரேட் சுரண்டல் கொள்ளையினால் எழும் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, வாழ்விடங்கள் இழப்புகள், சுற்றுச்சூழலின் சிதைவுகள், புதிய தாராளமயக் கொள்கைகளுக்கு மாற்றுக் கொள்கை இல்லாத 'சமூக ஜனநாயகவாதிகள்' உள்ளிட்ட பிரதான பாரம்பரியக் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கை இழப்பு ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட சமூக, பொருளாதார பாதுகாப்பின்மையின் வெகுஜன உளவியலைச் சாதகமாக்கிக் கொள்ள, இன்று எல்லா இடங்களிலும் புதிய பாசிஸ்டுகள் கூடுதலான அதிகபடியான நேரங்களை செலவழித்து வேலை செய்கின்றனர். நாடுகளின் குறிப்பான தன்மைகளைப் பயன்படுத்தி, பொதுவாக புதிய பாசிஸ்டுகள், மக்கள்தொகையில் 'ஒரே வகைப்பட்டவர்' பகுதி என்று அழைக்கப்படுவதை முட்டுக்கொடுத்து, பெரும்பாலும் மதம், பழங்குடி, மரபினம், தேசிய/இனம், மொழி சிறுபான்மையினரால் உருவாக்கப்பட்ட பன்முகத்தன்மை கொண்ட பிரிவுகளுக்கு எதிராகவும், புலம்பெயர்ந்தோர், அகதிகள், தலித்துகள், பழங்குடியினர், சமூகத்தின் பிற விளிம்புநிலை மக்கள், ஒடுக்கப்பட்ட பிரிவினர்களுக்கு எதிராக முட்டுக்கட்டை போடுகின்றனர். இவைகளின் மூலம் ஒரு பிரத்யேகமானதும், பெரும்பான்மையானதுமான கொள்கையை புதிய பாசிஸ்டுகள் பின்பற்றுகின்றனர்.

இந்த புதிய பாசிஸ்டுகளால் மேற்கொள்ளப்படும் இவை அனைத்தும் சுற்று அரசியலற்றமயமாக்கல், சமூக பொறியியல் ஆகியவை புதிய பாசிசத்தின் வளர்ச்சிக்கு ஒரு வளமான நிலத்தை வழங்குகின்றன. இதற்கு தனது சொந்த தனித்தன்மைகளுடன், இந்தியாவில் உருவாகி உள்ள ஆர்எஸ்எஸ் பாசிசம் (கார்ப்பரேட்-காவி பாசிசம்) இன்றைய புதிய பாசிசத்திற்கு குறிப்பிட்டதொரு எடுத்துக்காட்டாகும். கட்டுக்கடங்காத புதிய தாராளவாத - கார்ப்பரேட்மயமாக்கலினை தன்னை அடித்தளமாகக் கொண்ட இன்றைய இந்திய ஆட்சியானது, மூர்க்கத்தனமான ‘இந்து தேசியவாதம்’ அல்லது இந்துத்துவா என்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின்படி ஓர் இந்து புனிதராஜ்ய அரசை அல்லது இந்து கடும்கோன்மை அரசை நிறுவுவதில் ஈடுபட்டுள்ளது. இன்றைய சர்வதேச சூழ்நிலையின் பருண்மையான மதிப்பீடுகளின்படி, எல்லா இடங்களிலும் பெரும்பான்மை மதமானது நிதி மூலதனத்தால் புதிய பாசிசத்தின் (உதாரணமாக, அமெரிக்காவில் சுவிசேஷம், மேற்கு ஆசியாவில் அரசியல் இஸ்லாம், இந்தியாவில் இந்துத்துவம், இலங்கை – மியான்மரில் பௌத்தம்) கோட்பாட்டு அடிப்படையாக கமுக்கமாக பயன்படுத்துவதற்கு ஏற்றது என்பதைத் தெளிவாக்குகிறது.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.