மாமேதை லெனின் நினைவுதினம் (21 ஜனவரி1924)

லெனினியம் கற்போம்; லெனினிடம் கற்போம்

------------------------------------------------------------------

பூர்ஷ்வா ஜனநாயகம் உள்ள நாட்டில் உட்கட்சி ஜனநாயகம் எப்படி இருக்க வேண்டும் என லெனின் விளக்குகின்றார்...



“ஜனநாயகத்தின் இரண்டாவது பண்புக் கூறான தேர்தல் எனும் கோட்பாட்டு விஷயத்திலும் இதே நிலைமைதான். அரசியல் சுதந்திரம் உள்ளநாடுகளில் இந்நிலைமை நடப்புண்மையாக எடுத்துக் கொள்ளப் படுகின்றது. "கட்சியின் வேலைத்திட்டத்தின் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு கட்சிக்கு சாத்தியமான ஆதரவனைத்தும் கொடுப்பவர்களே கட்சியின் உறுப்பினர்கள் ஆவர்" என்கிறது ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி விதிகளின் முதல் பிரிவுக்கூறு. பார்வையாளர்களின் எதிரே தெரிகிற நாடகமேடை போல் அரசியல் அரங்கம் முழுவதும்மக்கள் முன்னே பகிரங்கமாக இருப்பதால், இப்படி ஏற்றுக் கொள்வதையோ ஏற்றுக் கொள்ளாததையோ, ஆதரவளிப்பதையயோ, எதிர்ப்பதையோ பத்திரிகைகள், பொதுக் கூட்டங்கள் வாயிலாக எல்லோரும் அறிவார்கள். அந்தந்தக் குறிப்பிட்ட  அரசியல் பிரமுகர் இந்தந்த வழியிலே துவங்கி, இத்தகைய பரிணாம வளர்ச்சியைக் கடந்து, நெருக்கடியான தருணத்தில் இத்தகைய முறையிலேநடந்து கொண்டார்; அவருக்கு இத்தகைய குணங்கள் உண்டு என்று எல்லோரும் அறிவார்கள்; எனவே, எல்லா விஷயங்களையும் தெரிந்துள்ள நிலையில் எல்லாக் கட்சி உறுப்பினர்களும் இந்த நபரைக் குறிப்பிட்ட கட்சிப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கவோ, தேர்ந்தெடுக்க மறுக்கவோமுடியும். அரசியல் அரங்கத்தில் ஒரு கட்சி நபரின் ஒவ்வொரு செயல் மீதும் செயல்படுத்தப்படும் பொதுக் கண்காணிப்பு (இச்சொல்லைஅதன் உண்மையான பொருளில் பயன்படுத்துகிறோம்) உயிரியலில் "தகுதி மிக்கவையேதப்பிப் பிழைக்கமுடியும்" என்று சொல்கிறார்களே, அதை உண்டாக்கித் தருகிறதானாக இயங்கும் பொறியமைவைத் தோற்றுவிக்கிறது. முழுமையான பகிரங்க விளம்பரம், தேர்தல், பொதுக் கண்காணிப்பு வாயிலாக நிகழும்"இயல்பான தேர்வு", ஒவ்வொரு அரசியல் பிரமுகரும்"தனக்குரிய" இடத்தில் இருப்பார் என்றும், தன்னுடைய அறிவாற்றலின் அளவிற்குச் சிறப்பாகப் பொருருந்துகிறவேலையைச் செய்து வருவார் என்றும், தன் தவறுகளின் பாதிப்புகளைத்தானே அனுபவிப்பார் என்றும், தவறுகளைக் கண்டுகொண்டு தவிர்ப்பதற்குத் தனக்குள்ள திறமையை உலகின் முன்னே நிரூபித்துக் கொள்வார் என்றும் உத்தரவாதமளிக்கிறது.”

-------------லெனின் - தேர்வு நூல்கள் - தொகுப்பு 1, பக்கம் 294 (என்ன செய்ய வேண்டும்)


நன்றி:

ப.கு. ராஜன்.

மார்க்சிய எழுத்தாளர் & செயல்பட்டாளர்.

Comments

Popular posts from this blog

எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்_11.

அதிகாரத்துவத்துக்கு எதிராக போராடுவோம்! பாகம் - 2.